நாம் ஏன் ஒரு ஸ்தாபனம் அல்ல?
Jeffersonville, Indiana, USA
58-0927
1ஏறக்குறைய மூன்று மாதங்கள் வரவில்லை என்று நினைக்கிறேன். அதன் பிறகு மறுபடியும் பிரசங்க பீடத்துக்கு வந்துள்ளதை சிலாக்கியமாக எண்ணுகிறேன். அணில்களுக்கு கடினமான நேரம் உண்டாயிருந்தது. எனக்கும் கூட, ஓ, இப்பொழுது இறுக்கமற்ற நிலை உள்ளது, மறுபடியும் ஊழியத்தில் பிரவேசிக்க வேண்டுமெனும் உணர்வு மேலிடுகிறது. வருகின்ற இந்த வாரத்தில், வருகின்ற புதன் இரவன்று, இந்த கூடாரத்தில் ஒரு எழுப்புதலைத் தொடங்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தேவனுக்குச் சித்தமானால், நான் ஒரு விதமான... தேவன் எனக்கு வேறுவிதமான, ஒரு புதுவிதமான ஊழியத்தை வாக்களித்துள்ளார். அவர் அவ்விதம் செய்யப் பிரியப்படுவாரானால், அந்த புது விதமான ஊழியத்தை வருகின்ற இந்த வாரத்தில், முதலாவதாக இந்த கூடாரத்தில், தொடங்குவேன் என்று நம்புகிறேன்.
ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்கள் எனக்கு எதுவுமில்லை. ஆனால் வருகின்ற ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவிலும் நியூஜீலாந்திலும் மட்டும் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு சகோ. ஆஸ்பார்ன், நாங்கள் இருவரும் சேர்ந்து நடத்தும் கூட்டங்களை டுல்ஸாவில் ஒழுங்கு செய்கிறார், சில நாட்களுக்கு முன்பு நான் அவரிடம் வாக்கு கொடுத்திருந்தேன், அது சிறிது கழிந்தே இருக்கும். அது எப்பொழுது நடக்குமென்று எங்களுக்கு நிச்சயமாக தெரியாது.
2சகோ. ஜெஃப்ரீஸ், உங்கள் கைகளை குலுக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது, இசைக்கருவி வாசிப்பதைக் கேட்கவும், உங்கள் மகன் அந்தப் பாடலைப் பாடுவதைக் கேட்கவும் மிகவும் நன்றாயிருந்தது. தந்தை- மகன் இணைந்து செய்வது, அது எனக்கு பிடிக்கும். உங்களுக்கும் அது பிடிக்கும் அல்லவா? “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து''. அது உண்மை. திரு. குந்தர், அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும், உங்கள் இருவருக்கும், பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். அது உண்மை. சில நேரங்களில் அவன் அதிலிருந்து விலகக்கூடும். ஆனால் அதுவோ அவனைவிட்டு விலகாது, பாருங்கள். அது எப்பொழுதும் அவனுடன் தங்கியிருக்கும். சிறு வயதில் அவனுக்குக் கிடைக்கப் பெற்ற பயிற்சியும், அவன் வளரும் போது அளிக்கப்பட்ட யாவும், அவனுடன் நிச்சயமாக தங்கியிருக்கும். இப்பொழுது இது...
3நான் சகோ. ஜெஃப்ரீஸை வெளியே சந்தித்து, “சகோ. ஜெஃப்ரீஸ்...” என்றேன். வெளியிலிருந்து சகோதரர்கள் இங்கு விஜயம் செய்வதைக் காண்பது எனக்கு எப்பொழுதும் மகிழ்ச்சி தருகிறது, ஆனால் இப்படிப்பட்ட ஒரு இரவிலா சகோதரன் விஜயம் செய்வது! இன்றிரவு, கூடாரத்துக்கு வழக்கமாக வரும் மக்கள் மட்டுமே வருவார்கள், வெறும் ஜெபம், இந்த எழுப்புதல், அதுதான் இந்த இரவு. இன்றிரவும், நாளை காலையும், நாளை இரவும், இந்தக் கூடாரத்தில் நாங்கள் விசுவாசிப்பவைகளை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். எங்களுக்கு பயமூட்டும், விசித்திரமான சில நம்பிக்கைகள் உள்ளன. அவை மிகவும் விசித்திரமானவை. ஆனால் எப்படியோ அவை இந்த வேதாகமத்தில் இருப்பதைக் காண்கிறோம். அவை அங்கே சரியாக உள்ளன.
4ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தைச் சேர்ந்த, எங்களுடன் இணங்காத சகோதரனாவது சகோதரியாவது இன்றிரவு இங்கிருக்க நேர்ந்தால், உங்களை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறோம். பாருங்கள், எவ்வளவாக முடியுமோ, அவ்வளவாக நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். ஆனால் இப்பொழுது நான் நம்புவது... இதை நாங்கள் மிகவும் கடூரமாக ஆக்குகிறோம். எனவே நீங்கள் அதனுடன் இணங்காமல் போல் தோன்றினால், நல்லது, நான் செர்ரி பையை (Cherry Pie) தின்னும் போது செய்வதைப் போல் செய்யுங்கள். அது எனக்கு மிகவும் பிடித்தமான தின்பண்டம். நான் “செர்ரி பையை தின்னும் போது, கொட்டை அகப்பட்டால்”, நான் “பையை எறிந்து விடுவதில்லை. கொட்டையை எறிந்து விட்டு, ” பையை தின்று கொண்டேயிருப்பேன். அப்படித் தான் கோழி இறைச்சியை புசிக்கும் போதும். உங்கள் எல்லோருக்கும் கோழி இறைச்சி மிகவும் பிடிக்கும், பாருங்கள். உங்களுக்கு எலும்பு அகப்பட்டால், நீங்கள் இறைச்சி புசிப்பதை நிறுத்திவிடுவதில்லை. எலும்பை சுற்றிலும் உள்ள இறைச்சியை புசித்துக் கொண்டேயிருப்பீர்கள். நல்லது, இன்றிரவு அதுபோல் செய்யுங்கள். இங்கு நான் கூறுவதை நீங்கள்... நீங்கள் ஏதாவதொன்றைப் புசிக்கும்போது நீங்கள் கூறலாம். ''எனக்குப் பிடிக்கவில்லை...“ என்று. அடுத்த மூன்று கூட்டங்களில் நான் சபை போதகத்துடன் உட்கார்ந்து கொண்டிருப்பேன். அவர்கள் விசுவாசிப்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வார்கள்.
5ஒரு நபரை நீங்கள் ஏறக்குறைய நம்பச் செய்யக்கூடிய ஒரே வழி, அதுஉண்மை என்று அவர்கள் அறிந்துகொள்ளும் வரைக்கும் அதை ஆணித்தரமான பதியச் செய்வதே. அந்த ஒரே வழியில் மாத்திரமே நீங்கள் பதியச் செய்யமுடியும். நான் கூடச் சென்றிருந்த என் நண்பர் திரு. உட்ஸ்ஸைப் போல். நீங்கள் பாதி தூரம் வரையிலும் ஆணி அடித்தால், பலகை தளர்ந்த நிலையில் இருந்து, காற்று அடிக்கும்போது அது கீழே விழுந்து விடும். எனவே அதை நீங்கள் நன்றாக ஆணியடித்து அது ஒட்டிக் கொள்ளும்படி செய்யவேண்டும். எனவே சில இடங்களில் இதை நான் மிகவும் கூறுவேனானால் கடுரமாகக் இன்றிரவு வெளியே இருந்து வந்து இங்கு அமர்ந்துள்ள உங்களை நான் துரத்திவிடுவதாக எண்ண வேண்டாம். நாங்கள் விசுவாசிப்பதை இந்த சபைக்கு ஆணித்தரமாக வலியுறுத்தவே நான் முயல்கிறேன். இப்பொழுது இதை நன்றாக விளங்கிக் கொண்ட அனைவரும் ''ஆமென்“ என்று சொல்லுங்கள் (சபையோர் ”ஆமென்“ என்கின்றனர் - ஆசி.சரி, அது சரி).
இதை என் கைகளிலிருந்து போக்கிவிடுகிறேன். அதன் பிறகு... அவர்கள் இதை ஒலிப்பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். எனவே நாங்கள் எதற்காக நிற்கின்றோம், நாங்கள் என்ன ஆதாரத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்று பிற்காலத்தில் அவர்கள் அறிய விரும்பினால், இந்த ஒலிப்பதிவுகள் அதை தெரிவிக்கும். இதை நாங்கள் அடிக்கடி செய்வது வழக்கம். ஏனெனில் புதிதாக மக்கள் வருகின்றனர், நாங்கள் இதை போதிக்கிறோம். எல்லா சபை உபதேசங்களையும் மீண்டும் கூற எங்களால் இயலாது, ஆனால் அவைகளில் சிலவற்றை மட்டும் நாங்கள் பேச விரும்புகிறோம். இப்பொழுது, புதன் இரவாக இருந்த போதிலும், துவங்குகிறது...
6இப்பொழுது, திங்கட்கிழமையும் செவ்வாய்க் கிழமையும், நான் ஜெபிப்பதற்காக வெளியே செல்கிறேன் - சுகமளிக்கும் ஆராதனைக்கு ஆயத்தமாக. நீங்கள் தொலைபேசிகளை உபயோகித்து, அல்லது வேறு என்ன வேண்டுமானாலும் செய்து வருகின்ற இந்த எழுப்புதலுக்கு. நீங்கள் யாரை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள். அவர்கள் அவசரத்தோடு வர வேண்டாமென்று அவர்களிடம் கூறுங்கள். அவர்கள் வந்து, “நல்லது, இன்றிரவு நான் ஓடி வந்து ஜெபித்துக் கொள்ளப்பட போகின்றேன், நாளை இரவு அது அனைத்தும்...'' என்று கூறவேண்டாம். அவ்விதம் செய்யாதீர்கள். நீங்கள் வந்து, சற்று நேரம் பிரசங்கத்தைக் கேளுங்கள். ஏனெனில் நாங்கள் போதுமான நேரத்தை எடுத்துக் கொண்டு அந்த வார்த்தையை மிக அருகாமையில் உங்கள் முன் வைக்க விரும்புகிறோம். அப்பொழுது சாத்தான் அசைவதற்கு ஒரு சிறு துளி இடம் கூட இருக்காது.
அப்பொழுது நீங்கள் விசுவாசிப்பதற்காக, உங்கள் விசுவாசம் முடிவு வரைக்கும் செல்ல நீங்கள் அனுமதிக்கும் போது, அதன் பிறகு உங்கள் உள்ளுணர்வு (Subconscious) கிரியை செய்ய நீங்கள் விட்டுக் கொடுக்கும் போது அப்பொழுது தேவனுடைய விசுவாசம் அதைப் பின் தாங்கும். அப்பொழுது நீங்கள் சுகமடைந்து செல்வீர்கள். பாருங்கள்? ஏனெனில் உங்கள் விசுவாசம் மட்டும் அதிக பிரயோஜனமாயிராது; உங்கள் உள்ளுணர்வு, உங்கள் விசுவாசம் சென்று கொண்டிருக்கிற அதே திசையில் செல்லவேண்டும். அப்பொழுது தேவனுடைய விசுவாசம் அங்கு வந்து அவையனைத்தையும் உறுதிப்படுத்தும். பாருங்கள்? ஆனால் உங்கள் விசுவாசம், “ஓ, ஆமாம், அதை நான் இப்பொழுது செய்து விட்டேன்” என்று கூறி, உங்கள் உள்ளுணர்வு பின்னால் தங்கியிருந்து, “அது என்னில் கிரியை செய்யுமா என்று வியக்கிறேன்'' என்று சந்தேகப்பட்டால், அது அதை செய்யவே செய்யாது. பாருங்கள்? எனவே இது உண்மையான சுகமளிக்கும் ஆராதனையாக இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். சுகம் பெறுவதற்காக வந்துள்ள யாரையாகிலும் நான், இந்த புது ஆராதனைகளில், அறைகளுக்குள் அழைப்பதற்கு முன்பு, அவர்கள் எதற்காக வந்துள்ளனர் என்பதை அவர்கள் உண்மையில் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். எனவே ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, எங்களிடம் விஜயம் செய்யுங்கள். உங்களை இங்கு காண்பதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.
7இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், நாம் சபை உபதேசத்தை தொடர்ந்து பார்க்கப் போகின்றோம். நாளை இரவும் அதே விதமாகத்தான். நீங்கள் வரவேண்டுமென்று உங்களை வரவேற்கிறோம். யார் வேண்டுமானாலும் வரலாம். எவரையும் காண்பதற்கு நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருப்போம். ஆனால் இன்றைய இரவு, இந்த உபதேசத்தில் வளர்க்கப்பட்டுள்ள இந்த கூடாரத்தை சார்ந்தவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. வெளியே சுவிசேஷ ஊழியங்களுக்குச் செல்லும் போது, நாங்கள் வேதத்தில் காணப்படும் அடிப்படையான சுவிசேஷ உபதேசங்களைப் பிரசங்கிக்கின்றோம். ஆனால் இங்கே, இந்த கூடாரத்தில் எங்களுக்கு, சபையாக, எங்கள் சொந்த கருத்துக்களும் நம்பிக்கைகளும் உண்டு. அதைதான் இன்றிரவு நாங்கள் மறுபடியும் பேசப் போகிறோம்.
அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையை நாம் திறப்பதற்கு முன்பாக, சிறிது நேரம் நாம் ஜெபத்துக்காக தலை வணங்குவோம்.
8சர்வ வல்லமை பொருந்திய வல்லமையுள்ள தேவனே, உலகம் முதலாவது அணுவாக சுழல்வதற்கு முன்பே நீர் தேவனாயிருக்கிறீர். நீர் சிறிது கூட மாறவில்லை. உலகத்தைத் தாங்குவதற்கு அணுக்களே இல்லாமல் போகும் நேரத்திலும் உலகமே இல்லாமல் போகும் அந்த நேரத்திலும் நீர் தேவனாயிருக்கிறீர். உமக்கு நாட்களின் துவக்கம் இருக்கவில்லை. வாழ்க்கையின் முடிவும் இருக்கப் போவதில்லை. நீர் சதா காலங்களிலும் இருக்கிறீர். பிதாவே, நீர் முடிவற்றவராகவும், நாங்கள் முடிவுள்ளவர்களாகவும் இருப்பதனால், உமது தெய்வீக இரக்கத்துக்காக கெஞ்சுகிறோம். தேவனே, இந்த எங்களுடைய ஆவி, காலம் என்னும் இந்த போக்கை கடந்து, நித்தியத்துக்குள் சேர்ந்து விடும் என்பதை நாங்கள் உணருகிறோம். எனவே கர்த்தாவே, எங்கள் இரட்சிப்பை நாங்கள் சோதித்துப் பார்த்து, உமது வார்த்தையின் பார்வையில் எங்கள் நிலை என்னவென்றும், எங்கள் அனுபவங்களில் நாங்கள் எங்கு நிலைத்திருக்கிறோம் என்பதைக் காணவுமே இங்கு வந்திருக்கிறோமா? எங்கள் ஆவி உமது ஆவிக்கு சாட்சியாயுள்ளதா? எங்கள் போதகம் இந்த வேதாகமத்துக்கும் சாட்சியாயுள்ளதா? பிதாவே, வரப்போகின்ற இந்த மூன்று ஆராதனைகளில், இவ்விரண்டையும் நாங்கள் கூர்ந்து பரிசோதித்துப் பார்ப்போமாக, கர்த்தாவே இதை அருளும்.
9இங்குள்ள மேய்ப்பரையும் டீகன்மார்களையும், தர்ம கர்த்தாக்களையும், மற்றும் சபையோர் அனைவரையும், இந்த சபைக்கு வருகை தருபவர்களையும் ஆசீர்வதிப்பீராக. இங்கு என் நாட்கள் தொடங்கின முதற்கு, கர்த்தாவே, அநேகர், அநேகர் இந்த கூடாரத்தைச் சேர்ந்துள்ளனர். அவர்களுடைய பெயர்களைக் கூட நான் அறியேன், அவர்கள் எங்கிருந்து வருகின்றனர் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் நீர் அவர்களைக் குறித்து எல்லாம் அறிந்திருக்கிறீர் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். இன்றிரவு நாங்கள் ஒரே நோக்கத்துக்காக வந்திருக்கிறோம். கர்த்தாவே அதாவது எழுதப்பட்ட வார்த்தையின் பேரில் ஐக்கியம் கொள்ள வேண்டும் என்பதற்காக. எங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியை எங்களுக்கு தாரும். அப்பொழுது நாங்கள் சமாதானத்தோடும், நிதானத்தோடும், தேவபயத்தோடும் உட்கார்ந்து கொண்டு, எங்கள் வாழ்க்கையை வார்த்தையுடன் ஒப்பிட்டு சோதித்துப் பார்க்க முடியும். கர்த்தாவே இதை அருளும். கர்த்தாவே,
இன்றிரவு இக்கட்டிடத்தில், வெவ்வேறு ஸ்தாபனங்களைச் சேர்ந்த என் சகோதரர் உள்ளனர். கர்த்தாவே, ஐக்கியம் கொள்ள அவர்கள் இங்குள்ளதற்காக நான் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். ஒருவேளை நாங்கள் சிறு உபதேசங்களில் வேற்றுமை கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் அந்த ஒருபெரிய கொள்கையின் பேரில் நாங்கள் ஒன்றுபட்ட சகோதரர்களாக போர்க்களத்தில் நிற்கிறோம். ஓ, தேவனே, அது எங்கள் ஐக்கியத்தை பெலப்படுத்துவதாக. எங்கள்... தேவனுடைய கிருபை, அன்பு என்னும் கட்டுகள் எங்கள் மேல் அபரிமிதமாக அமர்ந்திருப்பதாக. இது ஒரு மனிதன் செய்யக் கூடிய வேலையைக் காட்டிலும் அதிகம் என்று உணருகிறேன். ஏனெனில் இன்றிரவு நாங்கள் நித்தியத்தை நோக்கி செல்லும் ஆத்துமாக்களின் பேரில் கவனம் செலுத்த வேண்டியவர்களாய் இருக்கிறோம். எனவே பரிசுத்த ஆவியானவர் வார்த்தைக்குள் ஊடுருவி, அதை எங்களுக்கு முன்பாக வைத்து, நாங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புவதை, அவருடைய சொந்த வழியில் விளக்கித் தருவாராக. கர்த்தாவே, இதை அருளும். இந்த மூன்று... ஆராதனைகளும் முடிவுற்ற பிறகு, நாங்கள் பலப்படுத்தப்பட்ட சபையாக, ஒற்றுமையுடன் எங்கள் இருதயங்களையும் எங்கள் நோக்கங்களையும் ஒன்றாக்கி, தேவனுடைய ராஜ்யத்தின் உடன் சுதந்தரருடன், இதுவரையிலும் செய்யாத அளவில் முன்னோக்கிச் செல்வோமாக.
10கர்த்தாவே, எனக்கு பல வாரங்களாக நல்ல ஓய்வைத் தந்ததற்காக, சபைக்கு முன்பாகவும் இங்கு வந்துள்ள ஜனங்களுக்கு முன்பாகவும் உமக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். உமது பிரசன்னத்தின் நிமித்தமாகவும், உமது ஆசீர்வாதத்தின் நிமித்தமாகவும், எனக்கு இன்றிரவு அற்புதமான உணர்வு தோன்றுகிறது. ஓ, தேவனே, வெளிநாடு செல்லப் போகின்ற இங்குள்ள இந்த சகோதரனுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். அவர் தொலைவில் உள்ள இருளடைந்த அழுக்கான நாடுகளுக்கு செல்லவிருக்கிறார். அங்கு அவருடைய உயிரே இலக்காக இருக்கும். ஓ, கர்த்தாவே, எங்கள் சகோதரன், ஜெஃப்ரீஸ் செல்லும் போது, அவரையும் அவருடைய மகனையும் மனைவியையும் ஆசீர்வதித்து, அவருக்கு அதிகமான ஆத்துமாக்களையும் தருவராக. அவர் இருளிலே துளையுண்டாக்கி, சுவிசேஷ ஒளி வெகு தூரம் வரைக்கும் பிரகாசிக்கும்படி செய்வாராக. பிதாவே, எங்கள் விண்ணப்பத்திற்கு செவிகொடும். இதை உமது குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஏறெடுக்கிறேன். ஆமென்.
11இன்றிரவு, என் சிறு ஸ்கோஃபீல்ட் வேதாகமத்தை நான் படிக்கையில், அண்மையில் நான் இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டதை அறிந்தேன். என்னால் அதை இப்பொழுதும் படிக்க முடிகிறது. ஆனால் அது மங்கலாக காணப்படுகிறது. எனவே படிப்பதற்காக மூக்குக் கண்ணாடி ஒன்றை வாங்கிக் கொண்டேன். இன்றிரவு அதை முதன் முதலாக உபயோகிக்கும் போது, அது எப்படி உள்ளது என்று காணப் போகின்றேன். எனக்கு இப்படிப்பட்ட பிரசங்கத் தலைப்புகள் உள்ளன. சபையானது... ஓ, அநேக காரியங்கள். அவைகளை நாம் பார்க்க முடிந்தால், அவைகளில் ஒன்று, நாம் ஏன் சபையென்று அழைக்கப்படுகிறோம்? நாம் ஏன் ஒரு ஸ்தாபனம் அல்ல, நாம் ஏன் விசுவாசியின் ஆத்துமாவின் நித்திய பாதுகாப்பில் நம்பிக்கை கொண்டுள்ளோம்? நாம் ஏன் முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறோம்? சபை உபத்திரவ காலத்தின் வழியாக செல்லுமா? இவ்வாறு இங்கே அநேக பிரசங்கத் தலைப்புகள் உள்ளன. அடுத்த சில இரவுகளுக்கு, பதினைந்து அல்லது பதினெட்டு தலைப்புகள் உள்ளன என்ற நினைக்கிறேன்.
12இன்றிரவு நான் தொடங்க நினைப்பது; நாம் ஏன் ஒரு ஸ்தாபனம் அல்ல என்னும் தலைப்பின் பேரில் பேசுவதற்கு கர்த்தர் என் இருதயத்தை ஏவுவதாக தோன்றுகிறது. அதற்கு காரணம்... ஸ்தாபனங்களில் உள்ளவர்களுக்கு விரோதமாக எங்களுக்கு ஒன்றுமில்லை. அவர்களுக்கு விரோதமாக எங்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் நாங்கள் ஏன் எந்த ஒரு ஸ்தாபனத்துக்குள்ளும் செல்லவில்லை என்பதை விவரிக்க விரும்புகிறேன். நான் ஒரு சிறு பாப்டிஸ்டு சபையில் குருவானவராக அபிஷேகிக்கப்பட்டேன் என்று உங்களுக்கு தெரியும். சமீப காலம் வரைக்கும் பாப்டிஸ்டு சபை ஒரு ஸ்தாபனமாக இருக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ அது மற்ற ஸ்தாபனங்களைப் போலவே ஒரு ஸ்தாபனமாக விளங்குகிறது. ஆனால் நாங்கள் ஒரு ஸ்தாபனமாக ஆகிவிடாததன் காரணம் என்வென்றால்...
13இப்பொழுது, நாங்கள் நிறுவனம் (Organization). நாங்கள் நிறுவனமாக, கிறிஸ்துவை ஆராதிப்பதற்கென ஒழுங்காக ஒன்று சேர்ந்துள்ள ஒரு குழுவினராக, நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளோம். ஆனால் நாங்கள் ஒரு ஸ்தாபனத்தில் இல்லை. யாரும் எங்கள் மேல்ஆதிக்கம் செலுத்த முடியாது. பாருங்கள், இது ஒரு ஸ்தாபனம் அல்ல. இது கிறிஸ்துவ விசுவாசிகளின் மத்தியிலுள்ள ஒரு ஒழுங்கான ஐக்கியம். ஜனங்கள் இந்த சபைக்கு வருகின்றனர். இது அவர்களுடைய வீட்டு சபையாக ஆகிவிடுகிறது- அவர்கள் வாழ் நாள் வரைக்கும் அவர்கள் வரவிரும்பினால்.
14அவர்கள் இங்கு வந்து, நாங்கள் பிரசங்கிக்கும் அனைத்தின் மேலும் கருத்து வேற்றுமை கொண்டு இருக்கலாம். அதனால் ஒரு பாதகமும் இல்லை. அப்பொழுது, நீங்கள் கிறிஸ்தவராக இருக்கும் வரைக்கும், உங்களுக்கு ஐக்கியமும், மற்றவர்களுக்கு செய்யப்படுவது போலவே உங்களுக்கும் கரம் நீட்டப்படும். பாருங்கள்? நான் தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானத்தில் நம்பிக்கை கொண்டிருந்து, நீங்கள் தெளித்தலில் நம்பிக்கை கொண்டு, அதில் நிலைத்திருந்தால், அப்பொழுதும் நம்மிடையே கருத்து ஒருமைப்பாடு இருந்தால் எப்படியிருப்போமா, அது போலவே இருப்போம். நாம் கருத்து ஒருமித்து இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் கிறிஸ்துவ சகோதரன் அல்லது சகோதரியாய் இருக்கும் வரைக்கும், உங்களை நாங்கள் முழுவதுமாக வரவேற்போம், பாருங்கள், ஒவ்வொருவரையும்.
15எனவே எங்களுக்கு எந்த ஸ்தாபனமும் கிடையாது. ஏனெனில் ஸ்தாபனம் சகோதரத்துவத்தை பிரித்துவிடுகிறது என்பது என் அபிப்பிராயம். சிலர், ''நல்லது, எங்களுக்கு அந்த எழுப்புதலுடன் எவ்வித தொடர்பும் கிடையாது“, அது ஒரு மெதோடிஸ்ட் எழுப்புதல். நல்லது, அது பாப்டிஸ்ட், எங்களுக்கு... நாங்கள் மெதோடிஸ்டுகள், எங்களுக்கு அதனுடன் எவ்வித தொடர்பும் கிடையாது என்கின்றனர். சகோதரனே, கிறிஸ்து அதில் இருப்பாரானால், நமக்கு அதனுடன் எல்லாவித தொடர்பும் உண்டு. நாம் நமது முயற்சிகள் அனைத்தையும்... அங்கு பாடுபடுவது கிறிஸ்துவின் சரீரமே. அதை நான் அதிகமாக இன்று நமது தேசத்தில் காண்கிறேன். நாம் எவ்வளவாக... கிறிஸ்து ஒருபோதும், எந்த ஒரு சமயத்திலும், எந்த ஒரு ஸ்தாபன சபையையும் நிறுவில்லை. அதை நாம் உறுதியாக அறிந்து கொள்ளுதல் அவசியம்.
16இப்பொழுது, இப்பொழுது, உங்களில் யாருக்காவது நான் உரைத்துக் கொண்டிருப்பதற்கு ஆதாரமாக சில வரலாறுகளை, இன்னும் வேறு சில காரியங்களை அறிந்து கொள்ள விருப்பமானால், நாளை இரவு அதை குறித்து உங்களைக் கேட்பேன். அதை இப்பொழுது எடுத்துக்கூற எனக்கு நேரமில்லை. நான் மற்றொரு பொருளுக்கு சென்றுவிடப் போவதில்லை. ஏனெனில் அந்த ஒரு பொருளின் பேரிலேயே வாரக் கணக்காக செலவிடலாம். உங்களுக்கு இடம், மற்றும் வேறு ஏதாவது அறிந்து கொள்ள விரும்பினால், என்னைக் கேளுங்கள். அதை எழுதி மேசையின் மேல் வைத்து விடுங்கள். அதை நான் பெற்றுக் கொண்டு, உங்களுக்கு பதிலளிப்பேன்.
17இப்பொழுது, நமக்கு உண்டாயிருந்த மிகப் பழைய ஸ்தாபனம், முதலாவது ஸ்தாபன சபை, கத்தோலிக்க சபையே. அது கடைசி அப்போஸ்தலனின் மரணத்துக்குப் பிறகு முன்னூறு சொச்சம் ஆண்டுகள் கழித்து ஸ்தாபிக்கப்பட்டது. அது உண்மை. அதை நீங்கள் ஆதி நிசாயா பிதாக்களின் புத்தகங்களிலும் ஜோசிபஸ் எழுதின புத்தகங்களிலும் காணலாம் - ஓ, அநேக மகத்தான வரலாற்றாசிரியர்கள். பாருங்கள்? சபையின் காலங்களில் கடைசி அப்போஸ்தலனின் மரணம் வரைக்கும், அப்போஸ்தலரின் காலத்துக்கும் பிறகு முன்னூறு ஆண்டுகள் வரைக்கும், ஸ்தாபன சபைகள் எதுவும் இருக்கவில்லை. கத்தோலிக்க சபையே முதலாம் ஸ்தாபன சபை.
பிராடெஸ்டெண்டு சபைகள், ஒரு ஸ்தாபனத்திலிருந்து வெளியே இழுக்கப்பட்ட ஸ்தாபனங்களாகும். முதலாவது சீர்திருத்தம் வந்தது, அது லூத்தரின் மூலம்; லூத்தருக்கு பின்பு சுவிங்கிலி வந்தார். சுவிங்கிலிக்கு பின்பு கால்வின் வந்தார். இவ்வாறு காலங்கள் தோறும் வழியாக வந்து, வெஸ்லியின் எழுப்புதல் தோன்றினது. அதன் பிறகு அலெக்சாண்டர் காம்ப்பெல், ஜான் ஸ்மித் இன்னும் மற்றவர் தோன்றினர். இப்பொழுது நாம் பெற்றுள்ள கடைசி அசைவு, பெந்தெகொஸ்தே காலத்தின் வெவ்வேறு அம்சங்கள்.
18தேவன் ஒவ்வொரு காலத்திலும் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு சபை தவறிப்போய், அது ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட போது, அது அங்கேயே விழுந்து போனது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அவர்கள் தவறி விழுந்தபோது, தேவன் அந்த சபையை மறுபடியும் எழுப்பவில்லை. அது நேராக வித்துக்குள் சென்று விடுகிறது. இப்பொழுது நீங்கள்... அதைக் குறித்த வரலாற்றை நீங்கள் அறிய விரும்பினால், அதை எங்களால் தர முடியும். சபை வரலாற்றில், விழுந்து போன எந்த ஒரு ஸ்தாபன சபையும் மறுபடியும் எழுந்திருக்கவில்லை. பாப்டிஸ்டு, மெதோடிஸ்ட், பிரஸ்பிடேரியன், லூத்தரன் எதுவானாலும், அவைகள் விழுந்த போது, அத்துடன் போய்விட்டன. அது உண்மை. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இதை நாங்கள் பதியவைக்கப் போகிறோம். பாருங்கள்? ஒரு மனிதன் தனிப்பட்ட நபராக வெளி வந்து, ஒரு சபையை நிறுவின போது, அது ஒருபோதும் நிலைத்திருக்கவில்லை.
19தேவன் தனிப்பட்ட நபருடன் ஈடுபடுகிறார். ஸ்தாபனத்துடன் அல்ல. எந்த ஒரு காலத்திலும் தேவன் ஒரு ஸ்தாபனத்துடன் ஈடுபடவேயில்லை. பழைய ஏற்பாட்டின் காலத்தில் அவர் தனிப்பட்ட நபருடன் ஈடுபட்டார். புதிய ஏற்பாட்டின் காலத்தில், அவர் தனிப்பட்ட நபருடன் ஈடுபட்டார். எந்த ஒரு காலத்திலும் அவர் எப்பொழுதும் தனிப்பட்ட நபர்களுடனே ஈடுபடுகிறாரேயன்றி, ஸ்தாபனங்களுடன் அல்ல. எனவே, தேவன் ஸ்தாபனத்தில் இல்லை என்னும் போது, நான் ஸ்தாபனத்துடன் தொடர்பு கொள்வதால் என்ன பயன்? நான் ஸ்தாபனத்திலுள்ள மக்களைக் குறிப்பிடவில்லை. நான் ஸ்தாபனத்தை தான் குறிப்பிடுகிறேன். ஏனெனில் தேவனுடைய மக்கள் அந்த ஸ்தாபனங்கள் அனைத்திலும் உள்ளனர்.
20தேவன் ஒரு எச்சரிக்கை விடுக்காமல், எந்த ஒரு காரியமும் நிகழ அனுமதிப்பதில்லை. ஏதாவதொன்றுக்கு
இப்பொழுது, உதாரணமாக, சபைகளிலிருந்து வெளிவரும் நமக்குள்ள பிரச்சினைகள் போல. அண்மையில் நமக்கு இரத்தமும் எண்ணெயும் குறித்த பிரச்சினை உண்டாயிருந்தது. அது சம்பந்தமாக “அன்புள்ள சகோ. பிரன்ஹாமே” என்னும் கடிதத்தைக் குறித்து நீங்கள் அறிவீர்கள். அதற்கு விரோதமாக நான் நின்ற காரணம் என்னவென்றால், அது வார்த்தையில் இல்லை. அதே காரணத்துக்காகவே நான் ஸ்தாபனத்துக்கு விரோதமாயுள்ளேன், ஏனெனில் அதுவும் வார்த்தையில் இல்லை. நமது விசுவாசத்தை ஆதாரப்படுத்துவதற்கு அதில் ஏதாவதொன்று இருக்கவேண்டும். அதை நாம் ஏதாவது ஒரு ஸ்தாபனத்தின் மேல் ஆதாரப்படுத்த முடியாமல் போனால், அதை நாம் தேவனுடைய வார்த்தையின் மேல் ஆதாரப்படுத்த வேண்டும். ஏனெனில் தேவனுடைய வார்த்தை ஒன்றே ஆதாரமானது.
21தேவனுடைய வார்த்தை ஸ்தாபனத்தைக் குறித்து உரைக்காமல் அது ஸ்தாபனத்துக்கு விரோதமாக உரைக்கிறதென்றால், நாம் வார்த்தை உரைப்பதையே பேச வேண்டியவர்களாயிருக்கிறோம். பேராயரோ அல்லது வேறு யாரும் என்ன கூறினாலும், யார் என்ன நினைத்தாலும், நல்ல மனிதர் எதைச் சொன்னாலும், வேறெதுவும் என்ன கூறின போதிலும், அது தேவனுடைய வார்த்தையின் படி இல்லையென்றால், அது தவறு. பாருங்கள். வார்த்தை முடிவானதாக இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை தான் இறுதியானதாக இருக்கவேண்டும். ஆமென்.
இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், ஸ்தாபனங்களிலுள்ள எவரையும் நான் கிறிஸ்தவர் அல்ல என்று கூறவில்லை (அதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்) அந்த ஸ்தாபனங்களில் பல்லாயிரக்கணக்கான விலையேறப்பெற்ற ஆத்துமாக்கள் உள்ளனர். அவர்கள் தேவனுடைய பிள்ளைகள். ஆனால் அவர்களை வேறு பிரித்து, ஒதுக்கி வைத்துள்ளதற்கு நான் விரோதமாய் இருக்கிறேன். தேவனுடைய வார்த்தையும் அதற்கு விரோதமாய் உள்ளது.
22இன்று நாட்டில் காணப்படும் தத்துவங்கள் (isms) இந்நாட்டில் எப்பொழுதாகிலும் ஒரு தத்துவம் (isms) இருந்திருக்குமானால், அது வரப்போகிறதென்று தேவனுடைய வார்த்தை ஏற்கனவே முன்னுரைத்துள்ளது. நமக்குத் தேவையான அனைத்தையும் தேவனுடைய வார்த்தை இந்த வேதவாக்கியத்திலிருந்து நமக்குத் தருகிறதென்று நான் விசுவாசிக்கிறேன். துவக்கத்திலிருந்து முடிவு வரைக்கும், அது தேவனுடைய வார்த்தையில் காணப்படுகிறது. அது தேவனுடைய வார்த்தையில் இருக்குமானால் அப்பொழுது நாம்... அது முன்னுரைக்கிறதென்று நான் விசுவாசிக்கிறேன். தேவனுடைய வார்த்தை ஒரு எச்சரிக்கையாய் அமைந்துள்ளது.
23நீங்கள் தேவனுடைய வார்த்தையை செய்தித்தாளைப் படிப்பதைப் போல படிப்பதில்லை. நீங்கள் பரிசுத்த ஆவியினால் தேவனுடைய வார்த்தையை படிக்கிறீர்கள், பாருங்கள். ஏனெனில் பரிசுத்த ஆவியே கிறிஸ்துவின் மூலம் பேசுகின்றார். இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, கற்றுக் கொள்ளக் கூடிய பாலகருக்கு வெளிப்படுத்தினதால்,கிறிஸ்து தேவனைக் ஸ்தோத்தரித்தார். எனவே, பாருங்கள், கல்வியறிவு பெறுவதற்கோ, ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்வதற்கோ வழியே கிடையாது. நேராவதற்கு ஒரே ஒரு வழியுண்டு. அது தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுவதே. அந்த அனுபவம் வார்த்தையுடன் ஒத்துப்போக வேண்டும். பாருங்கள்?
24இன்னும் சில நிமிடங்களில் இதற்கு நாம் வரும்போது, நாம் எத்தகைய ஜனங்களுடன் ஈடுபடுகிறோம் என்றால்... அவர்களில் சிலர் தங்கள் கொள்கைகளில் தீவிரமாயுள்ள கால்வீனியர்கள், வேறு சிலர் தீவிரமாயுள்ள ஆர்மீனியர்கள் - வெவ்வேறு வழிகளில் செல்பவர். நீங்கள் எவ்வளவு மெல்லியதாக ரொட்டியைத் துண்டு போட்டாலும், அதற்கு இரு பக்கங்கள் உண்டு. அது முற்றிலும் உண்மை. இவர்கள் இருவருக்குமே, தங்கள் கொள்கை சரியென்று விவாதிக்க குறிப்புகள் உள்ளன. ஆனால் காரியம் என்னவெனில், சத்தியம் எங்கேயுள்ளது? அதற்கு தான் நாம் வந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம் எடுத்துக் கொள்வோம். இங்கு தான் நான் சபை உபதேசங்களில் சிலவற்றை எழுதி வைத்துள்ளேன்.
25சில நிமிடங்கள் நாம், எல்லோருமே, வேதாகமத்தை வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்துக்குத் திருப்புவோம். இல்லை 17-ம்அதிகாரத்துக்கு. அதை நாம் படித்து இந்த சபைகள் எங்கு ஆரம்பமாயின என்றும், அவைகளை ஆரம்பித்தது எதுவென்று காண்போம். இப்பொழுது, வேதாகமம் எல்லாவற்றையும் குறித்து முன்னெச்சரிக்கிறது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்களைக் குறித்தும் அது முன்னெச்சரித்துள்ளது. இப்பொழுது உங்களுக்கு விருப்பமானால், வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரம். நான் 13-ம் அதிகாரம் என்று தவறாக கூறிவிட்டேன். அது எதைப் பற்றினதென்றால்... அதற்கு சிறிது நேரம் கழித்து வருவோம். அதில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் குறித்து தீர்க்கதரிசனம் அடங்கியுள்ளது. இப்பொழுது மிகவும் கவனமாய் கேளுங்கள்.
ஏழுகலசங்களையுடைய அந்த ஏழு துதரில் ஒருவன் வந்து, என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகாவேசி... அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன்.
வெளி.17:1-2
இப்பொழுது கவனியுங்கள், இது ஒரு இரகசியம் போல் தொனிக்கிறது. இந்த பெயர் கெட்டஸ்திரீ; இதை நாம் போதிக்க வேண்டுமென்றால், இந்த அடையாளங்களின் அர்த்தமென்ன என்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும். வேதத்தில் ஸ்திரீ என்பவள் 'சபை'க்கு எடுத்துக்காட்டாயிருக்கிறாள். அது எத்தனை பேருக்குத் தெரியும்? நாம் மணவாட்டி, சபை மணவாட்டியாகும்.
26''நீ வா, அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன்.'' இந்த மகா வேசிக்கு ஆக்கினை வரப்போவதாக கூறப்பட்டுள்ளது. அந்த அசுத்தமான ஸ்திரீ திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஸ்திரீ ''சபைக்கு அடையாளமாயிருக்கிறாள் என்றால், தண்ணீர்'' ஜனங்களுக்கு'' அடையாளமாயுள்ளது. நீங்கள் கவனிப்பீர்களானால், இந்த அதிகாரத்தில் உள்ளபொழுதே, 15-ம் வசனத்தைப் பாருங்கள்.
பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம் (பாருங்கள்?)
வெளி. 17:15
இப்பொழுது, இந்த மகா சபை, மகா ஸ்திரீ பெயர் கெட்ட ஸ்திரீ என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஸ்திரீ சபைக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறாள் என்றால் (கிறிஸ்துவின் சபையானது மணவாட்டி, பரிசுத்தமான மணவாட்டி), இங்கே ஒரு அசுத்தமான ஸ்திரீ இருக்கிறாள். அது அசுத்தமான, பாசாங்கு செய்யும் மணவாட்டியாக இருக்க வேண்டும். பாருங்கள்? அவள் என்ன செய்கிறாள்? அவள் திரளான தண்ணீர்கள் மேல் ''உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.'' 'மேல்' என்று சொன்னால் “திரளான தண்ணீர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகிறாள்.'' வேறு விதமாகக் கூறினால், அவளுக்கு எல்லா ஜாதிகள், பாஷைக்காரர், ஜனங்கள் ஆகியோரின் மேல் அதிகாரம் உள்ளது. இந்த ஸ்திரீ மிகவும் பெரியவள்.
... மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே...
வெளி. 17:1
27பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்கள். ஐசுவரியவான்கள், பெரிய மனிதர் அவ்விதம் செய்தனர்.
நீங்கள் எவ்விதம், ஒரு ராஜா எவ்விதம், ஒரு சபையோடே வேசித்தனம் செய்ய முடியும்? அது ஆவிக்குரிய வேசித்தனம், ஆவிக்குரியது! வேசித்தனம் என்றால் என்ன? நல்லது, அது ஒரு ஸ்திரீ தன் கணவனுக்கு உண்மையில்லாதவளாய் வாழ்வது மனிதனுடன் வாழ்க்கை நடத்துகிறாள். அப்படியானால் இந்த சபையானது கிறிஸ்துவின் மணவாட்டியை போல் பாசாங்கு செய்துகொண்டே, உலகத்தின் ராஜாக்களுடன் வேசித்தனம் செய்து, அசுத்தமாக வாழ்ந்து, அசுத்தமான தொழிலை நடத்துகிறாள். ஓ, அது ஆழமும் அர்த்தம் நிறைந்ததுமாயுள்ளது. நான் வார்த்தையை நேசிக்கிறேன்.
28இப்பொழுது கவனியுங்கள்.
...மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறி கொண்டிருந்தார்களே;
வெளி. 17:1
அவள் குடிக்கக் கொடுத்தது “மது'' - உணர்ச்சிகளைத் தூண்டிவிடுதல் (Stimulation) ''நாங்கள் தான் சபை நாங்கள் தான் அதைப் பெற்றுள்ளோம்'', பாருங்கள்? இதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சரி. அவனை வனாந்திரத்துக்கு...
தூதன் யோவானை நோக்கி, ''இந்த மகா சபைக்கு வரப்போகும் ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன்'' என்றான். இப்பொழுது கவனியுங்கள்.
ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டு போனான் அப்பொழுது... சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் ஒரு ஸ்திரி ஏறியிருக்கக் கண்டேன்.
வெளி.17:3
வேதத்தில் சிவப்பு (Scarlet) நிறம் ராஜரீகத்தைக் குறிக்கிறது. அது சிவப்பு நிறம். மிருகம் ''அதிகாரத்தைக் குறிக்கிறது. சமுத்திரத்திலிருந்து எழும்பி வருகிறது என்பதை கவனித்தீர்களா? (வெளி. 13:1) மிருகம் சமுத்திரத்திலிருந்து எழும்பி வருகிறது. நீங்கள் காண்பீர்களானால் அதன் அதிகாரம் ஜனங்களிடையே அதிகரிக்கிறது என்று அர்த்தம். அதே வெளிப்படுத்தின விசேஷம் 13-ம் அதிகாரத்தில் ஆட்டுக்குட்டி எழும்பி வரும்போது, அது பூமியிலிருந்து எழும்பி வருகிறது (13:1) அது ஜனத்தொகை அதிகம் இராத அமெரிக்க ஐக்கிய நாடுகள். அதற்கு இரண்டு கொம்புகள் உள்ளன - அரசு சம்பந்தமான அதிகாரமும். மதச் சம்பந்தமான அதிகாரமும் அது அதிகாரத்தைப் பெற்று, அதற்கு முன்பிருந்த வலுசர்ப்பத்தைப் போல் பேசினது. எனவே அதை நீங்கள் குறித்துக் கொள்ளவேண்டும். அநேக ஆண்டுகளுக்கு முன்பு அஞ்ஞான ரோமாபுரியில் அவர்கள் செய்தது போன்ற மதச் சம்பந்தமான துன்புறுத்தலுக்குள் நாம் வந்து கொண்டிருக்கிறோம். அது கர்த்தர் உரைக்கிறதாவது! அது என்ன, ''மிருகத்தின் மேல் ஏறியிருப்பது, அதிகாரம் வகிப்பது.''
29ரெபேக்காளை நீங்கள் கவனித்தீர்களா? எலியேசர் அவளைக் கண்டபோது அது சாயங்கால நேரமாயிருந்தது. அவள் ஒட்டகத்துக்கு தண்ணீர் வார்த்துக் கொண்டிருந்தாள். ஏனெனில் எலியேசர், “நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே, நீர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாக வேண்டும்'' என்று விண்ணப்பம் பண்ணியிருந்தான். அவன் ஜெபித்துக் கொண்டிருந்த போதே, ரெபேக்காள் அங்கு வந்து தண்ணீர் மொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்து, ஒட்டகத்துக்கும் மொண்டு வார்த்தாள். கவனியுங்கள். ஒட்டகம் ஒரு மிருகம். அவள் தண்ணீர் மொண்டு வார்த்த அதே மிருகம், அவளுடைய மணவாளனாகிய ஈசாக்கிடம் அவளைச் சுமந்து கொண்டு சென்றது.
30அவ்வாறே இன்றைக்கு சபையானது தண்ணீர் வார்த்து ஆராதிக்கும் அதே பரிசுத்த ஆவியின் வல்லமையே, மணவாளனை சந்திக்க அவளை பூமியிலிருந்து கொண்டு செல்லும். நிச்சயமாக. நாம் கர்த்தரை மகிமையில் சந்திப்பதில்லை. அவரை நாம் ஆகாயத்தில் சந்திப்போம் என்று எபேசியர் 5-ம் அதிகாரம் உரைக்கிறது. ஓ, அது மெதோடிஸ்டுகளை கூச்சலிடும்படி செய்கிறது. அதை சிந்தித்துப் பாருங்கள். பாருங்கள்? கர்த்தர்... ஈசாக்கு தன் தகப்பன் வீட்டிலிருந்து வெளியே வந்து, ரெபேக்காள் ஒட்டகத்தின் மேல் வருவதைக் கண்டபோது, அவன் வயல் வெளியில் இருந்தான். அவள் அவனைக் கண்டதுமே அவன் மேல் அன்பு கொண்டு, ஓட்டகத்தை விட்டு கீழே குதித்து, அவனைச் சந்திக்க ஓடிச் சென்றாள். அது உண்மை. அங்குதான் நாம் கர்த்தரைச் சந்திக்கிறோம். அவள் தண்ணீர் வார்த்த அதே ஓட்டகம் அவளுடைய கணவனிடம் அவளைச் சுமந்து சென்றது. அவ்வாறே சபை தொழுது கொண்டிருக்கும், உலகம் மதவெறி என்றழைக்கும், அதே வல்லமை தான், கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்பதற்காக, சபையை ஆகாயத்துக்கு கொண்டு செல்லும் பரிசுத்த ஆவி, பாருங்கள். அங்கே அது...
கவனியுங்கள், ரெபேக்காள் ஒரு கன்னிகை.
31ஆனால் இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த ஸ்திரீயோ ஒரு வேசி.
இப்பொழுது அதிகாரம் என்றால் என்னவென்று புரிந்து கொண்டீர்களா? அது ஒரு மிருகம். அவள் சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் ஏறியிருந்தாள். அது எப்படிப்பட்ட மிருகம்? சிவப்பு நிறமுள்ளது. அப்படியானால் அது ''ஐசுவரியமுள்ள அதிகாரம்.''அவள் இப்பொழுது எப்படிப்பட்ட சபையாக விளங்குகிறாள்? அவள் ஐசுவரியம் நிறைந்த சபை, அவள் மகா பெரிய சபை, அவள் மிகுந்த அதிகாரம் பெற்றுள்ள சபை. அவள்... அவளுடைய செல்வாக்கு திரளான ஜனங்களின் மேல் உள்ளது. பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம் பண்ணினார்கள். அதாவது உலகத்திலுள்ள பெரிய மனிதர்கள். இன்னும் ஒரு நிமிடத்தில் அவள் யாரென்பதை பார்க்கப் போகிறோம், இந்த ஸ்தாபனங்களைக் குறித்தும் பார்க்கப் போகிறோம்.
அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் (ராஜரீகத்தைக் குறிக்கிறது) சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற் பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
வெளி.17:4
அவள் தன் கையில் என்ன பிடித்திருந்தாள்? அவளுடைய உபதேசம். அவள் அதை ஜனங்களுக்கு கொடுத்து, நாங்கள் தான்! ''நாங்கள் இது'' என்றாள். அவள் அதை பூமியின் ராஜாக்களுக்கு குடிக்கக் கொடுத்து, அவர்கள் வெறி கொண்டிருக்கும்படி செய்தாள். “நாங்கள் இது! நாங்கள் மிகுந்த அதிகாரம் பெற்றவர்கள். நாங்கள் ஒவ்வொரு தேசத்தின் மேலும் அதிகாரம் செலுத்துகிறோம்! நாங்கள் தான் மிகப் பெரிய சபை. வாருங்கள், எங்கள் உபதேசத்தைக் குடியுங்கள். இதில் கொஞ்சம் ஊற்றிக் குடியுங்கள், நீங்கள் குடியுங்கள், நீங்கள் குடியுங்கள்.
32'' பார்த்தீர்களா?''
அவள் கையில் பாத்திரத்தைப் பிடித்திருந்தாள் பாருங்கள்.
அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
வெளி : 17:4
இப்பொழுது நண்பர்களே, நாம் ஒரு செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருக்கவில்லை. நாம் தேவனுடைய நித்தியமான ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையை வாசித்துக் கொண்டிருக்கிறோம். வானமும் பூமியும் அனைத்தும் ஒழிந்துபோம். ஆனால் அந்த வார்த்தையோ நிலைத்திருக்கும். அது உண்மை.
மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
33இப்பொழுது, இங்கே சில நாட்களுக்கு முன்பு, இந்த சபையில் இல்லை என்று நினைக்கிறேன், ஆனால் நான் சுவற்றின் மேலிருக்கும் கையெழுத்து என்னும் பொருளின் பேரில் பிரசங்கித்து, பாபிலோனின் வரலாற்று நிலையை எடுத்துரைத்தேன். இப்பொழுது, எழும்பின ஒவ்வொரு கொள்கையும், இன்று உலகில் காணப்படும் ஒவ்வொரு மார்க்கமும் ஒவ்வொரு கொள்கையும், ஆதியாகமத்தில் தொடங்கினது. நீங்கள் ஹிஸ்ஸலப் என்பவர் எழுதின இரு பாபிலோன்கள் என்னும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வரலாற்றை தொடர்ந்து பார்த்துக் கொண்டே வந்தால் - அல்லது அந்த சிறந்த புத்தகங்களில் சிலவற்றை- நீங்கள் காண விரும்பும் ஒவ்வொரு கொள்கையையும் காணலாம். இன்னும் சில நிமிடங்களில் பெண் பிரசங்கிகளைக் குறித்த விஷயத்தில் உங்களை அங்கு கொண்டு சென்று, அது எங்கிருந்து தொடங்கின என்று, அது ஆதியாகமத்தில் தொடங்கினது, என்று, காண்பிக்கப் போகிறேன்- இந்த வெவ்வேறு காரியங்கள் எவ்வாறு ஆதியாகமத்திலிருந்து வெளி தோன்றினது என்று. ஆதியாகமம் என்றால் “தொடக்கம்” என்று பொருள். எத்தனை பேருக்கு அது சரியென்று தெரியும்- ஆதியாகமம் என்பது தொடக்கம். எனவே எதற்குமே ஒரு தொடக்கம் இருக்கவேண்டும்.
34ஒரு மரத்தை நான் காணும் போது; நான் காடுகளில் ஏறக்குறைய மூன்று, இரண்டு மாதங்கள் இருந்தேன். ஒரு மரத்தை நான் பார்க்கும் போது, அது எவ்வளவு அழகாயுள்ளது. அதை நான் காண்கிறேன். அது கீழே செல்கிறது; வேறொன்று அதன் இடத்தில் தோன்றுகிறது. தொடர்ச்சியான ஜீவன். அதைக் குறித்து நான் சிந்தித்துப் பார்க்கிறேன். அந்த மரத்துக்கு எங்கோ ஒரு தொடக்கம் இருந்தது. அதற்கு ஒரு தொடக்கம் இருக்க வேண்டும். அதை ஒரு மரம் என்று அழைக்க, அல்லது கர்வாலிமரம், புன்னை மரம், பனைமரம் என்று வெவ்வேறு பெயர்களால் அழைக்க, அதற்கு பின்னால் ஒரு சிறந்த ஞானம் இருந்திருக்க வேண்டும். கர்வாலி மரம் ஒன்று மாத்திரமே இருந்திருந்தால், உலகத்திலுள்ள எல்லா மரங்களும் கர்வாலி மரமாகவே இருந்திருக்கும். ஆனால் ஏதோ ஒரு சிறந்த ஞானம் அதை ஒழுங்குப்படுத்த வேண்டியிருந்தது. அவருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
அவர் ஒருவர் மாத்திரமே சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் “சோலார் சிஸ்டத்தில்” (Solar System) வைத்தார். அவர் எல்லாவற்றையும் ஒழுங்கில் வைத்தார். அவருடைய சபையையும் அவர் ஒழுங்கில் வைப்பார். நமது ஸ்தாபன கருத்துக்களை நமது சிந்தையிலிருந்து எடுத்துப் போட்டு நம்மை முழுவதுமாக கல்வாரிக்குள் ஆழ்த்தும் போது, அந்த சபை அவர் விரும்பும் விதமாகவே கிழக்கு மேற்கு, வடக்கு, தெற்கு திசைகளில் சுழலும். நாம் மரங்களைப் போலவும் அவருடைய மற்ற சிருஷ்டிகள் போலவும், அவருக்குக் கீழ் அடங்கியிருப்போமானால், அவர் அதை ஒழுங்குக்குட்படுத்துவார். சந்திரன் ஒருக்காலும் இன்றிரவு நான் ஒளி கொடுக்கப் போவதில்லை. எனக்குப் பதிலாக உங்களில் சில நட்சத்திரங்கள் ஒளி கொடுங்கள்'' என்று சொல்வதை நீங்கள் கேட்க முடியாது. ஆனால் நாமோ அப்படியில்லை. நாம் வித்தியாசமானவர்கள் பாருங்கள்.
35இப்பொழுது, பாபிலோன், பாபிலோன் எவ்விதம் தோன்றினது என்பதைக் கவனியுங்கள். அது வேதத்தின் ஆரம்பத்தில் காணப்படுகிறது. அது வேதத்தின் மத்தியில் காணப்படுகிறது. அது வேதத்தின் கடைசியிலும் காணப்படுகிறது. அதில் ஏதோ ஒன்றுள்ளது. அது நிம்ரோத்திலும் காணப்படுகிறது. நிம்ரோத் சிநேயார் பள்ளத்தாக்கில் பாபிலோனை நிறுவினான். அது டைக்ரீஸ் நதிக்கும் ஐபிராத்து நதிக்கும் இடையே உள்ளது. ஐபிராத்து நதி அதன் வழியாக பாய்ந்தோடியது. அந்த தேசத்தின் எல்லா சாலைகளும் பாபிலோனுக்கு நேராக நடத்தின. அந்த கதவுகள் ஒவ்வொன்றும் இருநூறு அடி அகலமாயிருந்தன. அவை பித்தளையினால் செய்யப்பட்டிருந்தன. நீங்கள் பாபிலோன் நகரத்துக்கு சென்றால், ஒவ்வொரு தெருவும் சிங்காசனத்தை சென்றடையும்.
36இப்பொழுது, இன்று நீங்கள் ரோமாபுரிக்குச் சென்றால் ஒவ்வொரு சாலையும் ரோமாபுரியை சென்றடையும். அங்கு கன்னிமரியாள் ஒவ்வொரு ரஸ்தாவின் மூலையிலும் கிறிஸ்துவை கையில் பிடித்து உட்கார்ந்து கொண்டு ரோமாபுரிக்கு வழியைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறாள். பாருங்கள்? அது வேதத்தின் ஆரம்பத்தில் காணப்படுகிறது. அது வேதத்தின் மத்தியில் காணப்படுகிறது. இதோ அது வேதத்தின் கடைசியில் காணப்படுகிறது நான் சில நிமிடங்கள் படிக்க விரும்புகிறேன். அப்பொழுது நீங்கள் இதன் பின்னணியை அறிந்து கொள்வீர்கள், பாருங்கள். சரி.
அந்த ஸ்திரீ(இங்கு சபையைக் கவனியுங்கள், நீங்கள் ஸ்திரீ என்னும் சொல்லைக் காணும்போது அது சபை என்று நினைத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்) பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருக்கிறதைக் கண்டேன்...
வெளி.17:6
இப்பொழுது பரிசுத்தவான் என்னும் சொல் எங்கிருந்து வந்தது? அது “பரிசுத்தவானாக்கப்பட்டவன்” அல்லது “பரிசுத்தமாக்கப்பட்டவன்” என்பதிலிருந்து வந்தது. பரிசுத்தமாக்கப்பட்டவன்! சரி....
37அவள் பரிசுத்தவான்களின் இரத்தத்தினால்... வெறி கொண்டிருக்கிறதைக் கண்டேன்...
வெளி 17:6
இந்த ஸ்திரீ சபையாயிருந்தால், அவள் பரிசுத்தவான்களை துன்புறுத்துகிறாள். அவள் மகா பெரிய சபை, அவள் பூமி முழுவதிலும் அதிகாரம் பெற்றிருக்கிறாள், அவள் திரளான தண்ணீர்களின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம் பண்ணுகிறார்கள். நல்லது, அப்படியானால் அவள் யார்? ஒரு விதமான இரகசியம். இப்பொழுது ஆவியானவர்தாமே... சபையில் ஒன்பது விதமான ஆவிக்குரிய வரங்கள் உள்ளதாக கருதப்படுகிறது, உங்களுக்குத் தெரியும். ஒன்று ஞானம், ஒன்று அறிவை உணர்த்துதல், ஒன்று குணமாக்கும் வரம்போன்றவை...
இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும்
வெளி. 17:6
அவர்கள் இயேசு கூறினதற்கு அதிக அக்கறை கொள்ளாமல், சபை கூறினதற்கே அக்கறை கொண்டதாக தோன்றுகிறது. அது உண்மை, அது சரி
38...அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
வெளி. 17:6
''அவளைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். நான் அவளைப் பற்றி ஆச்சரியமான காரியம் இருந்தது. அவள் எப்படி... என்று வியந்தேன். நான் யோவானின் இடத்தை எடுத்துக் கொண்டு அதை சிறிது தெளிவாக்க முயற்சி செய்கிறேன். பாருங்கள். யோவான், ''அதோ அவள் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் கிறிஸ்தவ சபையைப் போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறாள். உலகிலுள்ள ஐசுவரியம் அனைத்தின் மேலும் அவளுக்கு உரிமையுண்டு. பூமியின் ராஜாக்கள் அவளுடைய காலடியில் இருக்கின்றனர். அவள் ஐசுவரியமுள்ளவளும் கவர்ச்சியான நிறங்களைக் கொண்டவளுமாயிருக்கிறாள். அவள் எப்படி இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினால் வெறி கொண்டிருக்க முடியும்? அவள் எப்படி பரிசுத்தவான்களை துன்புறுத்த முடியும்? அவள் தன்னைக் கிறிஸ்தவள், கிறிஸ்தவ சபை என்று சொல்லிக்கொண்டு அதே நேரத்தில் எப்படி கிறிஸ்துவின் சாட்சிகளைக் கொல்ல முடியும்?'' என்று வியக்கிறான்.
39இப்பொழுது கவனியுங்கள்
அப்பொழுது, துதனாவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
வெளி.17:7
இப்பொழுது, இது பொதுவான வாசிப்பு. நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள். இது மிகவும் எளிது.
நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப் போகிறது; உலகத் தோற்ற முதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற் போனதும் இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
வெளி.17:8
இது தட்டி எழுப்ப வேண்டும். எனவே இதோ இது- இப்பொழுது கவனியுங்கள். எல்லோருமே, ஒரு சிலர் அல்ல, பூமியின் குடிகள் அனைவருமே ஆச்சரியப்படுவார்கள் என்று தூதன் கூறினான். முழுஉலகமே இந்த ஸ்திரீயைக் குறித்து ஆச்சரியப்படும். ஆனால் அதை குறித்து ஆச்சரியப்படாத ஒரு கூட்டத்தார் இருப்பார்கள். அவர்கள் ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவர்கள்.
40இதை நான் இப்பொழுதே உள்ளே திணித்துவிடுவது நலம், ஏனெனில் அதற்கு நாம் இன்னும் சில நிமிடங்களில் வரப்போகிறோம். பாருங்கள் அவர்களுடைய பெயர்கள் எப்பொழுது ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டன? எப்பொழுது முதல்? அவர்கள் பங்கு கொண்ட கடைசி எழுப்புதலின் போதா? அவர்கள் பீடத்தண்டையில் சென்ற அந்த இரவா? உங்களை புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் அவர்களுடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் “உலகத் தோற்ற முதல் எழுதப்பட்டதாக வேதம் உரைக்கிறதென்று உங்களுக்கு எடுத்து கூறுகிறேன்”. முற்றிலுமாக! தேவன், தொடக்கத்தில், தம் குமாரனை அனுப்புவதாகவும் அந்த தேவனுடைய குமாரன் பாவியின் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு, தமது இரத்தத்தைச் சிந்துவாரென்றும் கண்டார். அவருடைய இரத்தம் உலகத் தோற்றத்துக்கு முன்பே சிந்தப்பட்டதாக வேதம் உரைக்கிறது. கிறிஸ்துவின் இரத்தம் உலகத் தோற்றத்துக்கு முன்பே சிந்தப்பட்டதென்று எத்தனைபேர் அறிவீர்கள்? அவருடைய இரத்தம் சிந்தப்பட்டபோது, அவருடைய சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினரின் பெயரும் அந்த இரத்தத்தினால் ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டது. நீங்கள் அதைக் குறித்து மிகவும் பயப்படுகிறீர்களா?, சகோதரனே, அது கதவுகளைத் திறக்கிறது அல்லவா?
41நல்லது, இதை இப்பொழுது வாசித்து, அது சொல்லுகிறது சரியா என்று பார்ப்போம். அப்பொழுது தூதனானவன் என்னை நோக்கி, ஏன்... ''அது 8-ம் வசனம் என்று நினைக்கிறேன். “நீ கண்ட மிருகம்...'' சரி, அதுதான்.
நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து.... (நாம் மீண்டும் அதைப் படிக்கிறோம். ஏனெனில் நான் மற்ற காரியத்தைப் பார்க்க விரும்புகிறேன். அதை விரைவில் காணப்போகிறோம் )... நாசமடையப் போகிறது. உலகத் தோற்ற முதல் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள்... ஆச்சரியப்படுவார்கள்.
வேறு விதமாகக் கூறினால் பூமியின் மேலுள்ள ஒரு கூட்டத்தார் வஞ்சிக்கப்படுவார்கள். அவன் அவர்களை வஞ்சித்துவிட்டான். ஆனால் ஒரே ஒருகூட்டத்தார் மட்டும் வஞ்சிக்கப்படவில்லை. அவர்கள் தான் உலகத் தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவர்கள். சற்று கழிந்து அந்த வசனத்துக்கு நாம் வருகிறோம்.
42இப்பொழுது கவனியுங்கள், அந்த ஸ்திரீ, அந்த சபை, அவள் பாபிலோன் இரகசியம். அவள் நிம்ரோதின் மூலம் தோன்றுவதை நாம் காண்கிறோம். நிம்ரோதின் நோக்கம் என்ன? நிம்ரோத் ஒரு நகரத்தைக் கட்டி உண்டாக்கி, மற்றெல்லா நகரங்களும் அதற்கு கப்பம் கட்டும்படி செய்தான். இன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு செயலை நாம் காண்கிறோமா? அப்படிப்பட்ட ஒரு இடம் இன்று உண்டா? உலகிலுள்ள எல்லா நாடுகளின் மேலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சபை உள்ளதா? நிச்சயமாக. எல்லா நாடுகளும் தனக்கு கப்பம் கட்ட செய்யும் ஒரு இடம் இன்று உள்ளதா? அப்படிப்பட்ட ஒரு இடம் உள்ளதா? நாம் தொடர்ந்து அந்த வசனத்தின் எஞ்சிய பாகத்தைப் படிப்போம். சிறிதளவே. அப்பொழுது நீங்கள் முழு காட்சியையும் அறிந்து கொள்வீர்கள். சரி.
...இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற... ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும்....
வெளி. 17:8-9
ஞானம் என்பது ஆவியின் வரங்களில் ஒன்று என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? அப்படியானால் அவர் எந்தவிதமான கூட்டத்தாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்? ஆவியின் வரங்கள் சபையில் கிரியை செய்யும் அந்த கூட்டம் ஜனங்களிடமே அவர் பேசிக் கொண்டிருக்க வேண்டும்.
ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும்...
வெளி. 17:9
43இங்கு நிறுத்திக் கொண்டு, சபை காலங்கள் தோறும் அதை வெளி கொணர்வோம். இந்த வரங்கள் எவ்விதம் கடைசி நாட்களில் கிரியை செய்யும் என்பதை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படை யாக உரைக்கிறார். இப்பொழுது நம்மிடையே குணமாக்கும் வரம் கிரியை செய்கிறது. ஓ, அது மிகவும் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. நல்லது, சகோதரனே, மற்ற வரங்களும் உள்ளன! இது அவைகளில் ஒன்று. இது ஒரு சிறிய காரியம். நல்லது, இதைக் காட்டிலும் பெரிய வரம் இதோ இங்கே உள்ளது. அதுவே மிகச் சிறந்த வரம். அதுதான் ஞானம் என்னும் பரிசுத்த ஆவியின் வரம். அது தேவனுடைய வார்த்தையை ஒன்றாக கோர்த்து, நாம் எந்நிலையில் உள்ளோம் என்பதை சபைக்கு காண்பிக்கிறது. வேறொருவரை குணமாக்குவதை விட இது மேலானது. நாம் அனைவரும் சுகமாக இருக்கிறோம். ஆனால் என் சரீரம் சுகமாயிருப்பதைக் காட்டிலும் என் ஆத்துமா சுகமாயிருப்பதையே நான் எந்த நேரத்திலும் விரும்புவேன். ஓ, என்னே! இங்கே பரிசுத்த ஆவியானவர் பத்மு தீவிலுள்ள யோவானின் மூலம், “இது தான் ஞானம், இதற்கு அவன் செவி கொடுக்கட்டும்'' என்கிறார். இப்பொழுது ஒரு சித்திரம் இங்கு வரையப்படுவதை நாம் காண்கிறோம்.
44ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
வெளி. 17:9
எனக்குத் தெரிந்த வரையில் உலகிலேயே ஏழு மலைகளின் மேலுள்ள நகரம் ஒன்று மட்டும்தான். ஏழுஅல்லது அதற்கு அதிகமான மலைகளின் மேலுள்ளவை. இரு நகரங்கள் என்று கூறலாம். அவைகளில் ஒன்று சின்சினாட்டி. சின்சினாட்டியை குறித்த ஒரு கட்டுக் கதை உண்டு. ஏதோ ஒரு ஓநாய், அது உங்களுக்குத் தெரியும். அதைக் காட்டிலும், அதிகமாக இதில் உள்ளது. சின்சினாட்டியின் மேல் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சபை எதுவுமில்லை. உலகம் முழுவதிலுமே. ஏழு மலைகளின் மேல் உட்கார்ந்து கொண்டு முழு உலகத்தின் மேலும் ஆதிக்கம் செலுத்தும் சபை ஒன்றே ஒன்றுதான். நான் தொடக்கத்திலிருந்து எல்லாவற்றையும் விவரித்து வந்தேன். வெளிப்படுத்தின விசேஷம் 13-ம் அதிகாரத்திலும், ''இதிலே ஞானம் விளங்கும். அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கக்கடவன். அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது'' என்று உரைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறேன். ஒரு கூட்டம் மனிதர் அல்ல. ஆனால் ஒரு மனிதன் - அவனுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
45ரோமாபுரியிலுள்ள போப்பின் சிம்மாசனத்தின் மேல் “விக்காரிவ்ஸ் பிலிஐ டெய்'' (Vicarius filii Dei) என்று எழுதப்பட்டுள்ளதாக நான் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா என்று அடிக்கடி வியந்ததுண்டு. ஒரு கோடிட்டு அதன் ரோம் எண்களைக் கூட்டிப் பார்த்து அது அறுநூற்றறுபத்தாறு தானா என்று அறிந்து கொள்ளுங்கள். அது முற்றிலும் உண்மை. நான் கண்ணாடிக்குள் வைக்கப்பட்டுள்ள போப்பின் முக கிரீடத்திற்கு இவ்வளவு அருகில் நின்றியிருக்கிறேன். நரகம், பரலோகம், பாவ விமோசன ஸ்தலம் ஆகியவைகளின் மேல் அதிகாரம், பாருங்கள். எனவே இந்த காரியங்கள், நான் இப்பொழுதான் அங்கிருந்து, ரோமாபுரியிலிருந்து திரும்பி வந்தேன். அது உண்மை என்று எனக்குத் தெரியும். அது சித்திரிக்கப்பட்டுள்ளதென்று நாமறிவோம்.
அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்து பேர் விழுந்தார்கள் (அது முந்தைய காலத்தில்), ஒருவன் இருக்கிறான் (அதுதான் அப்பொழுது வந்தவன் சீசர்), மற்றவன் இன்னும் வரவில்லை (அவன் ஏரோது, பொல்லாதவன்)...
வெளி. 17:10
இப்பொழுது கவனியுங்கள், இது எவ்வளவு பிழையற்றதாய் உள்ளதென்று
...வரும்போது அவன் கொஞ்சக் காலம் தரித்திருக்க வேண்டும்.
வெளி. 17:10
ஏரோது எவ்வளவு காலம் ஆட்சி செய்தானென்று யாருக்காவது தெரியுமா? ஆறு மாதங்கள். அவன் தன் தாயை ஒரு மரத்தில் கட்டி குதிரையைக் கொண்டு தெருக்களில் இழுத்துச் சென்றான். அவன் நகரத்தை சுட்டெரித்து, பழியை கிறிஸ்தவர்கள் மேல் சுமத்தி, அவர்கள் நகரத்தை சுட்டெரிக்கும் போது மலையடி வாரத்தில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தான். ஆறு மாதங்கள். பாருங்கள், “மிருகம்...” இப்பொழுது கவனியுங்கள். அவன் எவ்வளவு அயோக்கினாய் இருந்தான் என்று, பாருங்கள்?
46இப்பொழுது கவனியுங்கள்.
இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும் அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும் (ஏழாவதின் இயல்பைப் பெற்றவன்) நாசமடையப் போகிறவனுமாயிருக்கிறான் (ஆங்கிலத்தில் “Goeth into perdition” -
அதாவது ''பாதாளத்துக்குப் போகிறவனு மாயிருக்கிறான் என்று எழுதப்பட்டுள்ளது? தமிழாக்கியோன்)
வெளி. 17:11
அது “பாதாளம்” என்று எவருக்குமே தெரியும். அவன் எங்கிருந்து ஏறி வந்தான் என்பதைக் கவனியுங்கள். ''பாதாளத்திலிருந்து“. ''அது என்ன? அடிபாகம் இல்லாத குழி (bottom less pit). கத்தோலிக்க உபதேசத்துக்கு ஆதாரம் எதுவுமில்லை. கத்தோலிக்க உபதேசத்துக்கு வேதாகமம் எதுவுமில்லை. எந்த கத்தோலிக்க உபதேசத்துக்கும் வேதாகமம் என்று ஒன்று கிடையவே கிடையாது. அவ்விதம் உள்ளதாக அவர்கள் உரிமை கோருவதில்லை. அந்த கத்தோலிக்க குருவானவர் சொன்னார், புனித இருதய சபையின் குருவானவர் என்னிடம் வந்து, ”ஓ, அவர்...'' அவரிடம் நான் மேரி எலிசபெத் ஃப்ரேஸியர் என்பவளுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததைக் குறித்து கூறிக் கொண்டிருந்தேன். அவர், ''ஓ, ஆதி கத்தோலிக்க சபை ஞானஸ்நானம் கொடுத்த விதமாகவே நீங்கள் அவளுக்கு கொடுத்திருக்கிறீர்கள்“ என்றார்.
''அவர்கள் எப்பொழுது அவ்விதம் கொடுத்தார்கள்“? என்றேன்.
''வேதாகமத்தில், உங்கள் வேதாகமத்தில்“ என்றார்.
“கத்தோலிக்க சபை அவ்விதம் ஞானஸ்நானம் கொடுத்ததா? அது கத்தோலிக்க உபதேசமா?'' என்று கேட்டேன்.
“ஆம்'' என்றார்.
''பிழையற்ற கத்தோலிக்க சபை ஏன் இதை இவ்வளவாக மாற்றி போட்டது?'' என்று கேட்டேன். பாருங்கள்?
அதற்கு அவர், ''நல்லது, பாருங்கள், நீங்கள் எல்லோரும் வேதத்தை விசுவாசிக்கிறீர்கள், நாங்கள் சபையை விசுவாசிக்கிறோம்'' என்றார். பாருங்கள்? “வேதம் என்ன கூறுகிறதென்று எங்களுக்கு அக்கறையில்லை. சபை என்ன கூறுகிறதோ அதுதான்'' என்றார். அது முற்றிலும் உண்மை. நீங்கள் எப்பொழுதாகிலும் அவர்களிடம் விவாதிக்க நேரிட்டால், ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். வேதம் என்ன கூறுகிறதென்று அவர்களுக்கு அக்கறையில்லை. அதற்கும் அவர்களுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. சபை என்ன கூறுகிறதோ அதுதான் அவர்களுக்கு முக்கியம். பாருங்கள்?
நமக்கோ சபை என்ன கூறுகிறதோ அது முக்கியமல்ல. தேவன் என்ன கூறுகிறாரோ அதையே நாம் விசுவாசிக்கிறோம். ஏனெனில் வேதாகமத்தில் ''எந்த மனுஷனும் பொய்யன், நானே சத்தியபரர்“ என்று உரைக்கப்பட்டுள்ளது. ஆகையால் தான் நாம் ஸ்தாபனமாக இல்லை.
47இப்பொழுது கவனியுங்கள். ஒரு நிமிடம் இதற்கு செவி கொடுங்கள். ''ஐந்து ராஜாக்கள் விழுந்தார்கள். இதை நீங்கள் வரலாற்றிலிருந்து அறிய விரும்பினால், உங்களுக்குக் காண்பிக்கிறேன். “ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை, இனிமேல் வரப்போகிறான்.'' இப்பொழுது கவனியுங்கள். ''மிருகம்.'' மிருகம் ராஜாவல்ல. அது இருந்ததும் இராததுமாயிருக்கிறது. அது இருந்ததும் இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிறது. அது என்ன? வழிவழியாக வந்து போப்புகள், அதிகாரம், மிருகம் ஆட்சி செய்கிறது. அது அஞ்ஞான ரோமாபுரி மாறினபோது, அது போப்பின் ரோமாபுரியாக ஆனது. அவர்கள் ராஜாவுக்கு பதிலாக போப்பைப் பெற்றுக் கொண்டனர். போப் ஆவிக்குரிய ராஜா, ஆகையால்தான் அவர் ஆவிக்குரிய ராஜாவாக முடிசூட்டப்பட்டிருக்கிறார். அவர் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி என்று உரிமை கோருகிறார். பார்த்தீர்களா?
48இப்பொழுது கவனியுங்கள்.
அதிலிருந்து நாங்கள் கத்தோலிக்க உபதேசத்தை வெளி கொணர்ந்து, அது எவ்வாறு பிராடெஸ்டெண்டு சபைகளில் தந்திரமாக நுழைந்ததென்றும், பாருங்கள், அவைகளில் அநேக உபதேசங்கள் இன்னும் பிராடெஸ்டெண்டு சபைகளில் கிடக்கின்றன என்பதையும் காண்பிக்கப் போகிறோம். அது வேதத்துக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது. இப்பொழுது, இருந்ததும் இராததுமாகிய மிருகம் இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். உலகத்தோற்ற முதல் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் அனைவரும் வஞ்சிக்கப்படுவார்கள்.
49இப்பொழுது பார்ப்போம்.
இருந்ததும் இராததுமாகிய மிருகமே (11ம் வசனம்) எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப் போகிறவனுமாயிருக்கிறான். (அவன் பாதையின் முடிவில் பாதாளத்துக்குப் போகும் வரைக்கும் தொடர்ந்து இருந்து கொண்டேயிருப்பான்.)
நீ கண்ட பத்து கொம்புகளும் பத்து ராஜாக்களாம்.... (இங்கு கவனியுங்கள். நீங்கள் விசேஷமான ஒன்றைக் காண விரும்பினால், இதைக் கவனியுங்கள்)... ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனே கூட ஒரு மணி நேரமளவும் ராஜாக்கள் போல அதிகாரம் பெற்றுக் கொள்கிறார்கள்.
வெளி. 17: 11-12
இவர்கள் ராஜாக்களாக முடி சூட்டப்படவில்லை அவர்கள் சர்வாதிகாரிகள். பாருங்கள் இவர்கள் ஒருபோதும் ராஜாக்களாக முடி சூடப்படவில்லை. ஆனால் மிருகத்துடனே கூட ஒரு மணி நேரமளவும் ராஜாக்கள் போல் அதிகாரம் பெற்றுக் கொள்கிறார்கள். இப்பொழுதுள்ள இந்த குறுகிய காலத்தில்தான் சர்வதிகாரிகள் எழும்புகின்றனர், பாருங்கள், ''ஒரு மணி நேரமளவும் ராஜாக்கள் போல் அதிகாரம் பெற்றுக் கொள்கிறார்கள்“.
50இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள், இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம் பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார் (மகிமை!) அவரோடு கூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.
வெளி. 17: 13-14
உலகத் தோற்றத்துக்கு முன் ''தெரிந்து கொள்ளப்பட்டு, தங்களுடைய அழைப்பில் உண்மையுள்ளவர்களாயிருக்கின்றனர் என்பதன் பேரில் இப்பொழுது ஒரு பிரசங்கம் என்னால் நிகழ்த்த முடியுமானால் நலமாயிருக்கும். அல்லேலூயா! அதுதான் அழைக்கப்பட்டவர்கள். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ''உண்மையுள்ளவர்கள் அவர்கள் எவ்வளவு அதிகம் பேராயிருந்தாலும், இவர்கள் அவர்களை ஜெயிப்பார்கள்“.
51இந்த மகத்தான கம்யூனிஸம், இன்று நாம் பெற்றுள்ள கம்யூனிஸத்தைக் குறித்து கவலைப்பட வேண்டம். அது சரியாக தேவனுடைய கரங்களில் இருந்து கொண்டு கிரியை செய்து கொண்டிருக்கிறது. அவள் (கத்தோலிக்க மார்க்கம்- தமிழாக்கியோன்) கொன்று போட்ட ஒவ்வொரு இரத்த சாட்சியினிமித்தம் அவளை அவர் பாடுபடுத்துவார். ஆம், ஐயா. இந்த ராஜாக்கள் ஒரே யோசனையுள்ளவர்களாகி அவளை வெறுக்கப் போவதை கவனித்து வாருங்கள். எல்லா நாடுகளிலும், முழு உலகத்திலுமே கம்யூனிஸம் பரவியுள்ளது. ஏன்? அதை தண்டிக்க அது தேவனுடைய அசைவாய் அமைய வேண்டும். நீங்கள், ''சகோ. பிரன்ஹாமே, ஒரு நிமிடம் பொறுங்கள். கம்யூனிஸம் தேவனுடைய அசைவா?'' எனலாம் முற்றிலுமாக, நிச்சயமாக, அது தேவனுடைய அசைவே. வேதம் அவ்வாறு உரைக்கிறது. அது தேவ பக்தியில்லாத, அவமானத்துக்குரிய, முறை தவறின மக்களின் மேல் நியாயத்தை உரைக்க அசைந்து கொண்டிக்கிறது.
இந்த உலகில் வேறென்ன நமக்கு விடப்பட்டுள்ளது? நமக்கு வேறென்ன உள்ளது?
52இங்கு அன்றொரு நாள்... இப்பொழுது என் பொருளின் பேரில் பேசுவதை கூடுமானால் ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்கிறேன். வேசிப்பிள்ளை பதினான்கு தலைமுறைகளுக்கு கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது என்னும் வேத பாகத்தை நான் படித்துக் கொண்டிருந்தேன். எத்தனை பேருக்கு அது தெரியும்? அது உண்மை. உபாகமம் -23, வேசிப்பிள்ளை. ஒரு ஸ்திரீ மனித பாதுகாப்பற்ற வயலில் அகப்பட்டுக் கொண்டு, ஒரு மனிதன் அவளை மேற்கொண்டால், அவளை அவன் விவாகம் செய்துகொள்ள வேண்டும். அவள் வேசியாக இருந்தாலும், அவள் மரிக்கும் வரைக்கும் அவளுடன் வாழ வேண்டும். இந்த ஸ்திரீ கன்னிகையைப் போல் நடித்துக் கொண்டு அவனை விவாகம் செய்து கொண்டு, அவள் கன்னிகையாயிராமல் போனால், அதற்காக அவள் கொலை செய்யப்படலாம். மனிதனும் ஒரு ஸ்திரீயும் முறை தவறிப் பிறந்த குழந்தை பிறக்கக் காரணமாயிருந்தால், அந்த குழந்தை பதினான்கு தலைமுறைகளுக்கு கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. ஒரு தலைமுறைக்கு நாற்பது ஆண்டுகள். அந்த சந்ததி நானூறு ஆண்டுகளாக இஸ்ரவேலின் சபைக்குள் வரமுடியாது.
53தேவன் பாவத்தை வெறுக்கிறார்! நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தை சேர்ந்து கொண்டு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பரிசுத்த இரத்தத்தின் வழியாக நடந்து சென்று, உள்ளே பிரவேசித்துவிடலாமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்? நீங்கள் தேவனுடைய நிபந்தனைக்கு வரவேண்டும்; இல்லையெனில் நீங்கள் வரவே முடியாது. உண்மை! டீகன், பிரசங்கி யாராயிருந்தாலும், வரவே முடியாது. நீங்கள் தேவனுடைய நிபந்தனைக்கு உட்பட வேண்டும்.
பதினான்கு தலைமுறைகள். இப்பொழுது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு நபர் அதைக் குறித்து என்னிடம் விவாதித்துக் கொண்டிருந்தார். அவர் ''அப்படியானால் யார் இரட்சிக்கப்படுவார்கள் என்று நமக்கு எப்படித் தெரியும்?'' என்று கேட்டார்.
நான், ''அங்கு தான் நீங்கள் ஒரு நல்ல கால்வீனியராக விளங்கவேண்டும்'' என்றேன். உங்கள் பெயர் உலகத் தோற்றத்துக்கு முன்பே புத்தகத்தில் எழுதப்பட்டுவிட்டது. தேவன் அந்த இரத்த வெள்ளத்தை எடுத்துக் கொள்கிறார். அது அவரைப் பொறுத்தது. பாருங்கள்.
''நல்லது, அப்படியானால் அதற்கும்...''
54இன்றைய வாலிபரே, கேளுங்கள். வாலிப பையன்களும் வாலிபப் பெண்களுமாகிய நீங்கள் இந்த சபைக்கு வருகிறீர்களோ அல்லது எங்கு செல்கின்றீர்களோ எனக்கு தெரியாது. நீங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த காரியங்களுக்காக, இன்னுமொரு சந்ததி இருக்குமானால், உங்கள் பிள்ளைகள் நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்களா? உங்களுக்கு ஏன் மரியாதையோ ஒழுக்கமோ இல்லை? இங்கு குட்டை கால் சட்டைகளையும் மற்றவைகளையும் அணிந்துள்ள பெண்களே, அது உங்கள் மகளைப் பாதிக்கும். உங்கள் பாட்டி வெளியிலேயே வராத பெண்ணாக இருந்தாள் (flapper) என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் தாய் கோரஸ் பெண்ணாக இருந்ததால் தான் நீங்கள் இன்று அரைநிர்வாணிகளாக இருக்கிறீர்களா? நிச்சயமாக உங்கள் பிள்ளைகள் என்னவாயிருப்பார்கள்? ஆம், ஐயா, தேவன் பெற்றோரின் அக்கிரமத்தை பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளின் பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
55என் சகோதரனே, நீ நன்மையானதை செய்யும் ஒவ்வொரு முறையும், அது உன் பிள்ளைகளின் மேல் வருகிறது என்பதை நீ உணர்ந்திருக்கிறாயா?
இங்கு பாருங்கள், நாம் எபிரெயர் 7-ம் அதிகாரத்தை எடுத்துக்கொள்வாம். ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாமுக்கு மெல்கிசேதேக்கு எதிர்கொண்டு போன போது, அவனை ஆசீர்வதித்தான். இப்பொழுது லேவி தசமபாகம் கொடுப்பதைக் குறித்து பவுல் இங்கு பேசுகிறான். அவன் “லேவி தன் சகோதரரிடத்தில் தசம பாகம் வாங்க கர்த்தரிடத்தில் கட்டளை பெற்றிருந்தான். தசமபாகம் வாங்குகிற லேவி தசமபாகம் கொடுத்தான்” என்றான். ஏனெனில் ஆபிரகாம் மெல்கிசேதேக்கை சந்தித்தபோது, அவன் ஆபிரகாமின் அரையில் இருந்தான். ஆபிரகாம் அவனுக்கு முப்பாட்டன். ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு லேவியைப் பெற்றான். எனவே லேவி, தகப்பன், பாட்டன், முப்பாட்டன். லேவி ஆபிரகாமின் அரையிலிருந்தபோது, அவன் மெல்கிசேதேக்குக்கு தசமபாகம் செலுத்தினான் என்று வேதம் உரைக்கிறது. அல்லேலூயா!
உலகிலுள்ள எந்த ஒரு அசைவும் தேவனுடைய மகத்தான பல்சக்கரம் சுழலுவதை தடை செய்யுமென்று யாரும் உங்களிடம் கூற அனுமதிக்க வேண்டாம். அது இப்பொழுதும் சுழன்று போய்க் கொண்டேயிருக்கிறது. அது துவக்கத்தில் திட்டம் செய்யப்பட்டது. அவருடைய திட்டத்தில் தலையிட போதுமான பிசாசுகள் கிடையாது.
56லேவி “மறைமுகமாக” தசமபாகம் செலுத்தினதாக வேதம் கூறவில்லை. அவன் முப்பாட்டனின் அரையிலிருந்த போது ''தசமபாகம் செலுத்தினான்“ என்றுதான் அது உரைக்கிறது. மகிமை!அது என் கர்த்தர். ஓ, உலகம் உண்டாக்கப்படுவதற்கு முன்பே அவர் அதை அறிந்திருந்தார். அவர் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். அவன் ஆபிரகாமுக்குள் இருந்த போது தசமபாகம் செலுத்தினான்.
சகோதரியே, சகோதரனே, நீங்கள் எங்ஙனம் இவ்விதமாக ஓடித்திரிய முடிகிறது? ஜனங்கள் வேறு மனிதரின் மனைவிகளுடன் ஒடித் திரிவதும், மனைவிகள் குடும்பங்களைப் பிரித்து இந்த விதமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அடுத்த தலைமுறை எவ்விதம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? இப்படித்தான் அது உள்ளது. அது ஒரு கூட்டம் முறை தவறிப் பிறந்த குழப்பத்தில் ஆழ்ந்த அழிவுக்துேவானவர்கள் கொண்டதாய் உள்ளதேயன்றி வேறல்ல. ஒன்று மாத்திரமே அதற்கு விடப்பட்டுள்ளது. அதுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அணுகுண்டு நாள். அது முற்றிலும் உண்மை. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம்.
57இன்று காலையில், தூரத்திலுள்ள கென்டக்கி மலைகளில் ஒரு சிறுவன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு பத்து அடி அருகில் கூட உங்களால் செல்ல முடியாது. அவன் சொர்க்கம் சர்க்கரை குழம்பு (Sorghum molasses) தயாரிப்பவன். அவன் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாதவன். அவன் கேட்ட போது... அங்கு நான் கம்பங்கள் நடப்பட்டிருந்த இடத்தின் மேலேறினேன். நான் இருந்த இடம் எனக்குத் தெரியவில்லை. நான் அங்கு அணில் வேட்டைக்கு சென்று கொண்டிருந்தேன். நான் உட்கார்ந்த போது, அந்த பையனுடன் பேச ஆரம்பித்தேன். அவன் இராணுவத்தில் சேர வேண்டியவனாயிருந்தான். நாங்கள் பேசிக் கொண்டே இருந்து விட்டு, கர்த்தரைக் குறித்து பேச ஆரம்பித்தோம். அவன் ''பிரசங்கியே, நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் அல்லவா?'' என்று கேட்டான்.
''நான் நிச்சயமாக, அப்படித்தான். நிச்சயமாக, மகனே நாம் முடிவுகாலத்தில் இருக்கிறோம்'' என்றேன்.
58பார்த்தீர்களா? அந்த நேரத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், சகோதரனே, அந்த இடத்திற்கு நாம் வந்து விட்டோம். முன் காலத்திலிருந்த தாய்மார்களும் தந்தைமார்களும் பாட்டன்மார்களும் பாட்டிமார்களும் எப்படி வாழ்ந்தனர் என்று உங்களால் காண முடியவில்லையா?தந்தைமார்களும் தாய்மார்களும் எப்படி வாழ்ந்தனர் என்று உங்களால் காண முடியவில்லையா? இன்று அழிவுக்கேதுவான நிலையில் இருக்கிறோம் என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தலைதெறிக்க பிரசங்கத்தாலும் அவர்கள் குட்டை கால்சட்டை அணிந்து உங்கள் முகத்தில் துப்புவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர்கள் சிகரெட்டுகள் புகைத்து உங்கள் மேல் புகையை ஊதி, “உங்கள் வேலையைப் பாருங்கள்'' என்கின்றனர். ஏன்? ஏனெனில் அந்த இனத்திலிருந்து அவர்கள் வருகின்றனர். நான் நேரடியாக சர்ப்பத்தின் வித்து என்பதை எடுத்துக் கொள்ளபோகிறேன். அது எங்கே நகர்ந்து செல்கிறதென்றும், அவர்கள் ஏன் அவ்விதம் நடந்து கொள்கின்றனர் என்றும் நாம் காண்போம். அவர்கள் உலகத் தோற்ற முதற்கொண்டே பிசாசின் பிள்ளைகள். அது உண்மை.
நமக்கு வேறொன்றும் விடப்படவில்லை. நியாத்தீர்ப்பு ஒன்று மாத்திரமே விடப்பட்டுள்ளது. நியாயத்தீர்ப்பைத் தவிர வேறொன்றும் இருக்கமுடியாது. தேவன் எல்லாவற்றையும் அடியோடு அழித்துவிடுவார். மனிதர்களே அதை தங்கள் மேல் வருவித்துக் கொண்டனர். அது அவ்விதமாக இருக்க வேண்டுமென்பது தேவனுடைய எண்ணமல்ல. ஆனால் அது அவ்விதமாக இருக்குமென்று அவர் அறிந்திருந்தார். ஆகையால் தான், உலகத் தோற்ற முதல் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத அனைவரையும் அவன் மோசம் போக்குவான் என்று அவர் உரைத்திருக்கிறார்.
59இப்பொழுது நாம் சிறிது தொடர்ந்து படிப்போம். இப்பொழுது நாம் 12-ம் வசனத்திலிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனே கூட ஒரு மணி நேரமளவும் ராஜாக்கள் போல அதிகாரம் பெற்றுக் கொள்ளுகிறார்கள்.
இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம் பண்ணுவார்கள்; ஆட்டுக் குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு கூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.
பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
வெளி 17: 12-15.
60இப்பொழுது இதை கவனியுங்கள். இந்த பத்து கொம்புகள், இந்த பத்து “ராஜ்யங்கள் பாருங்கள். எல்லாமே சரியாக பொருந்துகிறது. இந்த சர்வாதிகாரிகள் யாரென்று, சர்வதிகாரிகள் எந்தப் பக்கம் சாய்கின்றனர் என்பதைக் கவனியுங்கள். அவர்கள் எங்கு சாய்கின்றனர்? கம்யூனிஸம் பக்கம் சாயாத ஒரு சர்வாதிகாரியை எனக்குக் காண்பியுங்கள். பாருங்கள்? அவர்கள் என்ன செய்வார்கள்?''அந்த வேசியைப் பகைப்பார்கள் - அந்த ஸ்திரீயை, அந்த சபையை. ஆனால் என்ன? அதை செய்யப்போவது எது என்பதைக் கவனியுங்கள்.
நீ மிருகத்தின் மேல் கண்ட பத்துக் கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள்.
வெளி. 17:16
61அவர்கள் அதை வரைப் படத்திலிருந்தே எடுத்துப்போடுவார்கள் - இங்கு நான் நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக. நமக்கு நேரமிருந்தால் அந்த சபையைக் குறித்த பொருளை நாம் எடுத்துக்கொண்டு, வேத வாக்கியங்களில் ''பூமியின் ராஜாக்களும், மாலுமிகள் யாவரும் அழுது துக்கித்து ஓலமிடுவார்கள். ஏனெனில் பாபிலோன் ஒரு நாழிகையிலே பாழாய்ப்போனாள்'' என்று எழுதியிருக்கிறவைகளைக் காணலாம். ஓ, “அவர் எவ்வாறு பரிசுத்தவான்களே! பரிசுத்த தீர்க்கதரிசிகளே அவளைக் குறித்துக் களிகூருங்கள். அவளிடத்தில் காணப்பட்ட தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தின் நிமித்தமாகவும் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தின் நிமித்தமாகவும் அவளை நியாந்தீர்த்தார்'' என்று கூறியுள்ளார் பாருங்கள், அது உண்மை. நிச்சயமாக கம்யுனிஸம் தேவனுடைய கரங்களிலிருந்து கொண்டு கிரியை செய்கிறது. நேபுகாத் நேச்சார் தேவனுடைய கையாளாக யூதர்களைச் சிறை பிடித்து நிர்வாணமாக நடத்திக்கொண்டு சென்றது போல.
62பாவம் அழித்துக் கொண்டே போகும். அங்கு ஒரு நீதியுள்ள வித்து இருக்குமானால், அது சிறிது சிறிதாக அழிந்து, சற்று கழிந்து முழுவதும் அழிந்து போகும். அது அந்த நிலையை அடைந்து விடுகிறது. ஏனெனில் அவர்களுடைய தாய்மார்களும் தகப்பன்மார்களும், அவ்விதம் நமக்கு முன்பு வாழ்ந்து வந்தனர், அந்தப் பொல்லாதது, நமக்கு வேறொன்றும் விடப்படவில்லை. இயேசு என்ன சொன்னார் தெரியுமா?அந்நாட்களை அவர் குறைக்காமல் போனால் ஒருவனும் தப்பிப்போவதில்லை என்று (மத். 24:22).
63இவைகளை நாம் ஏன் பெற்றிருக்கிறோம் என்று உங்களால் காண முடிகிறதா? நான் குறை கூறுவதாக எண்ண வேண்டாம். ஆர்தர் காட்ஃப்ரீஸம் மற்றவர்களும், உங்களுக்குத் தெரியும், எல்விஸ் பிரஸ்லியைப் போலவும் இடுப்பு வரைக்கும் மேற் கோட்டுக்கள் (Overalls), தலை மயிர் கழுத்து வரைக்கும் தொங்கிக் கொண்டு, அப்படியாக இளைஞர்கள் நடந்து கொள்கின்றனர். அதைச் செய்வது ஏன்? அது என்ன? (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை பதினொறு முறை தட்டுகிறார் - ஆசி) ஏனெனில் அது இதற்கு முன்பு வாழ்ந்த ஒருகூட்டம் முறை தவறிப் பிறந்த மக்களிடமிருந்து தோன்றுகிறது. வேறொன்றும் விடப்படவில்லை! ஓ, அவர்கள் நின்றுகொண்டு, ''உம்மண்டை தேவனே!'' என்று பாடுவார்கள், பீ-பிக்கர் எர்னி இன்னும் மற்றவர் செய்வதுபோல - அந்த விதமான ஏதோ ஒரு ஞானப்பாட்டைப் பாடுகின்றனர். சகோதரனே, அது என்ன தெரியுமா? அது முழுக்க மாய்மாலமே. ஆம், ஐயா.
64ராக் “என்ரோல், பூகி - வூகி”, இன்னும் மற்றும் அந்த விதமான விஷயத்தில் கலந்து கொள்ளும் எந்த மனிதனுக்கும் இந்த பிரசங்க பீடத்துக்குப் பின்னால் நிற்பதற்கு உரிமையே கிடையாது. அவனுக்கு சிறிது கூட உரிமை கிடையாது. இது தேவனால் அழைக்கப்பட்டுள்ள ஆசாரியத்துவத்திற்கு மாத்திரமே. தேவனால் அழைக்கப்பட்ட ஊழியக்காரருக்கு மாத்திரமே இது சொந்தமானது. அப்படிப்பட்டவர்களுக்கு இங்கு இடமில்லை.
இன்றுள்ள தொல்லை இதுதான். அவர்கள் ஏதோ ஒரு சபையை ஏதோ ஒரு விதமான விடுதியாக செய்துவிட்டார்கள். விடுதிகளில் இப்படிப்பட்ட காரியம் நடந்தால். அதை நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். அது உங்களைப் பொறுத்தது. ஆனால் உங்களிடம் இதை கூற விரும்புகிறேன். விடுதிக்கும் சபைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஆம், ஐயா. இவைகளை நீங்கள் விடுதிகளில் செய்ய விரும்பி, அங்கு விருந்துகளையும் களியாட்டங்களையும் நடத்தினால், அது உங்களை பொறுத்தது. ஆனால், சகோதரனே, சபையானது பிரசங்க பீடம் தொடங்கி அடித்தளம் வரைக்கும் பெருக்கப்பட்டு சுத்தமாக்கப்பட வேண்டும். நான் புது இயந்திரத்தினால் குப்பையை கூட்டுவதைக் குறித்து கூறவில்லை. நான் பழைய பாணியில் அமைந்துள்ள, தேவனால் அனுப்பப்பட்ட எழுப்புதலையே குறிப்பிடுகிறேன். அது குப்பையை ஒரு முனையிலிருந்து மறு முனை வரைக்கும் சிதறடிக்கும். ஆம், ஐயா ஆப்பிளைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருக்கும் கரப்பான் பூச்சிகள், விளக்கைப் போட்டவுடனே எவ்விதம் சிதறி ஓடுகின்றனவோ, அதே போல்.
65இப்பொழுது கவனியுங்கள். ''அவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள், தங்கள் அதிகாரத்தை மிருகத்துக்குக் கொடுக்கின்றனர்.'' அந்த வசனத்துக்கும் கீழே நான் வந்துவிட்டேன். “பத்து கொம்புகள்.'' ஆம், இப்பொழுது.
தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும் (அங்கே பாருங்கள்) அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.
(வெளி. 17: 17-18).
இதை திரும்பத் திரும்ப கூற வேண்டிய அவசியமில்லை. இது கத்தோலிக்க குருக்களாட்சி என்று நாமறிவோம். இதையாருமே... நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டேன் என்பதை எவ்வளவு உறுதியாக விசுவாசிக்கிறோனோ, அவ்வளவு உறுதியாக இதையும் விசுவாசிக்கிறேன். இன்று நான் கிறிஸ்தவனாக இங்கு நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, இதுவும் அவ்வளவு உறுதியே. அதாவது கத்தோலிக்க குருக்களாட்சி... ஏழு மலைகளின் மேல் உட்கார்ந்து கொண்டிருப்பது வாடிகன் நகரமே. சபையின் குருக்காளாட்சியே இருந்ததும் இராததுமாகிய மிருகம், அவள் பாபிலோன். எல்லாமே சரியாக, வேதம் முழுவதிலும் பரிபூரணமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அது கத்தோலிக்க சபை.
66இதோ உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் விஷயம். நீங்கள் “நல்லது, சகோ பிரன்ஹாமே, நீங்கள் என்னைக் குறிப்பிடவில்லை'' எனலாம். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நாம் மீண்டும் 5-ம் வசனத்துக்கு செல்லுவோம்.
மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
வெளி. 17:5
அவள் யார்? வேசி. அவள் ஒரு தாய். என்ன? அவள் ஒன்றைப் பெற்றெடுத்திருக்கிறாள். குமாரர்களுக்குத் தாயா அவள்? வேசிகளுக்குத்தாய். வேசி என்றால் என்ன?ஒழுக்கங்கெட்ட ஸ்திரீ. அவளை ஒழுக்கங்கெட்டதாக செய்தது எது? அவளுடைய உபதேசம். அவள் கிறிஸ்தவ சபையைப் போல் பாசாங்கு செய்து கொண்டு மனிதனால் உண்டாக்கப்பட்ட கொள்கைளை அளித்துக் கொண்டு வருகிறாள். இங்கு அவள் என்ன சொல்லுகிறாள் என்றால், அவள் முதலாம் ஸ்தாபனம் என்றால், அவளிலிருந்து தோன்றிய வேறு பல ஸ்தாபனங்களும் உண்டு என்பதைப் போல் தோன்றுகிறது. அவள் வேசிகளுக்குத் தாய். அது சரியா? வேசிகளுக்குத் தாய். அவள் பையன்களுக்குத் தாயாக இருக்க முடியாது... அவள் ஸ்திரீகளுக்குத் தாயாகவே இருக்க முடியும். அவர்கள் ஸ்திரீகள் என்றால், அவைகள் சபைகளே. இப்பொழுது நாம் பார்ப்போம். எது வெளி வந்தது என்று...
67முதலாம் ஸ்தாபனம் எது? கத்தோலிக்க சபை. இரண்டாம் ஸ்தாபனம் எது? லூத்தர், மூன்றாம் ஸ்தாபனம் எது? சுவிங்லி. அதை தொடர்ந்து எது வருகிறது? கால்வின். அதன் பிறகு ஆங்கிலிகன், ஆங்கிலிகனைத் தொடர்ந்து மெதோடிஸ்டு எதை உருவாக்கினது? அலெக்ஸாண்டர் காம்ப்பெல் தோன்றினார். அலெக்ஸாண்டர் காம்ப்பெல்லில் இருந்து ஜான் ஸ்மித் தோன்றினார்; அலெக்ஸாண்டர் காம்ப்பெல்லில் இருந்து கிறிஸ்தவ சபை, அதன் பிறகு அவர்களுக்கு நான்கைந்து கிறிஸ்தவ சபைகள், கொள்கைகளின் வேற்றுமை காரணமாக வேறு பிரிந்து உண்டாயின. அதன் பிறகு இதோ பாப்டிஸ்டு சபை வருகிறது. அதிலிருந்து பிரிந்த அநேக சபைகள் உண்டு. மெதோடிஸ்டு சபையிலிருந்து முதலாவதாக வெஸ்லியன் மெதோடிஸ்டு தோன்றினது. அவர்கள் நான்கைந்து முறை பிரிந்து சென்றனர். வேறொரு விதமான மெதோடிஸ்டு சபை தோன்றினது. அதிலிருந்து அவர்கள் பிரிந்து வெளி வந்து சுயாதீன மெதோடிஸ்டு சபையை ஏற்படுத்திக் கொண்டார். அதிலிருந்து நசரின் சபை உண்டானது. நசரின் சபையிலிருந்து யாத்திரீக பரிசுத்தர். இவ்வாறு கொள்கைளினால் சிறு சிறு வேற்றுமை காரணமாக வேறு பிரிந்து சபைகளைத் தொடங்கினர். அவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்தனர்? அவர்கள் பெந்தெகொஸ்தேவில் முடிவடைந்தனர்.
68பெந்தெகொஸ்தே என்ன செய்தது? அவர்கள் தாய் செய்ததையே செய்தனர். அவர்கள் திரும்பிச் சென்று ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அது என்னவானது? ஸ்தாபனமாக. நீங்கள் ஒரு சபைக்குள் நுழைந்தால், முதலாவதாக, “உங்கள் உபதேசம் என்ன?'' என்று கேட்கின்றனர். என்னே! நெருக்கமுள்ள பற்களைக் கொண்ட சீப்பினால் உங்களை சீவியெடுத்து, நீங்கள் யாரென்றும், நீங்கள் கொண்டுள்ள விசுவாசம் என்னவென்றும் கண்டு கொள்கின்றனர். அவர்களுடன் நீங்கள் ஒத்துப் போகவில்லை என்றால், சகோதரனே, அவர்கள் உடனே உங்களை சபையிலிருந்து வெளியாக்குவார்கள். அது உண்மை.
நீங்கள் பெந்தெகொஸ்தேகாரர் என்று உங்களை அழைத்துக் கொள்வதனால் பாதுகாப்பாக இருப்பதாக எண்ண வேண்டாம். பாதையில் உள்ள பெந்தெகொஸ்தேகாரர் எத்தனை பேரோ அவர்கள் பாதையை விட்டு விலகிய அத்தனை பெந்தெகொஸ்தேகாரராக உள்ளனர். அது உறுதியாக எனக்குத் தெரியும். பாருங்கள்?
69இப்பொழுது இத்தனை ஸ்தபனங்களும் ஸ்தாபனமாக இராமல், பெந்தெகொஸ்தே ஆசீர்வாதம் தங்கியிருக்கும்படி விட்டுக் கொடுத்திருந்தால் அவர்கள் சகோதரத்துவத்தில் நிலைத்திருந்து, பரிசுத்த ஆவியானவர் வேறு பிரிக்கும்படி அனுமதித்திருந்தால்! பரிசுத்த ஆவியானவர். “நீங்கள் பொய் சொல்லுகிறதென்ன?” என்று கேட்டார்.
ஆனால் நாமோ, “அது சகோ. ஜோன்ஸ், அவரைக் குறித்து ஒன்றும் தீதாக சொல்லிவிடாதே. எல்லோரையும் விட சபைக்கு அதிகமாக பணம் கொடுப்பவர் அவரே. அவருக்கு பரிசுத்த ஆவி உள்ளதென்று எனக்குத் தெரியும். அவர் அந்நியபாஷைகளில் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அவர் ஆவியில் சத்தமிடுவதைப் பார்த்திருக்கிறேன்” என்கிறோம். அது உலர்ந்த பசுத்தோலின் மேல் மொச்சை கொட்டையைக் கொட்டுவதால் உண்டாகும் சத்தத்தை விட வித்தியாசம் ஒன்றுமில்லை. பாருங்கள்? அதற்கும், இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. முடிவாக கூற வேண்டியது தேவனே. அவர் பெற்றிருக்கிறாரா இல்லையா என்பதை தேவன் தான் கூறவேண்டும். நிச்சயமாக,
நாங்கள் அவரை எங்கள் ஸ்தாபனத்தில் ஏற்றுக் கொண்டோம். எங்கள் அசெம்பிளீஸ் சபையை விட்டு அவரை வெளியே துரத்தின போது, ஒருத்துவ சபைக்காரர் அவரை சிறிது காலம் வைத்துக்கொண்டு விட்டு வெளியே துரத்திவிட்டனர். ஏனெனில் அதன் பிறகு இயேசு மாத்திரம் சபை அவரை ஏற்றுக்கொண்டது. அவர்கள் சிறிது காலம் அவரை வைத்திருந்தனர். அடுத்ததாக தேவ சபை அவரை ஏற்றுக் கொண்டது. அங்கிருந்து அவர் தீர்க்கதரிசன தேவ சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டார், பிறகு டாம்லின்சன் அசைவு அவரை ஏற்றுக் கொண்டது. ஓ, என்னே சகோதரனே, இவ்வாறு வெளியே துரத்திவிடப்பட்டால் கடைசியாக எழுப்புதலைப் பெற்ற பெந்தெகொஸ்தேவில் இவ்விதம் சம்பவிக்கிறது.
இப்பொழுது அவர்களுக்கு நீல நிற அக்கினி ஜூவாலையும், எண்ணெயை வழிபடுகிறவர்களும் முகத்தில் இரத்தத்தை தோன்றச் செய்கிறவர்களும் உள்ளனர். ஓ, இரக்கம், அவர்கள் இப்பொழுது எங்கே சென்றுவிட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு காரியம் என்னவெனில்...
70முழுவதுமே சீரழிந்துவிட்டது.
அது சீரழிந்துவிடும் என்று வேதம் உரைத்துள்ளதென்று உங்களுக்குத் தெரியுமா? கர்த்தருடைய போஜன பீடங்கள் வாந்தியால் நிறைந்திருக்கிற நாள் வருமென்று வேதம் உரைத்துள்ளதென்று உங்களுக்குத் தெரியுமா? அது, “யாருக்கு உபதேசத்தை உணர்த்துவேன்? யாருக்கு அறிவைப் போதிப்பேன்? கற்பனையின் மேல் கற்பனையும், கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், பிரமாணத்தின் மேல் பிரமாணமுமாம்'' என்கிறார்கள். அவர் யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? ''தாயின் முலை மறக்கப் பண்ணப்பட்டவர்களுக்கே” என்று உரைத்துள்ளது.
71இந்த நகரத்தில் நடத்தை கெட்ட ஸ்திரீ பெற்றெடுத்த கன்னிப் பருவத்திலுள்ள பெண் யாருமே இல்லை எனலாம். அவள் பிறக்கும் போது அப்படியிருக்கிறாள். அவள் நல்ல விதமாக நடக்கக்கூடும். அவளுடைய தாய்க்கு அந்த சுபாவம் உண்டு என்று நீங்கள் கவனிக்காமல் போனால், அந்த பெண் பத்தில் ஒன்பது முறை, அவளுடைய தாயைப் போலவே நடந்து கொள்வாள். அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும். வேசி வீடு நடத்தும் ஸ்திரீ ஒருத்தி ஒரு பெண்ணைப் பெற்றெடுக்கலாம். அவள் பதினாறு வயது வரைக்கும் வளர்ந்தால், அவள் சுத்தமுள்ளவளாய், ஒழுக்கமுள்ளவளாய் நிலைத்திருக்கக்கூடும். ஆனால் காரியம் என்னவெனில், அவள் திரும்பிச் சென்று அவளுடைய தாயைப் போலவே நடந்து கொள்கிறாள்.
72இப்பொழுது, “கத்தோலிக்க சபை தான் முதல் வேசி சபை. அவள் தன் சொந்த உபதேசங்களையும் மூடநம்பிக்கைகளையும் அமைத்துக் கொண்டிருக்கிறாள். அவள் பாதாளத்திலிருந்து ஏறிவந்து நாசமடையப் போகிறாள்” என்று வேதம் உரைக்கிறது. வேதம் அவ்விதம் உரைத்துள்ளது.
அவர்கள் தவறான காரியங்களைப் போதிக்கின்றனர். அது தேவனுடைய வார்த்தையின்படி தவறாயுள்ளது. இதோ அவள் மூலமாய் பிறந்த மெதோடிஸ்டு சபை வருகிறது. அது அழகான இளம்பெண். ஆனால் அவள் என்ன செய்தாள்? அவள் திரும்பிச் சென்று அவளுடைய தாய் செய்ததையே செய்தாள். அவளுடைய சபையோர் குட்டை கால் சட்டை அணியவும், சிகரெட் புகைக்கவும், அவர்கள் விருப்பப்படி செய்யவும் அவர்களுக்கு சம்மதம் அளித்தாள். அதை அது கண்டனம் செய்வதே இல்லை. பிரசங்க பீடத்திற்கு பின்னால் உள்ள அந்த அரைவேக்காடு போதகர் இதை எடுத்துக் கூறினால் எங்கே அவர் சம்பளம் அல்லது ஒரு பிஸ்கெட் பாக்கெட் கிடைப்பது நின்றுவிடுமோ என்று பயப்படுகிறார்.
சகோதரனே, இதைக் கூற விரும்புகிறேன். நான் மலிவு பிஸ்கோத்துக்கள் தின்று ஓடை தண்ணீர் குடிக்க நேரிட்டாலும், சுவிசேஷத்தையும் பிரசங்கித்து சத்தியத்தையே கூறுவேன். என் சபையோர் அனைவரும் எழுந்து வெளியே நடந்தாலும், நான் அப்பொழுதும் அவர்களுக்கு சத்தியத்தையே எடுத்துரைப்பேன். ஆம் நிச்சயமாக.
73என்ன விஷயம்? ஓ, ஆகாரச்சீட்டு தான் காரணம். “நல்லது, நகரத்திலுள்ள மிகப் பெரிய சபைக்கு நான் மேய்ப்பன்” பாப்டிஸ்டுகளே, மெதோடிஸ்டுகளே, கள்ளத் தீர்ககதரிசிக்கு நீங்கள் செவி கொடுக்கிறீர்கள். அது கடூரமான சொல்தான். ஆனால் இந்த வேதத்துக்கு முரணாக யார் போதித்தாலும், அவர் கள்ளத் தீர்க்கதரிசியே. அது எவ்வளவாக மெருகேற்றப்பட்டிருந்தாலும் எனக்கு அக்கறையில்லை, அது கள்ளத் தீர்க்கதரிசனமே. அது உண்மை.
“உங்கள் பெயரை நீங்கள் புத்தகத்தில் பதிவு செய்துள்ள வரைக்கும், எல்லாமே சரியாயுள்ளது.'' உங்கள் பெயரை நீங்கள் ஒரு டஜன் புத்தகங்களில் பதிவு செய்திருக்கக் கூடும். ஆனால் அது ஜீவபுஸ்தகத்தில் காணப்படாமல் போனால், நீங்கள் இழக்கப்பட்டவர்கள் நீங்கள் நல்லவர்களாயிருக்கலாம், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகவும், சுத்தமுள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் இருக்கலாம். ஆனால் அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.
74ஏசா யாக்கோபை விட இரட்டிப்பாக ஆண்மைத்தனம் கொண்டிருந்தான். அவன் பார்வையிழந்த வயோதிப தகப்பனை கவனித்துக் கொண்டான். மற்றும் பல காரியங்களைச் செய்தான். யாக்கோபோ பயந்த சுபாவமுள்ளவனாய் தன் தாயின் உடுப்பைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தான். அவன் பெண்மைத்தனம் கொண்ட பையனாயிருந்தான். ஆனால் தேவனோ அவர்கள் பிறவாததற்கு முன்னே, ''யாக்கோபைச் சிநேகித்து ஏசாவை வெறுத்தேன்'' என்றார். ரோமர் 8, அவ்விதம் கூறுகிறது. அது முற்றிலும் உண்மை.
மனிதனில் என்ன இருக்கிறதென்று தேவன் அறிந்திருக்கிறார். சபையிலும் என்ன இருக்கிறதென்றும் அவர் அறிந்திருக்கிறார். நாம் ஜீவ அப்பத்தைக் கொண்டு, தேவ வார்த்தையின் அப்பத்தைக் கொண்டு, ஜீவிக்கிறோம், ஆகையால் தான் நாம் ஒரு ஸ்தாபனமல்ல.
75இப்பொழுது நான் உங்களுக்கு மற்றொரு சிறு... உங்களுக்கு ஒரு சிறு விளக்கத்தைக் கொடுக்க விரும்புகிறேன், அதை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். “மகா...'' இப்பொழுது வெளி. 19:2. இங்கே ஒன்றைக் குறித்து வைத்திருக்கிறேன். அது என்னவென்று காண விரும்புகிறேன்.
தன் வேசித் தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக் கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள். அது கத்தோலிக்க சபையின் முடிவு.
வெளி. 19:2
76இப்பொழுது, ஒரு ஸ்தாபனம் வேத வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறோம்... வேதாகமம் ஸ்தாபனத்தைக் குறித்து உயர்வாக பேசவில்லை. ஸ்தாபனம் கத்தோலிக்க சபையினால் உண்டாக்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஸ்தாபனமும் தோன்றினது. இது சிறிது புண்படுத்தக் கூடும். அது ஒவ்வொரு முறையும் அதிகமாக புண்படுத்தக் கூடும், பாருங்கள். ஸ்தாபனங்கள் தேவனால் உண்டானதோ அல்லது தேவனால் நியமிக்கப்பட்டதோ அல்லவென்றும், அது பிசாசினால் நியமிக்கப்பட்டதென்றும் நீங்கள் காண வேண்டுமென்று விரும்புகிறேன்.
தேவனுடைய சபையானது...
நாம் பிரிந்திருக்கவில்லை.
நாம் அனைவரும் ஒரே சரீரமாயிருக்கிறோம்.
ஒரே நம்பிக்கையும் ஒரே உபதேசமும்
ஒரே அன்பும்.
அதுவே ஜீவனுள்ள தேவனுடைய சபை. அவர்கள் என்னவாயிருந்தாலும் நம்மைப் பொறுத்தவரையில் நாம் ஒன்றாயிருக்கிறோம். அது உண்மை. அவர் மெதோடிஸ்டு, அல்லது பாப்டிஸ்டாயிருந்தாலும், சகோதரனே, அவர் மறுபடியும் பிறந்து பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தால், அவர் என் சகோதரர், நாங்கள் ஒருமித்து நடப்போம். உண்மை. ஆம், ஐயா, அதனால் எந்த வித்தியாசமும் இல்லை.
77மோசே. சில சமயங்களில் நீங்கள், அந்த மத வெறி கொண்ட பெந்தெகொஸ்தேகாரர், சகோ. பிரன்ஹாமே, “அத்தகைய கூட்டத்தினரிடம் நீங்கள் ஏன் செல்லவேண்டும்?'' என்று கேட்கலாம். உங்களுக்குத் தெரியுமா? பார்வோன் பார்த்த ஜன்னலின் வழியாகவே மோசே இஸ்ரவேல் புத்திரரைக் கண்டான். பார்வோன் அவர்களை மண் பிசையும் கூட்டத்தினராகக் கண்டான், ஆனால் மோசேயோ அவர்களை தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகக் கண்டான். அவர்கள் வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்தனர் என்று அவன் அறிந்திருந்தான். ஏன்? அவன் வார்த்தையின் மூலம் அதை அறிந்து கொண்டான்.
விசுவாசத்தினால்... அவன் பார்வோன் ஆவதற்கு சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டபோது, முழு உலகமே அவனுடைய காலடியில் கிடந்தது. அழகான பெண்கள் மதுபானத்தை அவன் வாயில் ஊற்றினர், அவனுக்கு விசிறியால் காற்று வீசிக் கொடுத்தனர். அவன் சக்கரவர்த்தியாக அல்லது சர்வாதிகாரியாக அல்லது உலகத்தின் அரசனாக வீற்றிருந்தான். நாற்பது வயதான இளம் மோசே சர்வ ஆதிக்கத்தையும் தன் கரங்களில் கொண்டிருந்தான். அவன் அந்த மண் பிசைபவர்களை வெளியே எட்டிப் பார்த்த போது, அவன் அவர்களில் ஒருவன் என்று அறிந்து கொண்டான். அல்லேலூயா! அதுதான். அவன் அவர்களில் ஒருவன் என்று அறிந்து கொண்டான். விசுவாசத்தின் மூலமாக மட்டுமே அவன் தெரிந்து கொண்டான்.
78நாம் ஒவ்வொருவரும் ஒரு தெரிந்து கொள்ளுதலை செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இப்பொழுதே தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் ஒருவேளை காலையில் தெரிந்து கொள்வீர்கள். நீங்கள் ஒருவேளை நாளை இரவில் தெரிந்து கொள்வீர்கள் - நீங்கள் உயிரோடு இருந்தால் என்றாவது ஒருநாள் நீங்கள் தெரிந்து கொண்டேயாக வேண்டும். சகோதரனே, நான் நீண்ட காலம் முன்பு தெரிந்து கொண்டேன். இந்த வேதாகமம் என் அகராதியாயிருந்தது, இந்த வேதாகமம் என் ஜீவ புஸ்தகமாயிருந்தது, இந்த வேதாகமம் தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. நான் வாழ்ந்து கொண்டிருப்பது வேதாகமத்தைக் கொண்டே. இந்த வேதாகமத்தைக் கொண்டுதான் நான் நிற்பேன்.
79எனவே மோசே இஸ்ரவேல் புத்திரரைப் பார்த்து, “ஓ, அவர்கள் அருமையான மக்கள். அவர்களுக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. ஓ, இல்லை, அவர்களுக்கு விரோதமாக ஒரு வார்த்தையும் கூறமாட்டேன்'' என்று சொன்னது மாத்திரமல்ல. இன்றைக்கும் அநேகர் அவ்விதம் கூறுகின்றனர். ''ஓ, இந்த பெந்தெகொஸ்தேகாரர், பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ள இவர்கள், தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டுள்ள இவர்கள். ஓ, அவர்களுக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை'' என்கின்றனர். ஆனால் மோசே அத்துடன் நின்றுவிடவில்லை. அவன் எகிப்தைப் புறக்கணித்து அவர்களில் ஒருவனாக ஆனான். அவனுடைய சகோதரர் மத்தியில் அவன் சென்று அவர்களைச் சேர்ந்து கொண்டான். அவன் அவர்களில் ஒருவன் ஆனான்.
80சகோதரனே, அங்கு தான் என் வழியை நான் தெரிந்து கொள்கிறேன். நிந்திக்கப்படும் கர்த்தருடைய சிலருடன் என் வழியைத் தெரிந்து கொள்வேன், அவர்கள் சொற்ப பேராயிருந்தாலும், என்னவாயிருந்தாலும் அவர்களுக்கு ஒரு வாக்குத்தத்தம் உண்டு. அவர்களுடைய பெயர்களை நான் ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் காண்கிறேன். அவர்கள் என் சகோதரர். அது உண்மை. நீங்கள் அவர்களைத் தெரிந்து கொண்டு அவர்களுடன் நில்லுங்கள். சரியோ, தவறோ, என்னவாயினும் அவர்களுடன் நில்லுங்கள். அவர்கள் தவறாயிருந்தால், அவர்கள் சரியாக ஆவதற்கு அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்களை உதைத்து தள்ளிவிடுவதனால் அவர்களை மேலாக்க முடியாது. பாருங்கள், அவர்களை வெளியே இழுக்க முயற்சி செய்யுங்கள்.
81சார்லி, அவர்கள் சகோ. ஆலனைக் குறித்து கூறினதுபோல, நெருப்பைக் குறித்தும், அவர்கள்... கைகளில் இரத்தம் தோன்றுதலும், ''நான் ஒருபோதும் ஏ. ஏ. ஆலனை அவமதிக்கவில்லை. எனக்கு ஏ.ஏ. ஆலனைப் போல் பிரசங்கிக்கத் திறமை இருந்தால், நான் சுகமளிக்கும் ஆராதனையை நடத்தவே மாட்டேன்'' என்றேன். உங்கள் கைகளில் இரத்தம் தோன்றுவது பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அத்தாட்சி என்னும் விஷயம் வரும்போது என்னால் அதை ஒத்துக்கொள்ள முடியாது. ஆனால் சகோதரத்துவம் என்னும் விஷயம் வரும்போது, அவர் என் சகோதரர். யுத்தத்தில் நான் அவருடன் தோளுக்கு தோள் நிற்பேன். அது உண்மை. அவர் தவறாயிருந்தால், அவருக்கு உதவி செய்ய முயல்வேன். அவர் தவறாயிராமல் நான் தவறாயிருந்தால், அவர் எனக்கு உதவி செய்ய வேண்டுமென்று விரும்புவேன். அவ்விதமாகத்தான் நாங்கள் ஒத்துழைப்போம். இப்பொழுது இங்கே கவனியுங்கள்...
அவள் இரகசியம், பாபிலோன்... வேசிகளுக்குத் தாய்.
வெளி. 17:5
82நண்பர்களே, இன்றைய சபை எவ்வாறுள்ளது என்பதைக் காண்கிறீர்களா? இன்றைய சபைகள் தங்கள் விருப்பப்படி எந்த வழியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறதை உங்களால் காண முடிகிறதா? ''அதனால் பரவாயில்லை, தொடர்ந்து செய்யுங்கள்'', பன்றி பன்றியுடன் தின்கிறது, அதற்கு எந்த கவனமும் செலுத்தாதீர்கள். ''அதை செய்வதனால் எவ்வித பாதகமும் இல்லை, நீங்கள் பழைய நாகரீகமுள்ளவர்களாயிருக்க முயல்கின்றீர்கள்.'' இப்பொழுது அவர்களுடைய உபதேசத்தைக் கவனியுங்கள். நான் விரும்புவது... இப்பொழுது கவனியுங்கள். அது அவர்களுடைய பழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு, கத்தோலிக்க சபை ஒன்றுக்கு மாத்திரமே திரைப்படக் காட்சி காண்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதென்று நீங்கள் காண்கிறீர்களா? மெதொடிஸ்டு சபை அதைக் குறித்து நினைத்தும் கூட பார்க்காது - மற்ற ஸ்தாபனங்களும் கூட. ''அது பிசாசின் கிரியை'' என்பார்கள். நல்லது, என்ன நடந்ததென்று வியக்கிறேன்.
83உங்களுக்குத் தெரியுமா, அந்த வாலிப கத்தோலிக்கப் பெண்களை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் இந்த சிறு... (உங்களில் வயதானவர் சிலருக்கு என்னுடைய வயது இருக்கும்)... அவர்கள் முழங்கால் உயரம் உள்ள இடத்திற்கு சென்றனர். அந்த ஆள் இன்றிரவு நரகத்தில் இருப்பார் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரியாது, நான் அவருடைய நியாயாதிபதி அல்ல. ஆனால் அவர் அந்த முதல் அசுத்தமான பாடலை அமைத்து அதை வானொலியில் ஒலிபரப்பு செய்தார். அவர்கள் அதை தணிக்கை செய்யவேயில்லை. அந்த பாடல், “சுருட்டி விடுங்கள், பெண்களே , சுருட்டி விடுங்கள்; சுருட்டி விட்டு உங்கள் அழகான முழங்கால்களைக் காண்பியுங்கள்'' என்பதே. அதுதான் அங்குதான் முதல் குட்டைக்கால் சட்டை வந்தது. அது உண்மை. அவர்கள் இந்த ஆசாமியை டெக்ஸாஸிலிருந்து கொண்டுவந்து, இந்த ஸ்திரீகளை அவரிடம் கொண்டு சென்று அவர்கள் உள்ளில் அணிந்த ஆடைகளை உபயோகித்து, அவர்கள் பார்வைக்கு காணப்படாத ஒன்றைப் போல் காணும்படி செய்து, அவர்கள் அவ்விதம் இருக்க விட்டுவிட்டனர். இப்பொழுது அவர்கள் என்ன செய்கின்றனர்? அது உள்ளே நுழைந்துவிட்டது. அது ஒரு ஆவி.
84அன்றொரு நாள் ஒரு மனிதன் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர், ''நான் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. என் பையன் மிகவும் நல்லவனாயிருந்தான். ஆனால் இப்பொழுதோ அவன் கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்துக் கொண்டுவிடுகிறான்“ என்றார்.
''ஏன்?'' என்றேன்.
''அவன் ஒரு திருடனுடன் தொடர்பு கொண்டிருக்கிறான்'' என்றார்.
நீங்கள் ஒரு திருடனும் தொடர்பு கொண்டிருந்தால், நீங்களும் திருடனாகிவிடுவீர்கள். என் வயோதிப கென்டக்கி தாய் இவ்வாறு கூறுவது வழக்கம். “நீங்கள் உண்ணி பிடித்த நாயுடன் படுத்துக் கொண்டால், உங்களுக்கும் உண்ணி பிடிக்கும்'' என்று. கெட்ட நடத்தையுள்ள ஒரு பெண்ணைக் கொண்டுபோய் ஒழுக்கமுள்ள ஒரு பையனுடன் வைத்துவிட்டால், முதலாவதாக என்ன தெரியுமா, அவனும் கெட்டுப்போய் விடுவான். அதே போல்தான் கெட்டநடத்தையுள்ள ஒரு பையனை ஒழுக்கமுள்ள ஒரு பெண்ணுடன் வைத்துவிட்டாலும். உங்களுக்கு இருக்கும் கூட்டாளிகள் மூலம் நீங்கள் யாரென்று அறியப்படுகிறீர்கள். நீங்கள் பிரிந்து வாருங்கள். ''அவர்களை விட்டுப் பிரிந்து வெளியே வாருங்கள்,'' என்று வேதம் உரைக்கிறது. அது உண்மை.
85அவர்களுடைய ஸ்தாபனங்கள் அவர்களை அனுமதிக்கும் அளவுக்கு சீர்கேடான நிலையை அடைந்திருக்குமானால்... நல்லது, அன்றொரு நாள் இங்குள்ள ஒரு பெரிய பாப்டிஸ்டு சபை விரைவில் முடிக்க வேண்டியதாயிருந்தது. அந்த போதகர் இருபது நிமிடங்கள் மட்டுமே பிரசங்கம் செய்தார். ஏனெனில் அவர் புகைபிடிக்க வேண்டியதாயிருந்தது. சபையோர் எல்லோரும் வெளியே சென்றனர். அவர்கள் அங்கு நின்றுகொண்டு, ஒன்று சேர்ந்து புகை பிடித்துவிட்டு, மறுபடியும் உள்ளே வந்தனர் - போதகரும் மற்றவர்களும்.
நான் காங்கிரிகேஷனிஸ்ட் சபைக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு மனிதன் நீண்ட அங்கியை அணிந்துகொண்டு, இப்படி பிரசங்க பீடத்தின் மேல் சாய்ந்து கொண்டு, மலையில் அவர் கண்ட ஒரு பூவைக் குறித்து பேசினார். அவர் பேசினதெல்லாம் அவ்வளவுதான். பிரசங்கத்தை முடித்துக் கொண்டு அவர் அங்கிருந்து நடந்து சென்றார். அவருடைய விரல்களில், புகைபிடிப்பதனால், உண்டான மஞ்சள் கறை காணப்பட்டது. ஆமென். அங்கிருந்த ஸ்திரீகளுடன் அந்த மனிதன் சீட்டு விளையாடச் சென்றார். அவர்கள் விளையாடும் ஜெர்மானிய சீட்டு விளையாட்டுப் பெயர் என்ன? உங்களுக்குத் தெரியுமா? அது. ஓ, எனக்கு ஞாபகமிருக்கும் என்று நினைத்தேன். பினோகில் (Pinochle) அவர்கள் பினோகில் சீட்டு விளையாட ஆயத்தமாயினர். அது வழக்கமாக விளையாடும் சீட்டு விளையாட்டு அடித்தளத்தில் சீட்டு விளையாட்டு. என்னே அங்குதான் அவர்கள் அஸ்திவாரம் உள்ளது. ஆச்சரியம் ஒன்றுமில்லை.
இதையெல்லாம் செய்துவிட்டு, இங்குள்ள கத்தோலிக்க சபை லாட்டரி விளையாடுவதனால் அவர்களைப் பார்த்து ஏன் கூச்சலிடவேண்டும். பிராடெஸ்டெண்டுகளாகிய நீங்கள் அவர்களைப் போலவே அசுத்தமாயிருக்கிறீர்கள். எனவே அதைக் குறித்து நீங்கள் என்ன சொல்ல முடியும்?பானை கிண்டியைப் பார்த்து “நீ அசுத்தமாயிருக்கிறாய்” என்று சொல்லமுடியாது. நிச்சயமாக முடியாது. இதையெல்லாம் செய்துவிட்டு, ''நல்லது, நான் ஒரு பிரஸ்பிடேரியன், நான் ஒரு மெதோடிஸ்டு'' என்று கூறுகின்றனர். நீங்கள் மறுபடியும் பிறக்கும் வரைக்கும் ஒன்றுமில்லை. அது உண்மை. நீங்கள் அவ்விதம் பிறக்கும்போது, உங்களுக்குள் இருக்கும் ஒன்று, அவையெல்லாம் தவறு என்பதை உங்களுக்கு எடுத்துக் கூறுகின்றது. அப்பொழுது நீங்கள் அதைவிட்டு நிச்சயமாக வெளிவருவீர்கள். அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும். நிச்சயமாக. ஆம், ஐயா. அது அப்படியே நடந்து கொண்டிருக்கிறது. ஏன்?
...வேசிகளுக்குத் தாய்...
86இந்நாட்களில் ஒன்றில் தாய், “உனக்குத் தெரியுமா? தேனே, எப்படியாயினும், நாம் இருவரும் ஒருவரே” என்று சொல்லப் போகிறாள். அப்பொழுது என்ன நடக்கும் தெரியுமா? இப்பொழுது அவர்கள் செய்து வருவதுபோல, எல்லா சபைகளும் ஒருங்கிணைந்து சபைகளின் சம்மேளனம் உண்டாகும். இதைப் போன்ற சிறு குழுவுக்கு என்ன நேரிடும் தெரியுமா? நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள நிலைக்காக அவர்களிடமிருந்து துன்புறுத்தல் உண்டாகும். அது முற்றிலும் உண்மை.
ஆனால் கவலைப்படாதீர்கள், ஆட்டுக்குட்டியானவர் அவனை ஜெயிப்பார். ஏனெனில் அவர் ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தருமாயிருக்கிறார். தேவன் அவருடைய சபையை வழிநடத்திச் செல்வார், ஸ்தாபனத்தை அல்ல. சகோதரனே, அவர் பொன் நிறமுள்ள எண்ணெயாகிய பரிசுத்த ஆவியை சபையின் மேல் ஊற்றுவார். வானத்திலிருந்து அக்கினி விழும். நீங்கள் இது வரை கண்டிராத அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும். ஆம் ஐயா. ''பயப்படாதே சிறு மந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். ஆம், ஐயா, “முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே.'' நீங்கள் போய்க் கொண்டிருங்கள், பாதையில் சென்று கொண்டிருங்கள். உங்கள் தலையை கல்வாரிக்கு நேராக வைத்துக் கொள்ளுங்கள். இந்த வேதம் உண்மையானது. கவலைப்படாதீர்கள்.
87இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் கொண்டுள்ள பழக்க வழக்கங்கள், அவர்கள் கொண்டுள்ள ஒழுக்கங்கெட்ட செயல்கள், நாம் சொல்லிக் கொண்டே போகலாம். முதலாவதாக நீங்கள் அறிய வேண்டியது, அது பிராடெஸ்டெண்டு சபைகளுக்குள் கசிந்தது. கத்தோலிக்க ஸ்திரீகள், “நீங்கள் சபைக்குச் சென்று தலையில் கைகுட்டை போட்டுக் கொள்ளும் வரைக்கும் குட்டை கால் சட்டை அணிவதனால் பாதகம் ஒன்றுமில்லை'' என்றனர். ஏதோ ஒருவிதமான பாரம்பரியம். வெள்ளிக் கிழமையில் மாம்சம் புசிக்காதீர்கள். ''ஓ, சபையில் பிரவேசிக்கும் போது தலையின் மேல் கைகுட்டை போட்டுக் கொள்ள வேண்டுமென்று வேதத்தில் எங்குள்ளது? அதைக் குறித்த வேத வசனத்தை எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். அது கள்ளத் தீர்க்கதரிசனம். சபையில் நீங்கள் தொப்பி அணிந்துகொள்ள வேண்டுமென்று வேதத்தில் எங்குள்ளது? நீங்கள் தலையில் தொப்பி அணிந்து கொள்ளும் போது, நீங்கள் கிறிஸ்துவை கனவீனப்படுத்துகிறீர்கள். அது உண்மை. நான் மனிதரைக் குறித்து பேசுகிறேன். ஸ்திரீகளே, உங்களுக்கு ஒரு முக்காடு உள்ளது. அது ஒரு தொப்பி அல்லது கைகுட்டை என்று எனக்குக் காண்பிக்கும்படிக்கு நான் எவருக்கும் சவால் விடுகிறேன். உங்கள் தலைமயிர்தான் உங்களுக்கு முக்காடு! நீங்கள் அதை கத்தரித்துவிட்டீர்கள். அதைக் குறித்து என்ன சொல்லுகிறீர்கள்? ஓ, அவர்கள், ''அது பழைய நாகரீகம்'' என்கின்றனர். அப்படியானால், அது வேதாகமம்! தேவனுடைய வார்த்தை சரியானது.
88அண்மையில் நான் இங்கு இயேசுவின் பாதங்களைக் கழுவி அதை தன் தலைமயிரால் துடைத்த ஸ்திரீயைக் குறித்து பேசின போது, “இன்று ஒரு ஸ்திரீ அவருடைய பாதங்களைக் கழுவித் துடைக்க வேண்டுமானால், அதைத் துடைப்பதற்கு போதிய தலை மயிரைப் பெற அவள் தலைகீழாக நிற்க வேண்டும்'' என்று குறிப்பிட்டேன். அது உண்மை. ஓ! அது அவமானமாயுள்ளது, அவர்களை இவ்விதம் காண... இங்கே, உறைந்து போகும் குளிரில், ஒரு சிறு ”கோட்டை“ மாத்திரம் போட்டுக் கொண்டு, தங்கள் நிர்வாணத்தைக் காண்பிக்கின்றனர்.
நீங்கள், “பெண்களை மாத்திரம் கடிந்து கொள்கிறீர்களே'' எனலாம். நீங்களும் கடிந்து கொள்ளப்பட வேண்டும். உங்கள் மனைவிகள் இவ்விதம் நடந்து கொள்ள அனுமதிக்கும் மனிதரே, உங்களைக் குறித்து என்ன நினைப்பதென்றே எனக்குத் தெரியவில்லை. அது உண்மை.
மேய்ப்பர்களே, நீங்கள் இங்கில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் அவரைக் காண்பீர்களானால், என்னை வந்து காணும்படி அவரிடம் கூறுங்கள். பாருங்கள்? அவர் கிறிஸ்துவை மதிக்காமல், அவருடைய சபையோர் இவ்விதம் நடந்துகொள்ள அனுமதிப்பாரானால்... இப்பொழுது அவர்... அவர்கள் ஒருக்கால் அவர் காணாமல் இவ்விதம் நடந்துகொள்ளலாம். ஆனால் இதைக் குறித்து அவர்களிடம் அவர் எடுத்துக் கூறவில்லை என்றால், இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனாயிருக்க அவர் தகுதியற்றவர். கிறிஸ்துவின் ஊழியக்காரன் வேதாகமத்தின் நோக்கத்திற்காக பயம் இல்லாதவனாய் இருக்கவேண்டும். நிச்சயமாக அவர்களோ சென்று அதை எப்படியும் செய்கின்றனர்.
89முதலாவதாக என்ன தெரியுமா, பிராடெஸ்டெண்டுகள் அதையே பின்பற்றத் தொடங்கினர். மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், நசரீன், யாத்திரீக பரிசுத்தர், நீங்கள் அனைவருமே வழிவிலகி அதே நிலையில் இருக்கிறீர்கள். ஒன்று, ஆறு, மற்றது அரைடஜன். பார்த்தீர்களா? “வேசிகளுக்குத் தாய். உங்கள் ஸ்தாபனம். அவர்கள் தலைமை அலுவலகத்தில் அதை தொடங்கின வரைக்கும், அதனால் என்ன வித்தியாசம்?'' என்கிறீர்கள். பாருங்கள், அது நிறைய வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது. அவர்கள் மேலே உள்ள அந்த தலைமை அலுவலகத்தில் அதை தொடங்கவில்லை. கீழே உள்ள தலைமை அலுவலத்தில் ஒருக்கால் தொடங்கியிருக்கலாம். ஆனால் மேலே உள்ளதில் அல்ல. நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்பதை அது பொறுத்தது. அது உண்மை.
90இந்த மாற்றத்தைக் குறித்துப் பேசுவதற்கு நேரமிருக்காது என்று நினைக்கிறேன், இதை காலை வரைக்கும் விட்டு வைப்பது நலம். சரி. இந்த சிறு பொருளை நாம் எடுத்துக் கொள்வோம். இங்கு நமக்கு “தண்ணீர் ஞானஸ்நானம் உள்ளது. நமக்கு முன்குறித்தல்'', ஓ, இன்னும் அநேக காரியங்கள் உள்ளன. எனவே ''பெண் பிரசங்கிகள்” என்னும் சிறு பொருளை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம்.
இப்பொழுது, இப்பொழுது, பெண் பிரசங்கி, உங்கள் உணர்ச்சிகளை நான் புண்படுத்த விரும்பவில்லை, ஆனால்; உங்களுக்கு ஒன்றை நான் கூற விரும்புகிறேன். அதை ஆதரிக்கும் ஒரு மிகச் சிறு வேத வாக்கியமும் கூட வேதத்தில் கிடையாது. ஆம், நீங்கள் எந்த வசனத்தை மேற்கோள் காட்டப்போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும், உங்கள் கருத்துக்கள் அனைத்தும்... ஆம், ''உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்“ என்னும் வசனத்தை தான். ”தீர்க்கதரிசனம்'' என்னும் சொல்லுக்கு உங்கள் போதகருக்கு அர்த்தம் தெரியாமல் போனால், அவர் பிரசங்கபீடத்தின் பின்னால் நின்று கொண்டு, நீங்கள் பிரசங்கியாகலாம் என்று கூறுவதற்கு எந்த வேலையும் கிடையாது. பாருங்கள்? ஏனெனில் அது ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் முடிய முற்றிலும் கண்டனம் தெரிவிக்கிறது. இங்கே உங்களுக்கு இதை காண்பிக்க விரும்புகிறேன். பாருங்கள்.
91நீங்கள் என்னுடன் 1 தீமோத்தேயு: 2:11-க்கு வேதாகமத்தைத் திருப்ப விரும்புகிறேன். நீங்கள் திருப்பிப் பாருங்கள். அதை அங்கே காணலாம், மற்றும் அப்போஸ்தலர்: 2. இந்த பொருளைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறதென்று கவனியுங்கள்.
இப்பொழுது, யாரோ ஒருவர், “நல்லது, சகோ. பிரன்ஹாமே, நீங்கள் ஸ்திரீகளை வெறுப்பவர் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். நான் ஸ்திரீகளை வெறுப்பவன் அல்ல, நான் ஒரு... ஸ்திரீகளுக்கு உரிமையில்லாத ஒரு ஸ்தானத்தை அவர்கள் வகிப்பதைக் காண்பது எனக்குக் பிடிக்கவில்லை. இங்குள்ள ஹாவர்ட் கப்பல் கட்டுதுறை உங்களுக்கு ஞாபகமிருக்கும். அது ஓஹையோ நதிக்கரையிலுள்ள மிகவும் வெற்றிகரமான ஒரு கப்பல் கட்டும்துறை. அவர்கள் ஒரு ஸ்திரீயை அதற்கு தலைமை வகிக்க நியமித்தபோது, என்ன நடந்ததென்று பாருங்கள். ஸ்திரீக்கு வாக்கு (vote) அளிக்கும் உரிமையை அளித்தனர், என்ன நடந்ததென்று பாருங்கள்.
92உங்களிடம் இப்பொழுதே கூற விரும்புகிறேன். பெண்களை குற்றப்படுத்துவதற்காக அல்ல, மனிதரும் இதற்கு காரணமாயுள்ளனர் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சகோதரனே, உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன், இது ஸ்திரீயின் தேசம், வேதவாக்கியங்களைக் கொண்டோ, அல்லது நீங்கள் விரும்பும் எதையும் கொண்டோ, அதை உங்களுக்கு நிரூபித்துக் காண்பிக்க விரும்புகிறேன். நமது பணத்தின் மேல் காணப்படுகிறது யார்? ஒரு ஸ்திரீ. அவள் வெளிப்படுத்தின விசேஷத்தில் எங்கு காணப்படுகிறாள். அவளை எங்கே காண்கிறீர்கள்? அவளுடைய எண் பதின்மூன்று, அவள் தொடங்கின ஒவ்வொன்றும் பதின்மூன்று. பதின்மூன்று நட்சத்திரங்கள், பதின்மூன்று கோடுகள், பதின்மூன்று குடியிருப்புகள். எல்லாமே பதின்மூன்றில் துவங்குகிறது. அவள் வெளிப்படுத்தல் 13-ம் அதிகாரத்தில் தோன்றுகிறாள். ஒரு ஸ்திரீ, பதின்மூன்று.
931933-ம் ஆண்டில், இப்பொழுது கிறிஸ்து சபை உள்ள இடத்தில், அந்த பழைய மேசோனிக் வீட்டில், நாங்கள் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த போது, கர்த்தருடைய தரிசனம் எனக்கு உண்டாகி, “ஜெர்மனி எழும்பி, அந்த மகிஷாட் எல்லையை எழுப்புவார்கள்'' என்று முன்னுரைத்தது. உங்களில் பலருக்கு அது ஞாபகமிருக்கும். எவ்விதம் அவர்கள் அங்கு அரணாக்கப்பட்டிருப்பார்கள் என்றும், அந்த எல்லையில் அமெரிக்கர்கள் பயங்கரமாக முறியடிக்கப்படுவார்கள் என்றும் அது முன்னுரைத்தது.
மேலும் என்ன நடக்குமென்றும், ரூஸ்வெல்டைக் குறித்தும், அவர் நான்காவது முறையாக ஜனாதிபதி தேர்தலுக்கு நின்று ஜெயிப்பார்; என்றெல்லாம் முன்னுரைத்தது. அது முன்னுரைத்த விதமாகவே பிழையின்றி சம்பவித்தது. மேலும், கார்கள் அதிகமாக முட்டை வடிவம் பெற்று, கடைசி காலத்தில், அவை முட்டை வடிவத்திலேயே அமைந்திருக்கும் என்றும், அதற்கு ஸ்டியரிங் சக்கரம் இருக்காதென்றும், வேறொரு சக்தியால் அவை ஓட்டப்படும் என்றும் அது முன்னுரைத்தது. இப்பொழுது அவர்கள் பாதுகாப்புக்கென்று, ரிமோட் கன்ட்ரோலினால் ஓடக் கூடிய கார்களைக் தயார் செய்கின்றனர். நான் கூறுவது சரி. நீங்கள் அப்பொழுது நகரத்தில் பிரவேசிக்க முடியாது. ஒரு இருபது மைல் பிரிவு. நீங்கள் இருபது மைல் செல்லலாம். நீங்கள் மற்றொரு காருடன் மோதிக் கொள்ளலாம். ஏனெனில் அது ரிமோட் கன்ட்ரோல். பாருங்கள், இப்பொழுது அது போல் நடந்து கொண்டிருக்கிறது.
நான், “இதை நினைவில் கொள்ளுங்கள், அந்த நாளிலே, முடிவு காலம் வருவதற்கு முன்பு, ஒரு ஸ்திரீ... இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் அதிகாரம் படைத்த ஒரு ஸ்திரீ அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எழும்புவாள். அவள் ஜனாதிபதியாகவோ சர்வாதிகாரியாகவோ, அல்லது மிகவும் அதிகாரம் படைத்த ஒரு ஸ்திரீயாக இருப்பாள். இந்த தேசம் பெண்களின் செல்வாக்கின் கீழ் வந்துவிடும். இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நினைவில் கொள்ளுங்கள்'' என்றேன்.
94பாருங்கள், அவள் தவறு செய்கிறாள். அது எதற்கு வழிகோலியது? இதை உங்களிடம் கூறட்டும். ஆவிக்குரிய சிந்தை உடையவர்களாயிருங்கள், அதை திறந்து வைத்திருங்கள், பாருங்கள். அது ஏன் அவ்விதம் செய்கிறது? கத்தோலிக்க சபை உள்ளே வர இடம் அளிப்பதற்காக, பாருங்கள்? நீங்கள் திரைப்பட நட்சத்திரங்களை வணங்குகிறீர்கள், இன்னும் பல்வேறு காரியங்களையும் செய்கிறீர்கள். நான் பிரசங்கித்த பிரசங்கம் உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? மார்ஜீ, அநேக ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மீது படையெடுப்பும், அமெரிக்க அரசு கவிழ்ந்து போகுதலையும் குறித்து நான் பிரசங்கித்தேனே, அது ஞாபகம் உள்ளதா? அவன் பாரிஸ் நகரத்தில் வளர்ந்தான் என்றும், அவனை இந்தப் பெண்களின் கையிலிருந்து மீட்டெடுத்த பின்பு - அதுவும், பெரிய தருணங்களும் - அவன் ஹாலிவுட்டில் பிரகாசித்தான் என்றும் நான் அப்பொழுது கூறினேன். இப்பொழுது நாம் மாடல் செய்யும் பெண்களைப் பெற, நாம் பாரிஸ் நகரத்துக்கு ஆட்களை அனுப்புவதற்கு பதிலாக, அவர்கள் மாடல்களைப் பெற இங்கு அனுப்புகின்றனர். அது என்ன? அது. நமது பிள்ளைகளை நாம் திரைப்படம் காண அனுப்புவதில்லை. ஆனால் அது தொலைக்காட்சியின் வழியாக உள்ளே நுழைந்து, எல்லாவற்றையும் மாசுபடுத்திவிட்டது.
இன்றைக்கு சிறுவரும் சிறுமியரும் ஏதோ ஒரு தொலைக்காட்சி நடிகரின் மேல் பிரியம் வைத்துள்ளனர். அது என்ன? அது வழி உண்டாக்குகிறது. ஒரு பெயர் கெட்ட ஸ்திரீ, இந்த நகரத்திலுள்ள எல்லா மதுபானக் கடைகளையும் விட அதிகம் பேரை நரகத்திற்கு அனுப்ப முடியும். அது உண்மை. அவள் உடைகளை களைந்த நிலையில் தெருவில் நடந்து செல்வதைக் கவனியுங்கள். அது எந்த மனிதனாயிருந்தாலும் அக்கறையில்லை. அவன் ஆரோக்கியமுள்ள மனிதனாக இருந்தால், அப்படிப்பட்ட ஒரு ஸ்திரீயை அவன் காணும் போது, அவனுக்கு ஒரு உணர்ச்சி தோன்றவே செய்யும். நான் உண்மையைக் கூறுகிறேன்.
95எனக்குக் கவலையில்லை. நான் அநேக ஆண்டுகளாக பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன். நீங்கள் அரை நிர்வாணமாயுள்ள ஒரு ஸ்திரீயை பார்த்த பிறகு... என் காரில் ஒரு சிறு சிலுவையை நான் வைத்திருக்கிறேன். ஒருவர் என்னிடம் ''நீங்கள் கத்தோலிக்கரா?'' என்று கேட்டார். கத்தோலிக்கர் எப்பொழுது சிலுவையை வைத்துக் கொள்ளும் பிரத்தியேக உரிமையைப் பெற்றனர்? சிலுவை என்றால்; ''கிறிஸ்தவன்'' என்று அர்த்தம்.
பரி. சிசிலியா போன்றவையே கத்தோலிக்க மார்க்கத்தின் சின்னங்கள். அத்தகைய சின்னங்களில் நமக்கு நம்பிக்கை கிடையாது. நாம் கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டுள்ளோம். இறந்து போனவர்களை தொழுதுகொள்ளும் எல்லாவிதமான வழக்கமும் அவர்களிடையே காணப்படுகிறது. அது இறந்தோரின் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் முறையின் (spiritualism) உயரிய நிலையாகும். அதில் ஏதாகிலும் இருக்குமானால், அது இறந்தோரைத் தொழுதுகொள்வதே. அப்படிப்பட்ட ஒன்று கிடையவே கிடையாது.
96அந்த கத்தோலிக்க குருவானவரிடம் நான், “அப்படியானால் ஏன்... பேதுரு தான் முதலாம் போப்பா?'' என்றேன்.
“அது சரியே'' என்றார்”.
அப்படியானால் பேதுரு ஏன், “தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியஸ்தர் மனுஷனாகிய கிறிஸ்து இயேசுவேயன்றி வேறு யாருமில்லை'' என்று கூற வேண்டும்? ”நீங்கள் இறந்து போன ஐயாயிரம் பெண்களை மத்தியஸ்தர்களாக்கிக் கொண்டுவிட்டீர்கள். இப்பொழுது என்ன நேர்ந்துவிட்டது. பார்த்தீர்களா?'' என்றேன். அவர்களால் அதற்கு பதில் சொல்ல முடியாது. அது உண்மை.
97இப்பொழுது அவர்களுடைய உபதேசங்கள் சிலவற்றை, கள்ள உபதேசங்களை, ஒரு கூட்டம் கள்ள பிராடெஸ்டெண்டுகளாகிய நீங்களும் அதை ஏற்றுக் கொள்கிறீர்கள். அது முற்றிலும் உண்மை. ஸ்தாபனங்கள், மற்றும் நீங்கள் கடைபிடிக்கும் ஞானஸ்நான முறைகள், பல்வேறு ஒழுங்குகள் போன்றவை முற்றிலும் வேதத்துக்கு முரணானவை. அது வேதத்துக்கு விரோதமாக அமைந்துள்ளது. இருப்பினும் அதை விடாப்பிடியாய் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை.
98இப்பொழுது பெண் பிரசங்கிகளைக் குறித்த இந்த வசனத்தைச் செவி கொடுத்து கேளுங்கள். முதலாவதாக, நான் 1 தீமோ: 2:11-ஐ எடுக்க விரும்புகிறேன். அது என்ன சொல்லுகிறதென்று கவனியுங்கள்.
ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக் கொள்ளக் கடவள்.
உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்க வேண்டும்.
1 தீமோ. 2:11-12.
இதை இங்கு எழுதி வைத்ததற்கு நான் பொறுப்பல்ல. இது இங்குள்ளதென்று உங்களுக்கு எடுத்துக் கூறுவதற்கே நான் பொறுப்புள்ளவனாயிருக்கிறேன்.
ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக் கொள்ளக்கடவள் (நீங்கள் எப்பொழுதாவது ஒரு வைதீக சபைக்குச் சென்றிருந்து, அவர்களை கவனித்திருந்தால் பாருங்கள்).
உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும், (ஒரு மேய்ப்ன், டீக்கன், அல்லது அதைப் போன்று எதுவாயிருந்தாலும் சரி) ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்க வேண்டும்.
என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான். பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
1 தீமோ . 2:11-13.
99உங்களுக்கு தெரியுமா... இப்பொழுது கவனமாய் கேளுங்கள், ஸ்திரீகளே, நல்ல, நீதியுள்ள கிறிஸ்தவ பெண்மணிகளே தேவன் ஒரு மனிதனுக்கு கொடுக்கக் கூடிய மிகச் சிறந்த ஒன்று. இல்லையெனில் அவர் அவனுக்கு வேறெதாவது ஒன்றைக் கொடுத்திருப்பார். ஆம், ஐயா. பாருங்கள்?ஸ்திரீ மூல சிருஷ்டிப்பில் இடம் பெறவில்லை. அவள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட பொருள் அல்ல. அவள் மனிதனின் உபபொருள். தேவன் மனிதனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். மனிதன் மிருகங்களுக்கு பெயரிட்டு இப்பூமியில் நீண்ட காலம் வாழ்ந்த பிறகே, அவர் அவர்களை பிரித்தெடுத்தார். அவர் ஆதாமின் விலாவிலிருந்து ஒரு எலும்பை உபபொருளாக எடுத்து ஸ்திரீயை உண்டாக்கினார். ''முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். இப்பொழுது கவனியுங்கள்.
மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
1 தீமோ . 2:14.
100தேவன் மனிதனை எடுத்துக் கொண்டார், பிசாசு ஸ்திரீயை எடுத்துக் கொண்டான். அதை முகத்துக்கு நேராக நோக்கிப் பாருங்கள். அதை இன்று செய்து கொண்டிருப்பது யார்? உண்மையான தேவனுடைய சபையைப் பாருங்கள். அது “இயேசு'' என்று சொல்லும். அந்தக் கிறிஸ்துவோ ”மரியாள்'' என்று சொல்லும். அந்த ஆவிகளைக் கவனியுங்கள். பார்த்தீர்களா? “தேவனுடைய தாயாகிய மரியாளே வாழ்க, ஸ்திரீகளில் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், எங்கள் மரண நேரத்தின் போது பாவிகளாகிய எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்”. மரியாள் வேண்டிக் கொள்வதா? ஓ, என்னே! பாருங்கள், ''ஸ்திரீகள், பிசாசின் பொருள். கிறிஸ்து ஒருவர் மட்டுமே தொழுகைக்குரியவர். பார்த்தீர்களா? பார்த்தீர்களா?
101முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. நீங்கள் எப்படி பெண் போதகரை, பெண் டீக்கனை கொண்டிருக்கலாம்? ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஆனால் ஸ்திரீ வஞ்சிக்கப்பட்டாள். அவள் உண்மையில்... அவள் செய்தது தவறு என்று நினைக்கவில்லை, ஆனால் அவள் தவறு செய்தாள். ஸ்திரீ வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். ஏனெனில் அவர்கள். ஒவ்வொரு முறையும் ஒரு பிரேதம் தெருவில் செல்லும் போதும், ஒரு ஸ்திரீயே அதற்கு காரணமாயிருந்தாள். பிரசவத்தின்போது வேதனையடைந்து, ஒரு குழந்தை அலறி வெளியே வரும்போதும், ஒரு ஸ்திரீயே அதற்கு கரணமாயிருந்தாள். ஒவ்வொரு முறை ஒருவர் மரிக்கும்போது, ஒரு ஸ்திரீயே அதற்கு காரணமாயிருந்தாள். ஒவ்வொரு நரைத்த தலைமயிரும், ஒரு ஸ்திரீயே அதற்கு காரணமாயிருந்தாள். தவறாயுள்ள அனைத்துக்குமே, ஒரு ஸ்திரீ காரணமாயிருந்தாள். அவ்வாறிருக்கையில், அவளை சபைக்குத் தலையாக, போதகராக, ஓ, சில வேளைகளில் பேராயராகவும் நியமிக்கின்றனர். அவளுக்கு அவமானம்.
102இன்னும் ஒரு நிமிடத்தில், உங்களுக்கு மற்றுமொரு வசனத்தை திருப்பிக் காண்பிக்கிறேன். இப்பொழுது நாம் 1 கொரிந்தியர் 14:32-க்கு வேதாகமத்தை திருப்பி, பவுல் அங்கே என்ன சொல்கிறான் என்று பார்த்துவிட்டு, இன்னும் ஒரு நிமிடத்தில் வேறு சில வசனங்களுக்குச் செல்வோம். உங்களை நீண்ட நேரம் வைத்திருக்க நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் காலையில் களைப்படைந்து மீண்டும் வர முடியாமல் போய்விடும். சரி, நான் வசனத்தைப் படிக்கப் போகிறேன். பவுல் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு போதித்தான் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? பவுல் இதே போல் தீமோத்தேயுவுக்கும் எழுதினான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். பாருங்கள்? இப்பொழுது, 1 கொரிந்தியர் 14:32. இப்பொழுது இங்கிருந்து தொடங்கி படிப்போம். அது 14:34 என்று நினைக்கிறேன்.
சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்...
1 கொரி. 14:34.
அவன் என்ன சொன்னான் என்று கேட்டீர்களா?
சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிக்கக்கடவர்கள்; அவர்கள் பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை. அவர்கள் அமர்ந்திருக்க வேண்டும்...
உங்கள் வேதாகமத்தில் ஓரக் குறிப்பு உள்ளதா? இருந்தால், அதை தொடர்ந்து பார்த்துக் கொண்டே போய், அது ஆதியாகமம் 3:16-க்கு உங்களைக் கொண்டு செல்கிறதா என்பதைப் பாருங்கள். தேவன் ஏவாளிடம், அவள் தன் புருஷனுக்கு பதிலாக சர்ப்பத்துக்கு செவி கொடுத்தபடியால், அவன் அவளுடைய ஜீவிய காலமெல்லாம் அவளை ஆண்டுக் கொள்வான் என்று கூறினார். அப்படியிருக்க மேய்ப்பராகவோ டீகனாகவோ இருந்து கொண்டு அவள் மனிதனை எப்படி ஆண்டு கொள்ளமுடியும்? வேதாகமம். ''அவள் கீழ்படிந்திருக்க வேண்டும் என்று உரைக்கிறதே. அது ஆதியிலிருந்ததுபோல, அப்பொழுது தேவன். தேவன் மாறமுடியாது. வார்த்தை ஒன்று இங்கும் வேறொன்று அங்குமாக கூற வைக்க உங்களால் இயலாது. அது அவ்விதம் செய்வதில்லை. ஒவ்வொரு முறையும் அது ஒன்றையே கூறும். எனவே ஆதியில், அங்குதான்...
103இது முடியும் முன்பு, எனக்கு தருணம் கிடைத்தால் விவாகமும் விவாகரத்தும் என்னும் விஷயத்தை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதை நான் இன்னும் இந்த சபையில் செய்யவில்லை. இந்த இரட்டை உடன்படிக்கையைப் பாருங்கள். ஒன்று அவள் விவாகம் செய்து கொள்ளலாம் என்கிறது, மற்றது அவள் விவாகம் செய்து கொள்ளக் கூடாது என்கிறது. இது இதை, அதை, மற்றதை கூறுகிறது. அதற்கு நாம் வரும்போது, வேதம் அதைக் குறித்து என்ன உரைக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஒரு நிமிடம் பொறுத்திருங்கள். பாருங்கள்? சரி. இங்கு கவனியுங்கள்.
104சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்க வேண்டும்; (ஆங்கில வேதாகமத்தில் “they are Commanded to be under obedience” அதாவது ''அவர்கள் “கீழ்ப்படிந்திருக்க கட்டளையிடப்பட்டுள்ளனர்'' என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்);
வேதமும் அப்படியே சொல்லுகிறது.(ஆங்கிலத்தில் “as also saith the law” அதாவது “நியாயப் பிரமாணமும் அப்படியே சொல்லுகிறது - தமிழாக்கியோன்). அப்படியானால், பழைய ஏற்பாட்டில், அவர்கள் பேச அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் பவுல் அவ்விதம் கூறுகிறான். அது சரியா? ''உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள். அது கீழ்ப்படிதல்'' உங்கள் ஓரக் குறிப்புகளை நீங்கள் பார்த்துக் கொண்டே போக விரும்பினால், அது ஆதியாகமம் 3:16-க்கு உங்களைக் கொண்டு செல்லும். பாருங்கள்? சரி. ''நியாயப் பிரமாணத்தின் கீழும்.''
அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக் கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக் கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே. வேத வசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது...
1 கொரி. 14:35-36.
105உங்கள் வேதாகமங்கள் ஒவ்வொன்றிலும் அந்த கேள்விக் குறியைக் கவனியுங்கள். பவுல் அதைச் சொல்லவும் அவ்விதம் நடந்து கொள்ளவும் காரணம் என்ன? கொரிந்தியர் பவுலுக்கு எழுதின கடிதங்களை நீங்கள் படிக்க நேரிட்டால் - அவை எந்த ஒரு நல்ல நூலகத்திலும் கிடைக்கும். பாருங்கள், கொரிந்தியர் பவுலுக்கு எழுதி தெரிவித்தனர். இந்த ஸ்திரீகள் மனம் மாறின பின்பு... அவர்களுக்கு 'தியானாள்' (Diana) என்னும் பெயருள்ள பெண் தெய்வம் ஒருத்தி இருந்தாள். அவள் எபேசுவிலும் இருந்தாள். கொரிந்தியர் அவளை வணங்கி வந்தனர். அது அஞ்ஞான வழிபாடு.
அவர்கள் வயலில் ஒரு கல்லை கண்டெடுத்தனர், அது ஒரு ஸ்திரீயின் உருவத்தைப் போலிருந்தது. எனவே அவர்கள், ''தேவன் ஒரு பெண், அவள் தன் சொரூபத்தை நமக்கு கீழே போட்டுத் தந்தாள்''என்றனர். அவளுடைய ஆலயம் சாலொமோனின் ஆலயத்தைக் காட்டிலும் சிறந்து விளங்கியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஓ, அது முழுவதும் சலவைக் கற்களினால் கட்டப்பட்டு பொன்னினால் மூடப்பட்டிருந்தது. சாலொமோனின் தேவாலயமோ கேதுரு மரங்களினால் செய்யப்பட்டு பொன்னினால் மூடப்பட்டிருந்தது. பாருங்கள்? இது அதைக் காட்டிலும் சிறந்து விளங்கினது. தேவன் ஒரு பெண்ணாக இருந்தால், அவள் நிச்சயமாக பெண் பூசாரிகளைக் கொண்டிருக்கலாம். பாருங்கள், நிச்சயமாக. தேவன் ஒரு பெண்ணாயிருந்தால், பெண் பிரசங்கிகளைக் கொண்டிருப்பது சரியே. ஆனால் தேவன் ஒரு ஆண். அப்படித்தான் வேதம் உரைக்கிறது. அவர் ஒரு மனிதன். பாருங்கள்? தேவன் ஒரு மனிதனாயிருந்தால், அப்பொழுது பிரசங்கிகளும் மனிதராயிருக்க வேண்டும்.
106இப்பொழுது கவனியுங்கள்
இப்பொழுது, பெண் பூசாரிகளில் சிலர் அஞ்ஞான மார்க்கத்தை விட்டு விலகி கிறிஸ்தவ மார்க்கத்தை தழுவினபோது, அவர்கள் இங்கேயும் பிரசங்கி என்னும் தங்கள் அலுவலை வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினர். அங்கு அவர்கள் தியானாளைக் குறித்து பிரசங்கித்தால், இங்கு வந்து கிறிஸ்துவைக் குறித்து பிரசங்கிக்கலாம் என்று எண்ணினர். “தேவ...''
அவன், ''தேவ வசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது?'' என்கின்றான். சகோதரனே, இதை செவி கொடுத்து கேளுங்கள். 36-ம் வசனம்.
தேவ வசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது?
ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால் (அவன் தீர்க்கதரிசியாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, அவன் ஆவியைப் பெற்று சிந்திக்கும் மனிதனாக இருந்தால் போதும்), நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன் (அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?)
ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும்.
இப்பொழுது, எனக்குத் தெரிந்தமட்டில் இதை மிகவும் வெளிப்படையாக தெரிவித்துவிட்டேன். பாருங்கள், அவன், ''ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன். ஆனால் ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும்'' என்கிறான். பாருங்கள், அதைக் குறித்து நீங்கள் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று என்னவெனில், அவர்கள் அதை தொடர்ந்து செய்ய விரும்பினால், அவர்களை விட்டுவிடுவதே. ஏனெனில் அது அங்கு தொடங்கினதை அவன் அறிந்திருக்கிறான்.
107ஒரு ஸ்திரீ என்னிடம், “ஓ, பவுல் ஸ்திரீகளின் மேல் வெறுப்பு கொண்டிருந்தான்” என்றாள்.
அவன் ஸ்திரீயை வெறுக்கும் ஒருவன் அல்ல. பவுல் புறஜாதி சபைக்கு அப்போஸ்தலன் என்று உங்களுக்குத் தெரியும். இங்கு பாருங்கள். உங்களுக்குத் தெரியுமா பவுல்... அதை தான் பவுல் பிரசங்கித்தான் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அதைத் தான் பவுல் இங்கு கூறியுள்ளானா? பவுல் சொன்னான்...
நீங்கள், ''நல்லது, ஒரு நிமிடம் பொறுங்கள், சகோ. பிரன்ஹாமே, ஒரு நிமிடம்! எங்கள் பேராயர் அதனால் பரவாயில்லை என்கிறார். பொதுவான மேற்பார்வையாளரும், அசெம்பிளிஸ் சபையும் அதனால் பரவாயில்லை என்கின்றனர். ஒருத்துவம் சபையின் பேராயரும் அதனால் பரவாயில்லை என்கிறார் எனலாம்.
அவர்கள் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை, அது தவறு! இதை ஆணித்தரமாக பதிய வைக்கப் போகிறோம் என்று நான் ஏற்கனவே கூறினேன். கள்ளத் தீர்க்கதரிசிகள் அவ்வாறே கூறுவார்கள். ஏனெனில் வேதம், “ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன்'' என்றுரைக்கிறது. ஒருவனுடைய ஆவி அந்த வார்த்தைக்கு சாட்சியாயிராவிடில், அவன் தொடக்கத்திலேயே கள்ளத்தீர்க்கதரிசியாவான். நான் அப்படிப்பட்ட விஷயத்தோடு ஒத்துப்போய், அப்படிப்பட்ட விஷயத்தை பொறுத்துக் கொண்டு, ஸ்தீரிகளை நேசிப்பவனாயிருப்பதைக் காட்டிலும் ஸ்திரீகளை வெறுப்பவனாக இருக்கவே விரும்புவேன். இவை தேவனுடைய சபைக்கு, தேவனுடைய நியமங்களுக்கு முரணாக உள்ளன. பவுல், ''நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனும் கூட வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்'' என்று கலா: 1:8-ல் கூறியுள்ளான்.
108அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் ''உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்'' என்று யோவேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் உரைக்கப்பட்டு, பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு அதை மேற்கோள் காட்டினானே, அதைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்கலாம். அது முற்றிலும் உண்மையே.
உங்களுக்குத் தெரியுமா, பழைய ஏற்பாட்டின் காலத்திலும், இப்பொழுதும் உடன்படிக்கைக்குள் வரக்கூடிய ஒரே வழி... ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டது, அந்த வாக்குத்தத்தம் முத்தரிக்கப்பட்டது. விருத்தசேதனத்தின் மூலமாகவே, எத்தனை பேருக்கு அது தெரியும்? அது தேவன் உறுதிப்படுத்துதல்.
109ஒரு பாப்டிஸ்டு சகோதரன் என்னிடம், “சகோ. பிரன்ஹாமே, பாப்டிஸ்டுகளாகிய நாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டுவிட்டோம்'' என்றார்.
''நீங்கள் எப்பொழுது அதைப் பெற்றுக் கொண்டிர்கள்?'' என்று கேட்டேன்.
''நாங்கள் விசுவாசித்த அந்த நேரத்தில்'' என்றார்.
அதற்கு நான், ''பவுல், நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? என்றல்லவா கேட்டான்'' என்றேன். பாருங்கள்? “பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் வந்து அதில் சிலவற்றை ஏற்றுக் கொள்வீர்களானால், நாங்களும் உங்களுடன் கூட சேர்ந்து நித்திய பாதுகாப்பைக் குறித்து பேசுவோம் என்றேன். நான் தொடர்ந்து, ”நல்லது, அதை அந்த விதமாக எங்கு பெற்றீர்கள்?'' என்று கேட்டேன். பாருங்கள்? பவுல், ''நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியை பெற்றீர்களா?' என்று கேட்டான். அவர்கள் விசுவாசிகள். அவர்கள் கூச்சலிட்டு, களிகூர்ந்து, மற்ற அனைத்தையும் பெற்றிருந்தனர். இருப்பினும் அவர்கள் பரிசுத்த ஆவியை அப்பொழுதும் பெற்றுக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை என்று பவுல் கூறினான். பாருங்கள்,
“நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?''
அதற்கு அவர்கள் “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை'' என்றார்கள்.
அப்பொழுது அவன், “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?'' என்றான்.
அவர்கள், “நாங்கள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம் என்றனர். ஆனால் தவறான வகையில், பாருங்கள், எனவே அவர்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிற்று.
110இப்பொழுது இதை கவனியுங்கள். பெண் பிரசங்கிகள் உள்ளே நுழைந்த போது, அவர்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினர். ஆனால் அவர்கள் அவ்விதம் செய்ய தேவனால் அனுமதிக்கப்படவே இல்லை... இந்த ஸ்திரீகளைக் குறித்த பொருளின் பேரில் நமது சிந்தனையை செலுத்திக் கொண் டிருக்கும் இந்நேரத்தில். ''உங்களில் ஒருவன் தன்னை தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன். ஆனால் ஒருவன் அறியாதவனாயிருந்தால் (ignorant), அவன் அறியாதவனாயிருக்கட்டும்'' என்று வேதம் உரைக்கிறது. எனவே தான் இந்தக் கூடாரம் பெண் பிரசங்கிகளையோ, பெண் டீகன்களையோ, இந்த சபையிலுள்ள எந்த அலுவலிலுமே நியமிப்பதில்லை. ஏனெனில் இங்கு வைக்கப்பட்டுள்ள இந்த வேதாகமம் அதை வெளிப்படையாய் உரைக்கிறது.
111இப்பொழுது, வேதம், “உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்” என்று கூறியுள்ளது உண்மையே. ''தீர்க்கதரிசனம் சொல்லுதல்“ என்பதற்கு அர்த்தம் என்ன? அதை அகராதியில் பாருங்கள். அதற்கு, ''ஊக்கம் பெற்று, ஒன்றைக் கூறுதல்” அல்லது “ஒன்றை முன்னுரைத்தல்'' என்று பொருள். அது ஒரு இரட்டை அர்த்தம் கொண்ட சொல்.
பரிசுத்தமாக்கப்படுதல் என்றால், 'சுத்திகரிக்கப்பட்ட, ஊழியத்திற்கென்று ஒதுக்கி வைக்கப்படுதல்' என்னும் அர்த்தம் போல. பாருங்கள்? அது ஒரு அர்த்தத்தைக் காட்டிலும் அதிக அர்த்தம் பெற்றுள்ள சொல். அவ்விதமான சொற்கள் ஆங்கில மொழியில் நிறைய உள்ளன.
நாம் 'போர்ட்' (board) என்று சொல்லுகிறோம். அந்த சொல்லுக்கு அர்த்தம் என்ன? நாம், ''நல்லது, அவனுடைய 'போர்டுக்கு' (வாரியத்துக்கு) அவன் பணம் செலுத்தினான்'' என்கிறோம். ''அவன் ஒரு துளையை போட்டான் (bored) என்னும் அர்த்தத்திலும் அந்த சொல்லை நாம் உபயோகிக்கிறோம். ''அவன் அவனை போரடித்தான் (bored)“ என்றும் நாம் கூறுகிறோம். பாருங்கள், ஒரே ஒரு சொல். நீங்கள் எந்த அர்த்தத்தில் அதை உபயோக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். பாருங்கள்?
அப்படித்தான் “உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசினம் சொல்லுவார்கள்” என்னும் வசனத்திலும் கூட இந்த இரட்டை அர்த்தம் கொண்டுள்ள சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. தேவன் நியமித்துள்ள ஒரே வழி...
112இந்த பாப்டிஸ்டு, “நல்லது, நாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டுவிட்டோம்'' என்றார்.
நான் சொன்னேன்....
''நாங்கள் விசுவாசித்த போது என்றார்.
நான் சொன்னேன்.... இப்பொழுது, பாருங்கள்,
பவுல், ''தேவன் ஆபிரகாமுக்கு...'' அவன், ''ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் என்றான். அப்படித்தான் அவன் கூறினான். அவன், ''ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது“, என்றான். அது உண்மையென்று எத்தனை பேருக்கு தெரியும்? இப்பொழுது கவனியுங்கள், சாத்தான் எவ்வளவு எளிதாக அதை ஒரு சகோதரனின் மேல் நழுவவிட முடியுமென்று பாருங்கள், மிகவும் எளிதாக. இப்பொழுது, அது வேத வசனம்.
சகோதரனே, உங்களுக்கு நான் கூறுகிறேன், இதற்குள் நீங்கள் பிரவேசிப்பதற்கு முன்பு, நீங்கள் ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அந்தரங்கமான ஒரு இடத்துக்குச் சென்று ஜெபிக்க வேண்டும்.''நீங்கள் ஏன் வெளியே சென்று ஜனங்களை சந்திக்கக் கூடாது?'' என்று ஜனங்கள் கேட்கின்றனர். சகோதரனே, நீங்கள் ஜனங்களிடம் பேசவோ அல்லது அவர்களுக்குப் போதிக்கவோ வேண்டுமென்றால், அந்த பிரசங்க பீடத்தில் ஏறுவதற்கு முன்பு நீங்கள் தேவனுடன் சற்று நேரம் தனித்திருப்பது நலம். நிச்சயமாக, பாருங்கள், ஏனெனில் சாத்தான் கெட்டிக்காரன், மிகவும் கெட்டிக்காரன்.
113இப்பொழுது, அந்த பாப்டிஸ்டு சகோதரன் கூறினார், கவனியுங்கள், அவர், ''ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அதுஅவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அது உண்மை. அவர், ''ஆபிரகாம் தேவனை விசுவாசிப்பதைக் காட்டிலும் வேறென்ன அதிகமாக செய்யமுடியும்?'' என்றார்.
நான், “அவ்வளவுதான் அவனால் செய்ய முடியும்” என்றேன்.
அவர், ''விசுவாசிப்பதைக் காட்டிலும் அதிகமாக நீங்கள் அல்லது வேறு யாராகிலும் வேறென்ன செய்ய முடியும்?'' என்றார்.
நான், “அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும். ஆனால், பாருங்கள், சகோதரனே, தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை அங்கீகரித்தார். அவர் அவனுக்கு ஒரு முத்திரையை, விருத்தசேதனம் என்னும் அடையாளத்தை, உடன்படிக்கையின் முத்திரையாக அளித்தார். பாருங்கள், அவர் அவனுக்கு அளித்தார். அவர், ”ஆபிரகாமே, உன் விசுவாசத்தை நான் அங்கீகரிக்கிறேன். எனவே உன்னை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக உனக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கப் போகிறேன் என்று சொன்னார்“, என்றேன்.
எனவே அவர் ஆபிரகாமை விருத்தசேதனம் செய்தார், அது உடன்படிக்கையின் முத்திரையாயிருந்தது. இப்பொழுது இந்த நாளில் ஒரு ஸ்திரீ அந்த உடன்படிக்கையில் இருக்கமுடியாது; விவாகம் செய்துள்ள ஸ்திரீ மட்டுமே. ஒரு ஸ்திரீக்கு விருத்தசேதனம் செய்ய முடியாது. எனவே அவளும் அவளுடைய புருஷனும் ஒன்றாயிருக்கிறார்கள். அவர்கள் இனி இருவர் அல்ல. அவர்கள் ஒருவரே. எத்தனை பேருக்கு அது தெரியும்? வேதம் அவ்விதம் உரைக்கிறது. எனவே அவள் விவாகம் செய்து கொண்டதன் மூலமாக, அவள் ஒன்றாகிவிடுகிறாள். நீங்கள் இங்கு பார்த்துக் கொண்டேவந்து, தீமோத்தேயுவில் பாருங்கள். அதுவும் அதை தான் கூறுகிறது. அது, ''அப்படியிருந்தும், தெளிந்தபுத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலை கொண்டிருந்தால், பிள்ளைபேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்'' என்றுரைகிறது.
114ஆனால் பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனம் மாம்சத்தில் செய்யப்பட்டது. ஆனால் புதிய ஏற்பாட்டில், “கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்” என்று யோவேல் கூறினான். தீர்க்கதரிசனம் உரைத்தல் என்னும் சொல் போதிப்பது என்று அர்த்தம் கொண்டதல்ல. அது “பரிசுத்த ஆவியின் ஊக்கத்தினால் ஒரு அனுபவத்தை எடுத்துரைத்தல் அல்லது நடக்கவிருப்பதை முன்னுரைத்தல் என்று பொருள்படும். பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனம் உரைத்த பெண்கள் இருந்தனர் என்று நாமறிவோம். அவர்கள் ஒரு கட்டிடத்தில், ஒரு சபையில், சபையோருக்கு போதிக்க முடியாது. ஆனால், பாருங்கள், அன்னாளும், இன்னும் அநேகரும், தேவாலயத்தில் தீர்க்கதரிசினிகளாக விளங்கினர். மிரியாம் ஒரு தீர்க்கதரிசினி, அப்படி ஏதோ ஒன்று. அவள் மீது ஆவி தங்கி இருந்தது. அது உண்மையே, ஆனால் அந்த ஸ்தானத்தில்; அவளுக்கு ஒரு வரம்பு இருந்தது.
ஸ்திரீகள் இன்று தீர்க்கதரிசினிகளாக இருக்கலாம். நிச்சயமாக, ஆனால் அவர்கள் மேடையின் மேல் நின்றுகொண்டு போதிப்பவர்களாக இருக்க முடியாது. அவ்விதம் நீங்கள் செய்வீர்களானால், வேதாகமம் தன்னில் தானே முரணாக இருப்பதாக அதைச் செய்து விடுவீர்கள். வேதாகமம் ஒரு காரியத்தை இங்கும், வேறொரு காரியத்தை அங்கும் கூற முடியாது. அது எல்லா நேரத்திலும் ஒரே காரியத்தை உரைக்க வேண்டும், இல்லையென்றால், அது தேவனுடைய வார்த்தை அல்ல. பாருங்கள், எனவே உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்''
115இப்பொழுது வேதாகமம், பாவனை செய்த அல்லது உரிமை கொண்டாடின ஒரு ஸ்திரீயைக் குறித்து உரைக்கிறது. அதாவது அவள்... இது கத்தோலிக்க சபைக்கும், இப்பொழுது நாம் பேசவிருக்கும் இந்த சிறு பொருளுக்கும் பொருத்தமாக இருக்கும். நாம் வேதாகமத்தை வெளிப்படுத்தின விசேஷம் 2-ம் அதிகாரம் 20-ம் வசனத்துக்குத் திருப்புவோம். அதற்கு அருகிலே நாம் இருக்கையில், அது எவ்வளவு பிசாசுத்தனமாக உள்ளதென்றும், இந்த கடைசி நாட்களில் என்ன நடக்கும், இந்த ஸ்திரீ எவ்விதமாக இருப்பாள் என்று அது உரைப்பதையும் நீங்கள் கண்டு கொள்ளலாம். கத்தோலிக்க சபை ஒரு ஸ்திரீ என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதை சற்று முன்பு நாம் படித்தோம், அல்லவா? இது என்ன உரைக்கிறது என்பதைக் கவனமாகக் கேளுங்கள்: வெளி. 2:20. ''ஆகிலும்...'' அவர் இந்த தியத்தீரா சபையிடம் பேசிக் கொண்டிருக்கிறார், பாருங்கள். ''ஆகிலும்“. அது மத்திய காலச் சபை, இருள் காலங்கள் வழியாக கடந்து சென்றது.
ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
பாருங்கள்?
வெளி. 2:20.
116இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், இந்த சபைக் காலங்களைக் கவனியுங்கள், அதன் பிறகு நாம் முடித்துவிடுவோம். கவனியுங்கள்... யூதருடைய ஆசரிப்பு கூடாரத்துக்குள் பொன் குத்துவிளக்குகள், சமுகத்தப்பம் ஆகியவை இருந்தன. அங்கு ஏழு பொன் குத்துவிளக்குகள் ஏழு சபை காலங்களைக் குறிக்கின்றன. நீங்கள் கவனிப்பீர்களானால், வெளிப்படுத்தல் முதலாம் அதிகாரத்தில் இயேசு சபை காலங்களின் மத்தியில், ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியில் இருப்பதைக் காணலாம். யோவான் திரும்பினபோது, மனுஷகுமாரனுக் கொப்பான ஒருவர் நிலையங்கி தரித்து நிற்பதைக் கண்டான். அது எப்படியிருந்ததென்றால், மணவாட்டி குத்துவிளக்குகளில் நின்று கொண்டிருந்தாள்.
இப்பொழுது பழைய ஏற்பாட்டின் காலத்தில் அவர்கள் நெருப்பை எடுத்து ஒரு குத்துவிளக்கை எரியச் செய்து, இந்த குத்துவிளக்கிலுள்ள நெருப்பைக் கொண்டு அடுத்த குத்துவிளக்கை தீ மூட்டி எரியச் செய்து, பிறகு இதிலிருந்து அடுத்தது, அவ்விதம் செய்து கொண்டே வந்து, ஏழு குத்துவிளக்குகளையும் எரியச் செய்வார்கள்.
117நீங்கள் கவனிப்பீர்களானால், தொடக்கத்தில் தேவன் யூதர்களோடு ஈடுபட்டபோது, அவர்களுக்கு அது பொற்காலமாக விளங்கினது. அதன் பிறகு தேவன் யூதர்களுடன் ஈடுபட்டதில் அவர்களுக்கு இருந்த மிகவும் இருண்டகாலம், ஆகாபின் ஆட்சியின் போதுதான். நீங்கள் கவனிப்பீர்களானால், நீங்கள் சபை காலங்களைப் படித்துப் பார்ப்பீர்களானால், அதற்கு அவர் மறுபடியும் வருகிறார். சில காரியங்களைக் குறித்து அவளுக்கு குறை உள்ளதாக கூறுகிறார். அந்த இருண்ட காலத்தில், அல்லது ஆகாபின் காலத்தில் யூதர்களுக்கு இருண்ட காலம் உண்டாயிருந்தது. ஆகாப் யேசபேலை விவாகம் செய்து இஸ்ரவேலுக்குள் விக்கிரகாராதனையைக் கொண்டு வந்து, ஜனங்களை யேசபேலின் தெய்வத்தை வணங்கச் செய்தபோது, அதுவே அவர்களுக்கு மிகவும் இருண்ட காலமாக இருந்தது? உங்களுக்கு ஞாபகமுள்ளதா, அவர்கள் தேவனுடைய பலிபீடங்களைத் தகர்த்து போட்டு, தோப்பு விக்கிரகங்களை வைத்தனர். எலியா ''நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்'' என்று கதறினான். ஆனால் பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடாத எழுநூறு பேரை தேவன் வைத்திருந்தார். உங்களுக்கு அது ஞாபகமுள்ளதா? அது தெரிந்து கொள்ளப்பட்ட சபை வெளியே வருவதற்கு முன்னடையாளமாக உள்ளது. அங்கு பாருங்கள், அது எவ்விதம் உள்ளதென்று பார்த்தீர்களா?
118இப்பொழுது, இந்த சபைக் காலங்களில், நீங்கள் கவனிப்பீர்களானால், முதலாம் சபை, முதலாம் சபை, எபேசு சபை ஒரு மகத்தான சபையாக விளங்கினது. அவர், ''உனக்கு இன்னும் உயிருள்ளது'' என்றார். நீங்கள் ஒவ்வொரு சபையையும் கவனித்துக் கொண்டே வருவீர்களானால், அது மங்கிக் கொண்டே வந்து, மங்கிக் கொண்டே வந்து, மங்கிக் கொண்டே வந்து, தியத்தீரா சபைக் காலத்தை அடைந்தது. அதன் பிறகு ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள். அதன்பிறகு அது மறுபக்கத்தை அடைந்தது. “உனக்கு சிறிது வெளிச்சம் மட்டும் உண்டு. உனக்குள்ளதை ஸ்திரப்படுத்து, இல்லையென்றால், உன் விளக்குத் தண்டு நீக்கப்படும். அது படிப்படியாக பிலதெல்பியாசபை காலத்துக்கு வந்து, அதன் பிறகு லவோதிக்கேயா சபை காலத்தை அடைகிறது.
119இப்பொழுது, இதோ அந்த அழகான காரியம். ஓ, என்னே! சகோ. ஸ்மித், இது எனக்கு அதிக பிரியம். இதை பாருங்கள். இந்த சபை காலத்தில், நாம் பார்த்த விதமாக... இதை கவனியுங்கள். முதலாம் சபை காலம், எபேசு, எபேசு சபைக் காலம். இந்த ஆயிரத்தைந்நூறு ஆண்டு காலத்தை அடையும் வரைக்கும் இந்த ஒவ்வொரு சபை காலத்திலும், நீங்கள் கவனிப்பீர்களானால்... இன்றிரவு நீங்கள் வீடு திரும்பின பிறகு உங்களுக்கு நேரமிருந்தால் இதை படித்துப் பாருங்கள், அல்லது நாளை விடியற் காலையில், நீங்கள் சபைக்கு வருவதற்கு முன்பு, வெளிப்படுத்தல் 1ம், 2ம், 3ம் அதிகாரங்களைப் படியுங்கள். நீங்கள் என்ன காண்பீர்களென்றால், அந்த சபை காலங்கள் ஒவ்வொன்றிலும், அவர், ''உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், என் நாமத்தை மறுதலியாமல் இருக்கிறாய்'' என்று இருண்ட காலமாகிய ஆயிரத்தைந்நூறு ஆண்டு காலம் தியத்தீரா சபையின் காலம் வரும் வரைக்கும் கூறி வந்தார். அதன் பிறகு அவர் மறுபக்கத்துக்கு வந்து, “நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்'' என்றார். (ஆங்கிலத்தில், ''உனக்கு ஒரு நாமம் உண்டு, அதைக் கொண்டு நீ உயிர் வாழ்கின்றாய், ஆனால் நீ செத்தவனாயிருக்கிறாய் என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்).
120வேறெந்த சபைகளும், பிலதெல்பியா சபை, அந்த நாமத்தை மறுபடியும் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த நாமத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் அது போய்விட்டிருந்தது. இப்பொழுது, ஓ, அவர்களுடைய கள்ளப்போதகங்களே அதற்கு பொறுப்பு என்பதை எடுத்துக்காட்டி, அதற்கு காரணம், எல்லாவற்றிற்கும் தாயாகிய கத்தோலிக்க சபையே என்பதை காண்பிக்கலாம். அவள் “தாய், இரகசியம், பாபிலோன்” ஆக இருக்கிறாள். அது தான், பாருங்கள், அந்த சபை காலம் கொஞ்சம் வெளிச்சத்தைக் கொண்டிருந்தது. ஆனால் அது மங்கிக்கொண்டே வந்து, ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக ஸ்தாபனத்துக்குள் இருந்தது. இப்பொழுது அது வெளிவந்துவிட்டது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபையாக அல்ல, ஆனால் கத்தோலிக்க சபையாக. லூத்தர் எந்த விதமாக வெளி வந்தார்? லூத்தரன் சபையாக, பாப்டிஸ்டுகள் எந்த விதமாக வெளி வந்தனர்? பாப்டிஸ்டு சபையாக. அவருடைய நாமமல்ல, அவருடைய நாமமல்ல, வேறொரு நாமம். “உனக்கு ஒரு நாமம் உண்டு.'' நீங்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, வானத்தின் கீழே இயேசு கிறிஸ்துவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை.'' உனக்கு ஒரு நாமம் உண்டு. அதைக் கொண்டு உயிர் வாழ்கின்றாய், ஆனால் நீ செத்தவனாயிருக்கிறாய். அது அந்த ஸ்தாபனத்தைக் குறித்துச் சொல்லப்பட்டது.
121“ஓ, நான் ஒரு பிரஸ்பிடேரியன்'' நீ செத்தவனாயிருக்கிறாய்! ''ஓ, நான் ஒரு பாப்டிஸ்டு'' நீ செத்தவனாயிருக்கிறாய்! நீ கிறிஸ்து இயேசுவில் உயிர்ப்பிக்கப்படும்போது மாத்திரமே உயிரோடிருக்கிறாய். அது உண்மை. உங்கள் தவறான தண்ணீர் ஞானஸ்நானம், தண்ணீரில் முழுக்குவதற்கு பதிலாக தெளித்தல், ஊற்றுதல், இயேசுகிறிஸ்துவின் நாமத்தை உபயோகிப்பதற்கு பதிலாக ”பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' நாமத்தை உபயோகித்தல், இந்த தவறான காரியங்கள் எல்லாம், வேதம் கூறினவிதமாகவே உள்ளே வேகமாக நுழைந்து கொண்டிருக்கின்றன. நாம் இவைகளைப் பொறுத்துக்கொண்டு, ''நல்லது, என் சபை அதை இந்த விதமாக விசுவாசிக்கிறது'' என்கிறோம். ஆனால் வேதம் இவ்விதம்தான் கூறியுள்ளது. பாருங்கள்? அப்படிப்பட்டவை கிடையவே கிடையாது.
122வேதத்தில் எந்தவிடத்திலும், அவர்கள் நாவை நீட்டி பரிசுத்த யூகாரிஸ்டைப் பெற்றுக் கொண்டு குருவானவர் திராட்சை ரசத்தைக் குடித்துவிட்டு, அதை பரிசுத்த ஆவி என்று அழைக்கவில்லை. அவர்கள் கைகளைக் குலுக்கி ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுத்து, அதை பரிசுத்த ஆவி என்று அழைத்ததாக வேதத்தில் எங்கும் காணப்படவில்லை. ஒருவர் எழுந்து நின்று ''இப்பொழுது நான் ஒரு விசுவாசி'' என்று கூறிவிட்டு பரிசுத்த ஆவிவைப் பெற்றுக் கொண்டதாக வேதத்தில் எங்கும் காண்படவில்லை. அவ்விதம் அவர்கள் பெற்றிருந்தால் அப்போஸ்தலர் 2-ம் அதிகாரம் இந்த விதமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, ஒரு ரோம குருவானவர் சாலையின் வழியாக வந்தார், அவருடைய கழுத்துப்பட்டை திருப்பி அணியப்பட்டிருந்தது. அவர் நடந்து வந்து, ”நீங்கள் உங்களை நாவை நீட்டி பரிசுத்த யூகாரிஸ்டை, முதலாவது இராப்போஜனத்தை, பெற்றுக் கொள்ளுங்கள்“ என்றார். அந்த விதமாக அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தை படிப்பது சரியாயிருக்குமா?
123நல்லது , பிரொடெஸ்டெண்டுகளாகிய நீங்களும் அவ்வாறே மோசமாய் இருக்கின்றீர்கள். நாங்கள் மெதோடிஸ்டுகளாகிய உங்களிடம் வரும்போது, நீங்கள் ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுத்து ஆறு மாதம் பயிற்சிக் காலத்தில் (Probation) வைக்கிறீர்கள். அதை அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் எங்கு படிக்கிறீர்கள்? பாருங்கள்?அதை எங்கிருந்து பெற்றுக் கொண்டீர்கள்? பாருங்கள்?
அது என்ன கூறுகிறதென்றால், ''அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். எந்த ஒரு பேராயரும் அங்கு வந்து இதைச் செய்யவில்லை. எந்த ஒரு குருவானவரும் அங்கு வந்து இதைச் செய்யவில்லை. ''அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று'' அந்த விதமாகத்தான் அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டனர். ஆம், ஐயா, பலத்தகாற்று அடிக்கிற முழக்கம் போல் மகிமையிலிருந்து இறங்கிவந்தது. ஏதோ ஒரு ஸ்தாபனத்திலிருந்து அல்ல. ''உனக்கு... ஒரு நாமம் உண்டு. அதைக் கொண்டு நீ உயிர் வாழ்கின்றாய். ஆனால் நீ செத்தவனாயிருக்கிறாய்.''
124பாருங்கள், உங்கள் கோட்பாடுகளும் ஸ்தாபனங்களும் தேவனை அந்த விதமாக தடை செய்துவிட்டு, இப்பொழுது நீங்கள், “இதை நாங்கள் விசுவாசிக்கிறோம். அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று விசுவாசிக்கிறோம்,'' என்கிறீர்கள். அப்படி கள்ளத்தீர்க்கதரிசி தான் கூறுவான். ''நீங்கள் கைகளை குலுக்கி பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளலாம் என்று உங்களிடம் கூறுபவன் ஒரு கள்ளத்தீர்க்கதரிசியே. ”தண்ணீர் முழுக்கு ஞானஸ் நானத்துக்குப் பதிலாக நீங்கள் ஊற்றப்பட வேண்டும். தெளிக்கப்பட வேண்டும்'' என்று உங்களிடம் கூறுபவன் ஒரு கள்ளத்தீர்க்கதரிசியே. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டுமென்று உங்களிடம் கூறுபவன் ஒரு கள்ளத்தீர்க்கதரிசியே. அதற்கு ஆதாரமாக வேதத்தில் எந்த வசனமும் இல்லை. அது உண்மை. வேதத்தில் ஞானஸ்நானம் பெற்ற எவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மாத்திரமே பெற்றுக் கொண்டனர். யோவானின் சீஷர்களைத் தவிர, அவர்களும் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்காக மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிற்று. அது உண்மை.
அது இயேசு மாத்திரம் ஸ்தாபனத்தின் உபதேசம் அல்ல. அவர்களுடைய உபதேசத்தை நான் அறிந்திருக்கிறேன். அதுவல்ல. இது வேத உபதேசம். அது உண்மை.
பார்த்தீர்களா? அதைக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அதோ உங்கள் தாய். அதோ அந்த கோட்பாடுகளின் தாய்.
125நீங்கள் வேதத்தை வாசித்து, யாராகிலும் தெளிக்கப்பட்டனரா என்பதை எனக்கு அறிவியுங்கள். மெதோடிஸ்டு, பிரஸ்பிடேரியன், கத்தோலிக்கர் யாரானாலும், வேதத்தில் ஒருவராகிலும் தெளிக்கப்பட்டதை எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். பாவ மன்னிப்புக்காக வேதத்தில் ஒருவராகிலும் ஊற்றப்பட்டு ஞானஸ்நானம் பெற்றதை எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். அதை எடுத்துக் கூறுங்கள். உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? அப்படியானால் என்னிடம் வந்து அதைக் காண்பியுங்கள். அப்பொழுது ''நான் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி, நான் தவறாயிருந்து வந்திருக்கிறேன்'' என்று எழுதி என் முதுகில் தொங்கவிட்டுக் கொண்டு இந்த தெருவின் வழியாய் நடந்து செல்வேன். வேதத்தில் ஒரு இடத்திலாவது யாராகிலும் ஒருவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றதாக நீங்கள் தேடிக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம், உங்களில் எண்பது சதவிகிதம் பேர் அவ்வகையில் தான் ஞானஸ்நானம் பெற்றுள்ளீர்கள். அந்த விதமாக யாராகிலும் ஞானஸ்நானம் பெற்றுள்ளதாக ஒரு வசனத்தை எனக்குக் காண்பியுங்கள், அப்பொழுது நான் ''கள்ளத் தீர்க்கதரிசி'' என்று எழுதி முதுகில் தொங்கவிட்டுக் கொண்டு இப்படி சாலையில் நடந்துசெல்வேன். வேறு விதமாக ஞானஸ்நானம் பெற்றவர்கள், இயேசுவின் நாமத்தில் மட்டுமல்ல, ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெறாமலிருந்ததை எனக்கு வேத ஆதாரம் காட்டுங்கள் பார்க்கலாம். நான் கூறுவது உண்மை. அது உண்மையா இல்லையாவென்று பாருங்கள்.
126இங்கு, அதுஎன்ன? அவள் வேசிகளுக்குத் தாய். அவளை வேசியாகச் செய்தது எது? அவளை வேசியாகச் செய்தது எது? அவளுடைய உபதேசம். அவர்களை வேசிகளாகச் செய்தது எது? அவளுடைய உபதேசம்.
ஆகையால் தான்அவர்களுடைய ஸ்தாபனங்களையும் கோட்பாடுகளையும் நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாம் இந்த வேதத்துடன் சுத்தமாக வாழ்கிறோம். நீங்கள் எவ்வளவு நன்றாக அதன்படி வாழ்கின்றீர்களோ, எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் போதிக்கப்பட்டிருக்கிறீர்கள். உண்மை, அது உங்களை பொறுத்தது. உங்களை அதன்படி வாழச் செய்வதற்கு என்னால் முடியாது. உங்களுக்கு சத்தியம் எதுவென்பதை எடுத்துக் கூறவே என்னால் முடியும். ஆகையால் தான் நாம் ஒரு ஸ்தாபனம் அல்ல. நான் ஏதோ ஒருவிதமான கோட்பாட்டைப் பின்பற்றி நம்மைக் கறைபடுத்திக்கொள்ள விரும்பவில்லை. நான் நிந்தைப்படும் கர்த்தருடைய சிலருடன் என் வழியைத் தெரிந்து கொள்வதையே விரும்புவேன். நான் வார்த்தைக்கும் தேவனுக்கும் முன்பாக சுத்தமாக நிலைத்திருந்து, யாருடைய இரத்தப் பழியும் என்மேல் இல்லை என்று கூறவே விரும்புகிறேன். ஆகையால்தான் நாங்கள் பிரன்ஹாம் கூடாரத்தில் இருக்கிறோம். ஆகையால் தான் நாங்கள் அசெம்பிளீஸ் சபைக்காரர் அல்ல. ஆகையால் தான் நாங்கள் ஒருத்துவம் சபைக்காரர் அல்ல. ஆகையால் தான் நாங்கள் மெதோடிஸ்டு அல்ல. ஆகையால் தான் நாங்கள் பாப்டிஸ்டு அல்ல. இது இங்குள்ள ஒரு சிறு கூடாரமே. எங்களுக்கு எந்த ஸ்தாபனமும் கிடையாது. நாங்கள் கிறிஸ்துவில் சுயாதீனராயிருக்கிறோம். ஆகையால் தான் நாங்கள் இப்பொழுது நிலைத்திருக்கிற விதமாக நிலைத்திருக்கிறோம். தேவன் எங்களை ஆசீர்வதித்திருக்கிறார். அவர் எங்களுக்கு உதவி செய்துகொண்டு வருகிறார்.
127நாங்கள் ஏன் இராப்போஜனம் எடுக்கிறோம் என்றும், ஏன் கால்கள் கழுவுதலைக் கடைபிடிக்கிறோம் என்றும், அங்கத்தினர்கள் பாவத்தில் இருப்பதாக நாங்கள் அறிந்திருந்தால் அதில் பங்கெடுக்க நாங்கள் ஏன் அனுமதிப்பதில்லை என்றும் உங்களிடம் கூறப் போகிறோம். ஆகையால் தான் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக சண்டை சச்சரவு காணப்படும் அங்கத்தினர்களிடையே ஒரு அங்கத்தினரிலிருந்து மற்றொரு அங்கத்தினரிடம் நான் சென்று வருகிறேன். நீங்கள் பீடத்தண்டையில் தேவனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட கோப்பையில் பங்கெடுத்துவிட்டு ஒருவர் மற்றவரிடம் பேசாமலிருப்பதும், தெருவில் செல்லும் போது மற்றவரைக் கண்டால் தலையைத் திருப்பிக் கொண்டு போவதும் உங்களுக்கு வெட்கமாயில்லையா? நீங்கள் சகோதர சகோதரிகளாக இருந்து கொண்டே, தொலைபேசியில் ஒருவர் மற்றவரைக் குறித்து குறை கூறினால், நீங்கள் கிறிஸ்தவர் என்று அழைக்கப்பட தகுதியற்றவர்கள். உண்மை. உங்களால் ஒருவரைக் குறித்து நன்மையானதைப் பேசமுடியாவிட்டால், நீங்கள் தொலைப்பேசியில் பேசுவதையே விட்டுவிடுங்கள். நீங்கள் பேசவே வேண்டாம். தேவன் உங்களை பொறுப்பாளியாக்குவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த விதமான ஆவி உங்களில் இருக்கும் வரைக்கும் நீங்கள் தேவனுடன் சரியாக இல்லை.
உங்களுக்கு அந்த விதமான உணர்வு இல்லையென்றால்....
128ஒரு மனிதன் தவறாயிருந்தால், அவனிடம் சென்று ஒப்புரவாகுங்கள். உங்காளல் ஒப்புரவாக முடியாமல் போனால், உங்களுடன் யாரையாகிலும் கூட்டிச் செல்லுங்கள். நீங்கள் அதை சரியாக செய்யாத காரணத்தால், தேவனால் தம்முடைய சபையை ஒழுங்குபடுத்த முடியாததில் வியப்பொன்றுமில்லை. நீங்கள் தொலைப்பேசியில் இந்த நபரைக் குறித்தும், என்ன நடக்கிறது என்பதைக் குறித்தும், சிறு கொள்கைகளைக் குறித்தும் பேசுவதற்கும் பதிலாக, நீங்கள் ஏன் வேதம் என்ன கூறுகிறதோ அதைச் செய்யக் கூடாது? ஒரு சகோதரன் குற்றம் செய்திருந்தால் அவனிடம் சென்று ஒப்புரவாக முடியுமா என்று பாருங்கள். அவர் எனக்கு இதை செய்தார் அவர் என்ன செய்திருந்தாலும் எனக்கு அக்கறையில்லை. அவரிடம் எப்படியும் சொல்லுங்கள். அவர் உங்களிடம் வரவேண்டும் என்று அது கூறவில்லை. அவர் தவறாயிருந்தால், நீங்கள் அவரிடம் செல்லுங்கள். நீங்கள் ''அவர் தான் தவறாயிருக்கிறார். அவன் என்னிடம் வரவேண்டும்'' என்று சொல்லலாம். வேதம் அவ்விதம் கூறவில்லை. நீங்கள் தான் அவரிடம் போக வேண்டும் என்று வேதம் உரைக்கிறது. அவர் தவறாயிருந்தால், நீங்கள் அவரிடம் செல்லுங்கள்.
அவர் உங்களுக்குச் செவிகொடாமல் போனால், யாரையாகிலும் ஒருவரை உங்களுடன் ஒரு சாட்சியாக கூட்டிச் செல்லுங்கள்.
அவர் அந்த சாட்சிக்காரருக்கும் செவி கொடுக்காமல் போனால், அதன்பிறகு “நான் மேய்ப்பரிடம் இதை கூறப் போகிறேன்'' என்று சொல்லுங்கள். அவர் ''இதை சபைக்கு அறிவிக்கப் போகிறேன். இன்னும் முப்பது நாட்களுக்குள் சகோதரராகிய நீங்கள் ஒப்புரவாகாமல் போனால்... இங்குள்ள இந்த சகோதரன் ஒப்புரவாக விருப்பம் தெரிவிக்கிறார். ஒப்புரவாகமாட்டேன் என்கிறீர். இன்னும் முப்பது நாட்களுக்குள் நீர் அவருடன் ஒப்புரவாகாமல் போனால், அப்பொழுது என்ன நடக்குமென்றால், நீர் எங்களில் ஒருவராக இருக்க முடியாது.''
129''அவன் சபைக்கும் செவி கொடுக்காதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப் போலவும் ஆயக்காரனைப் போலவும், பாருங்கள், ஒரு சகோதரன் சபையின் பாதுகாப்பின் கீழ் உள்ள வரைக்கும், கிறிஸ்துவின் இரத்தம் அவனைப் பாதுகாக்கிறது. அதன் காரணமாகத்தான் சபை இப்பொழுது சென்று கொண்டிருக்கும் விதமாக செல்ல நாங்கள் அனுமதிப்பதில்லை. இப்பொழுது நாம் இது பாப்டிஸ்டு சபையின் உபதேசம், அல்லது இங்குள்ள பிரன்ஹாம் சபையின் உபதேசம். அவ்விதம் நீங்கள் செய்வீர்களானால், பாருங்கள், நீங்கள் ஏன்...
130உதாரணமாக இரண்டு பேர் இங்கிருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். லியோவும் நானும்... நல்லது நீங்கள் கூற வேண்டியது என்னவெனில்... நான், ''நல்லது, அவர் எனக்கு தவறிழைத்திருக்கிறார் எனலாம். அதனால் எந்த வித்தியாசமும் இல்லை. நான் அவரிடம் செல்ல வேண்டியவனாயிருக்கிறேன். நல்லது, அவர் இந்த சபையின் அங்கத்தினர். அவர் கிறிஸ்தவராக ஆகிவிட்டார். அவர் என்னுடன் இராப்போஜனத்தில் பங்கு கொள்கிறார். நாங்கள் இருவரும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சகோதரராக உத்தமமாக நடந்து வந்திருக்கிறோம். அப்பொழுது ஏதோ ஒன்று நடந்துவிட்டது.
அது மனிதன் அல்ல, அது தொண்ணூறு சதவிகிதம் பிசாசு ஜனங்களிடையே புகுந்து கொள்வதாகும். அது ஜனங்கள் அல்ல, அது பிசாசு. பிசாசு அவ்விதம் செய்ய நீங்கள் அனுமதிக்கும் வரைக்கும், நீங்கள் உங்கள் சகோதரனுக்கு தீங்கு செய்கிறீர்கள். அது உண்மை.
131நல்லது, லியோவுக்கும் எனக்குமிடையே ஏதோ ஒன்று தவறாயிருக்குமானால், நாங்கள் போய் சமரசம் செய்துகொள்ள வேண்டும். எங்களுக்கிடையே ஏதோ ஒன்று உள்ளதை நீங்கள் காண்பீர்களானால், நீங்கள் எங்களிடம் வந்து, ''நீங்கள் இருவரும் இங்கு வாருங்கள். நாங்கள் அதை நேராக்கப் போகிறோம்'' என்று கூற கடமைப்பட்டிருக்கிறீர்கள். முதலாவதாக எங்கள் இருவராலும் சமரசம் செய்து கொள்ள முடியாமல், அப்படியே சபைக்கு வருகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
ஓ, நீங்கள் அதைக் குறித்து ஒன்றும் செய்யாமல் இருந்தாலும், ஓ, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எங்கள் இருவரையும் பாதுக்காக்கிறது. பாருங்கள்? ஆனால் அந்தப் புற்றுநோய் வேறொரு புற்றுநோயைத் தொடங்கும். அந்தப் புற்றுநோய் மற்றுமொரு புற்றுநோயைத் தொடங்கும். முடிவில் முழு சபையும் வியாதிப்பட்டுவிடும். அப்பொழுது நீங்கள் சபைக்கு வரும்போது, அது மிகவும் குளிராய் இருக்கும். சபையோர் உள்ளே நுழைவதற்கு முன்பு வாயிற்காப்போர் அங்கு படர்ந்திருக்கும் பனிக்கட்டியை உடைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும். குளிர்ந்த நிலை! ஒருவர் உட்கார்ந்து கொண்டு ஒன்றுமே பேசாமல் இருப்பது. ''நாங்கள் மிகவும் ஆவிக்குரியவர்களாக முன்மிருப்பது வழக்கம். நீங்கள் நன்றாய் ஓடினீர்களே, இப்பொழுது என்ன நடந்து விட்டது?பாருங்கள், உங்கள் பாவங்கள் உங்களைப் பிரிக்கிறது. அதற்கு தேவன் உங்களைப் பொறுப்பாளியாக்குவார். சகோதரரே,
இப்பொழுதே அதை நோக்கிவிடுங்கள்.
132என்னிடம் தவறு ஒன்றுமிருக்கவில்லை. லியோவிடமும் தவறு ஒன்றுமிருக்கவில்லை. ஆனால் சாத்தான் எங்களிடையே புகுந்துவிட்டான். அது உண்மை. அதை நோக்கிக் கொள்ளுங்கள். அவரிடம் செல்லுங்கள். அவர் செவி கொடுக்கவில்லை என்றால், அல்லது நான் செவிகொடுக்கவில்லை என்றால், எங்களில் யார் செவிக் கொடுக்காமல் போனாலும், அதை சபைக்குத் தெரியப்படுத்துங்கள். அவர் முப்பது நாட்களுக்குள் வந்து அந்த சபையிடம் ஒப்புரவாகாமல் போனால், அவர் இயேசுவின் பாதுகாப்பிலிருந்து நீக்கப்படுகிறார். நாம் அவரை அவிழ்த்துவிடுகிறோம். அது முற்றிலும் உண்மை. அப்பொழுது என்ன நடக்கிறதென்று பாருங்கள். தேவன் அவரை கண்டிக்கட்டும். உங்கள் கைகளில்லிருந்து அதைப் போக்கிவிட்டீர்கள். உங்களால் ஆனமட்டும் நீங்கள் முயன்று பார்த்தீர்கள். இப்பொழுது தேவன் சிறிதளவு அவரை வைத்திருக்கட்டும். அவர் அவரை சாத்தானுக்கு ஒப்புக் கொடுத்துவிடுவார். அப்பொழுது அவர் திரும்பி வருவார். அவர் வராவிட்டால் அவர் ஆயுசு நாட்கள் குறுகியதாக இருக்கும்.
133வேதத்தில் ஒரு சகோதரன் தேவனுடன் ஒப்புரவாக மறுத்த சம்பவம் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அந்தச் சம்பவம் எத்தனை பேருக்கு ஞாபகமுள்ளது? அவன் தன் மாற்றாந்தாயை வைத்துக் கொண்டிருந்தான். அவனை சரிபடுத்த முடியவில்லை. பவுல், ''மாம்சத்தின் அழிவுக்காக அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள்'' என்றான். அது 2 கொரிந்தியரில் காணப்படுகிறது. அவன் சரியாகிவிட்டான்.
134எனக்கு ஒரு சகோதரன், ஒரு நல்ல நண்பர் இருக்கிறார். அவருடைய பெயரை இங்கு கூற விரும்புகிறேன். அவர் ஒரு பிரசங்கி சகோதரன். அவருடைய பெயர் சகோ. ராஸ் முஸ்ஸன். இன்றிரவு இங்கு உட்கார்ந்திருக்கிற போதகர்களே உங்கள் அநேகரின் தாள்களில் அவருடைய பெயர் உள்ளது. அது சிக்காகோவிலுள்ள அந்த சபை பாகுபாடற்ற சபை. பாருங்கள். அவருக்கு ஒரு பையன் இருந்தான். அவன் போய் ஒரு கத்தோலிக்க பெண்ணை விவாகம் செய்து கொண்டு, இதை, அதை, மற்றதை செய்தான். என்னவெல்லாம் அவன் செய்தான் அவன் ஏதோ ஒரு தொல்லையில் அகப்பட்டுக் கொண்டான். அவனுடைய தந்தை அவனிடம் சென்று, ''மகனே பார், நீ அப்பாவுடன் ஒப்புரவாகப் போகிறாயா?'' என்று கேட்டார். அவன் தன் தகப்பனின் சபையோரை உருளும் பரிசுத்தரின் கூட்டம் என்றழைத்தான். அவர், இப்பொழுது பார், நீ அந்த விஷயத்தை இந்த சபையுடன் நேராக்கிக் கொள்ளப்போகிறாயா?'' என்று கேட்டார்.
அவன், ''அப்பா, நீர் என் அப்பா, உம்முடன் எந்த தகராறும் செய்ய நான் விரும்பவில்லை“ என்றான்.
135சரி, அவர் சென்று ஒரு டீகனை கூட்டிக்கொண்டு அவனுடைய வீட்டுக்கு சென்று, ''வெஸ்லி, உன்னுடன் நான் பேச வேண்டும். நீ இதை சபையுடன் நேராக்கிக் கொள்ளப் போகிறாயா? வெஸ்லி, இதை ஞாபகம் கொள். நான் அந்த சபைக்கு போதகர், உன்னுடைய தந்தை. என்ன செய்ய வேண்டுமென்று தேவன் கூறியுள்ளாரோ அதை நான் செய்யப் போகிறேன். நீ சபையுடன் ஒப்புரவாக்க உனக்கு முப்பது நாட்கள் தவணை கொடுக்கிறேன். நீ ஒப்புரவாகாவிட்டால், உன்னை தேவனுடைய சமுகத்திலிருந்து பிரஷ்டம் செய்துவிடுவோம். நீ என் சொந்த மகன், ஆனால் அவர் என் இரட்சகர். நான் உன்னை நேசிக்கிறேன். உன்னை நான் நேசிக்கிறேன் என்று உனக்குத் தெரியும். வெஸ்லி, உனக்காக நான் இப்பொழுதே மரிக்கவும் ஆயுத்தமாயிருக்கிறேன். ஆனால் நீ தேவனுடைய வார்த்தையுடன் உன்னை வரிசைப் படுத்திக்கொள்ள வேண்டும், பார். நான் போதகர், அந்த மந்தையின் மேய்ப்பன் நான். நீ என் மகனாக இருப்பாயானால் அல்லது வேறு யாராகவும் இருந்தாலும், நீ தேவனுடைய வார்த்தையுடன் வரிசைப்படுத்திக் கொள்ளவேண்டும். அவ்விதம் நீ செய்யாவிட்டால், அவருடைய மேய்ப்பனாக இருக்க எனக்குத் தகுதியில்லை'' என்றார்.
என்னே, அப்படிப்பட்டவர் தான் உண்மையான போதகர். அப்படிப்பட்டவர்தான் ஆண்மைதனம் கொண்டவர். நீங்களும் அப்படி நினைக்கிறீர்கள் அல்லவா? அவருடைய பையனிடம் அதைக் கூறி அவனை வேதனைப்படுத்தினார். அவர் என்ன கூறினார்? ''நீ மனிதனையா அல்லது இரட்சகரையா, யாரை வேதனைப் படுத்தப்போகிறாய்?'' என்று மகனைக் கேட்டதாக
136அவர் தொடர்ந்து என்னிடம், ''அவன் திருந்தவில்லை. நாங்கள்... நான் சபையோரிடம்,''என் சொந்த மகன் வெஸ்லி இந்த விஷயத்தில் நான் சொல்வதைக் கேட்க மறுக்கிறான். டீக்கன் சொல்வதை கேட்கவும் மறுக்கின்றாள். சகோதரன் இன்னாரே, நீங்கள் அதற்கு சாட்சி என்... அவர் 'ஆம்' என்றார். சரி, அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவு சரியாக எட்டுமணிக்கு, நான்கு வாரங்கள் கழித்து அவன் இந்த சபையுடன் அதை சரிபடுத்திக் கொள்ளாமல் போனால், நாம் என் மகன் வெஸ்லியை, அவனுடைய மாம்சத்தின் அழிவுக்காக பிசாசினிடம் ஒப்படைக்க போகிறோம். அந்த இரத்தம், இயேசு கிறிஸ்துவின் இரத்தமும் இந்த சபையும் அவனை இனி ஒருக்காலும் பாதுகாக்காது என்றேன், என்றார்.
137அந்த நாள் இரவு வந்தது. அவர் பிரசங்க பீடத்தின் மேல் நின்று கொண்டு, ''இன்னும் இரண்டு நிமிடங்கள் உள்ளன'' என்றார். அந்த நேரமும் வந்துவிட்டது. அவர், ''சர்வ வல்லமையுள்ள தேவனே, என் மகன் வெஸ்லி ராஸ்முஸ்ஸனைக் குறித்து சபையோரிடமும் உம்மிடமும் கூறியிருந்தேன். உம்முடைய வார்த்தையின்படியும், உமது குமாரனாகிய எங்கள் இரட்சகர் விட்டுப்போன புத்திமதியின்படியும், எங்களால் ஆன எல்லாவற்றையும் நாங்கள் செய்துவிட்டோம். இப்பொழுது நாங்கள்... என் பையனை நானும் என்னுடன் கூட சேர்ந்து இந்த சபையும் அவனுடைய மாம்ச அழிவுக்காக, அவனுடைய ஆத்துமா காக்கப்பட, பிசாசினிடம் ஒப்புக்கொடுக்கிறோம்'' என்றார். அவ்வளவு தான் கூறப்பட்டது. ஒன்று அல்லது இரண்டு வாரங்களாக ஒன்றுமே நடக்கவில்லை. ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கடந்து சென்றிருக்கக் கூடும்.
138ஒரு இரவு வெஸ்லி வியாதிப்பட்டான். அவனுடைய வியாதி அதிகரித்துக் கொண்டேபோனது. அவன் மருத்துவரை வரவழைத்தான். அவர் வந்து அவனைப் பரிசோதித்தார். அவனுக்கு ஜூரம் 105 டிகிரி இருந்தது, அதற்கான காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனுடைய ஜூரம் அதிகரித்துக் கொண்டே போனது. மருத்துவரும், “பையனே, உனக்கு என்ன நேர்ந்ததென்று எனக்கு தெரியவில்லை'', என்றார். அவருக்கு என்ன செய்யவதென்றே தெரியவில்லை. அவர் ''நாம் சிறப்பு மருத்துவரை வரவழைப்போம்'' என்றார். அந்த சிறப்பு மருத்துவரும் அங்கு வந்தார். அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவனைப் பரிசோதித்தார். எல்லாவற்றையும் செய்தார். அவர், ''என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. அவன் மரணத் தருவாயில் இருப்பதுபோல் தோன்றுகிறது'' என்று கூறிவிட்டார். அவனுடைய மனைவி அங்கு நின்று கொண்டு அழுது கொண்டிருந்தாள். அவனுடைய பிள்ளைகளும் படுக்கையைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். மற்றெல்லோரும் நின்று கொண்டிருந்தனர். மருத்துவர், ''அவன் உயிர் போய்க் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். அவனுடைய நாடித்துடிப்பும் மூச்சும் இறங்கிக் கொண்டே வருகிறது'' என்று சொல்லிவிட்டார்.
அப்பொழுது அந்த பையன், ''அப்பாவை அழைத்து வாருங்கள்'' என்றான். ஓ, ஆமாம், அப்படித்தான் அதைச் செய்ய வேண்டும். அதுதான், ''அப்பாவை அழைத்து வாருங்கள்'' அவனைக் காண அவன் தந்தை மிகவும் விரைவாக வந்தார். அவன் ''அப்பா, என்னால் இப்பொழுது முடியாது. ஆனால் தேவன் என் வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்கிறார். நான் எல்லாவற்றையும் சரிபடுத்திவிடுவேன். நான் சரிபடுத்திவிடுவேன். ஆம், நான் செய்வேன்'' என்றான். ஆம், ஐயா, சகோதரனே, அந்த நேரத்திலேயே அவனுடைய மூச்சு சரியான நிலையை அடையத் தொடங்கியது.
அடுத்த ஞாயிறன்று அவன் சபைக்கு முன்னால் வந்து, ''நான் தேவனுக்கு முன்பாகவும் சபைக்கு முன்பாகவும் பாவம் செய்தேன். நான் போதகரின் சொற்களுக்கு செவி கொடுக்க மறுத்தேன். இங்குள்ள மகனுக்கு செவி கொடுக்க மறுத்தேன். நான் செய்த பொல்லாங்கை இந்த சபை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தேவன் எனக்கு உயிர் பிச்சை அளித்தார்'' என்றான். நான் உங்களிடம் கூறுகிறேன். அவன் சரியாக வரிசைப்படுத்திக் கொண்டான். ஆம் அப்படித்தான் அது இருக்க வேண்டும். பாருங்கள்? நீங்கள் மட்டும் தேவனுடைய வழியில் அதைச் செய்வீர்களானால் பாருங்கள்?
139பாருங்கள், நாம் எவ்விதம் செய்கிறோமென்றால், செயற்குழு கூட்டம் ஒன்றைக் கூட்டி, “நல்லது, நாம் இதை...'' என்கிறோம். நான் பிரன்ஹாம் கூடாரத்தைக் குறிப்பிடவில்லை. பிராடெஸ்டெண்டுகளாகிய நம்மையே குறிப்பிடுகிறேன். நாம் செயற்குழு கூட்டம் ஒன்றை அமைத்து, ''நீங்கள் ஜோன்ஸை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவருக்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்? அவர் நம்மிடத்தில் உள்ளதை விட மெதோடிஸ்டு சபையில் சிறந்த அங்கத்தினராக இருப்பார் என்று கருதுகிறேன்'' என்கிறோம். பார்த்தீர்களா? அது தவறு. ஆகையால்தான் அவர்களுடைய பாரம்பரியங்களை நாம் கைகொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த மனிதனின் நடத்தையை காண்பதற்கு நாம் ஏதோ ஒரு பேராயரையோ அல்லது - பெந்தெகொஸ்தே சபையிலுள்ள மாவட்ட அதிகாரியை என்னவென்று அழைக்கிறீர்கள் - மாவட்ட போதகரையோ (District Presbyter) அழைக்க வேண்டிய அவசியமில்லை.
நாம் என்ன செய்ய வேண்டுமென்று வேதம் நமக்கு அறிவுரை கூறியுள்ளது. ஆகையால் தான் நாங்கள் அவர்களுடைய ஸ்தாபனங்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதில்லை. நாங்கள் அப்படிப்பட்ட காரியத்திலிருந்து விலகியிருக்கிறோம். ஆமென், நீங்கள் என் மீது கோபாமாயிருக்கிறீர்களா? அவ்விதம் செய்யாதீர்கள். நாளை இரவு சில நல்ல கேள்விகளை நான் ஒருக்கால் பெறக்கூடும். ஆனால் நான்... அது உண்மை. பாருங்கள்.
140ஞாபகம் கொள்ளுங்கள், இல்லை இதை இப்பொழுது கூற முற்படுகிறேன். வெவ்வேறு ஸ்தாபன சபைகளிலிருந்து இங்கு வந்துள்ளோரே, உங்கள் ஸ்தாபனம்... சகோதரனே, நீர் கிறிஸ்தவன் அல்ல என்று நான் கூறவில்லை. உம்முடைய ஸ்தாபனம் ஆயிரக்கணக்கான அருமையான கிறிஸ்தவர்களைக் கொண்டதல்ல என்று நான் கூற வரவில்லை. நாங்கள் ஏன் ஒரு ஸ்தாபனம் அல்ல என்பதற்கான காரணத்தையே உங்களிடம் கூற முயல்கிறேன். ஏனெனில் என்னால் ஸ்தாபனங்களின் கோட்பாடுகளை ஆதரிக்க முடியாது. இல்லை ஐயா, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று உங்களிடம் கூற நான் நிச்சயமாக முற்படவில்லை. தேவன் என்னை சுவிசேஷத்தை பிரசங்கம் செய்ய அழைத்திருப்பாரானால், அதை எந்தவிதமாக பிரசங்கம் செய்ய வேண்டுமென்று தேவன் என்னிடம் கூறுகிறாரோ, அதே விதமாகவே நான் பிரசங்கம் செய்கிறேன். அதாவது வேதத்தில் எந்தவிதமாக அது எழுதப்பட்டுள்ளதோ, அதேவிதமாக. அது இதனுடன் இணையாவிட்டால், அப்பொழுது அது... தேவன் அதற்காக என்னை நியாயந்தீர்ப்பார். ஓநாய் வருகிறதை, அதாவது சத்துரு வருகிறதை, நான் கண்டு உங்களை எச்சரிக்கத் தவறினால், அப்பொழுது தேவன் என்னைக் கேட்பார். உங்களை நான் எச்சரித்தால், அதன்பிறகு அது உங்களைப் பொறுத்தது. பாருங்கள்?
141கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்பதை ஞாபகம் கொள்ளுங்கள். மனுஷர்கள் தற்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும் இருப்பார்கள். பாருங்கள், தூஷிக்கிறவர்கள். ''ஓ, அவர்கள் மடையரின் கூட்டம். அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. அப்படிப்பட்ட ஒன்று கிடையாவே கிடையாது. அவ்விதம் கூறுபவன் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி. ''நமது பெண்களுக்கு நமது ஆண்கள் பெற்றுள்ளது போலவே புத்தியுள்ளது. ''அதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் தேவனுடைய வேதாகமம் அவளை பிரசங்கப் பீடத்திலிருந்து விலக்கி வைத்திருக்க கூறுகிறது. அது எனக்குப் போதும், பாருங்கள். அது உண்மை, சரி பாருங்கள்? ''நல்லது, எங்கள் ஸ்தாபனங்களில் உங்கள் கூடாரத்தில் உள்ளதைப் போலவே மிகவும் அருமையான மக்கள் உள்ளனர்'', எனலாம். அதைக் குறித்து நான் ஒன்றும் கூறவில்லை. ஆனால் வேதம் ஸ்தாபனங்களைக் கண்டனம் செய்கிறது. அது உண்மை. எங்கள் ஸ்தாபனங்களில் அருமையானவர்கள் இல்லை என்று நான் கூறவில்லை. அது அருமையானது. அவர்கள் மிகவும் நல்லவர்கள். மிகச் சிறந்த மக்களை நான் எல்லா ஸ்தாபனங்களிலும் சந்தித்திருக்கிறேன் - கத்தோலிக்கரையும் இன்னும் மற்ற ஸ்தாபனத்தோரையும், அவையனைத்திலும் நான் அருமையான அங்கத்தினர்களைச் சந்திக்கிறேன்.
142நண்பரே, இதை நாங்கள் எவ்விதம் கொண்டு வரப் போகிறோம் என்றால், கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த இரண்டு பாடங்களில், அதை முழுவதும் கொண்டு வர நாளை பிற்பகலும் செய்தி அளிக்க வேண்டியிருக்குமா என்று நாளை காலை கூறுகிறேன். இதை நாங்கள் செய்ய முயல்வதன் காரணம், உங்களை ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்த விரும்புகிறேன். உங்களுடன் யாரையாகிலும் கூட்டிக்கொண்டு வரவிரும்பினால், அவ்விதம் செய்ய நீங்கள் முழுவதுமாக வரவேற்கப்படுகிறீர்கள். ஆனால் இதை ஞாபகம் கொள்ளுங்கள். குற்றம் கண்டுபிடித்து இங்கிருந்து போகாதீர்கள். அல்லது குற்றம் கண்டுபிடிப்பதற்கென்று இங்கு வராதீர்கள். நான் என் சபையோருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். பாருங்கள். இதை என் சபையை விட்டு வெளியே நான் போதிப்பதில்லை. ஏனெனில் அது மற்ற மனிதனின் வேலை. அவர் தான் அவருடைய மந்தையின் மேய்ப்பன். நான் வெறும் ஒரு...
(ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி).
143ஆதியாகமத்துக்குச் சென்று அதை வெளியே கொணர்ந்து, அது எங்குள்ளதென்று காணலாம். ஒரு வேசிப்பிள்ளை ஏன் பதினான்கு தலைமுறைகளுக்கு கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது என்பதைக் காணலாம்... அது நானூறு ஆண்டுகள், அந்த பாவம் முடிந்து போக...பெற்றோரின் அநீதி பிள்ளைகளிடத்திலும் அவர்களுடைய பிள்ளைகளிடத்திலும் விசாரிக்கப்படுகிறது என்றும், அது எப்படி ஆதியாகமத்தில் தொடங்கினது என்றும் நாம் பார்க்கப் போகிறோம்.
144அதன் பிறகு நீங்கள் காணப்போவது என்னவெனில், தேவன் உலகத் தோற்றத்துக்கு முன்பே, ஒரு அணு அங்கு உண்டாவதற்கு முன்பே, ஒரு விண்வெளிக் கல் (Meteor) தோன்றுவதற்கு முன்பே, இவ்வுலகில் இருக்கப்போகின்ற ஒவ்வொரு சிருஷ்டியையும், எல்லாவற்றையும் அறிந்திருந்தார். “முடிவற்றவர்'' (Infinite) என்ற சொல்லுக்கு சரியான அர்த்தம் என்னவென்று இங்குள்ள யாராகிலும் கூற முடியுமா, அது எவருக்குமே தெரியாது. உங்கள் புகைப்படக் கருவியை நீங்கள் முடிவற்ற தூரத்துக்கு (Infinity) பொருத்துவது போல் அவ்வளவு தான், பாருங்கள், முடிவற்றவர். வரம்புள்ள (finite) நமது சிந்தையில் முடிவற்ற சிந்தை சிந்திக்கும் காரியங்களை கிரகித்துக் கொள்ள முடியாது. பாருங்கள், நம்மால் அவ்விதம் செய்ய முடியாது. பாருங்கள்? ஆனால் நீங்கள் கவனிப்பீர்களானால், அதை ஆவியில் காண விழைந்தால், உலகத் தோற்றத்துக்கு முன்பு என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்து அதன் பிறகு வேதாகமத்துக்கு வந்து அதைக் காணலாம்.
145இயேசு கிறிஸ்து தேவ ஆட்டுக்குட்டி என்று வேதாகமம் உரைக்கிறது. இப்பொழுத உன்னிப்பாக கவனியுங்கள், உங்களில் சிலர் நாளை இதை முடிப்பதைக் கேட்க இங்கிருக்கமாட்டீர்கள். இயேசு கிறிஸ்து உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி என்று வேதம் உரைக்கிறது. அது சரியா? அவர் எப்பொழுது அடிக்கப்பட்டார்? உலகத்தோற்ற முதல். உலகம் உண்டாவதற்கு முன்பு, அது சிதறப்பட்ட அணுக்களாக இருந்து, அதிலிருந்து சூரியன் தோன்றுவதற்கு முன்பே. சூரியனில் ஒரு அணு பிரிவதற்கு முன்பே, இது சூரியனின் விண்வெளிக் கல்லாக இருக்குமானால், விண்வெளிக் கல் உண்டாவதற்கு கோடி, கோடி, கோடி, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, கிறிஸ்து அடிக்கப்பட்டார். தேவனுடைய மகத்தான சிந்தை ஒரு காரியத்தை தீர்மானிக்குமானால், அது முடிந்த போன ஒரு வஸ்து. தேவன், ''உண்டாகக்கடவது என்று உரைத்தபோது, அது ஏற்கெனவே முடிந்துபோனது. அது உண்டாக கோடிக்கணக்கான ஆண்டுகள் பிடித்தாலும், அவர் உரைத்த அந்த நேரத்திலேயே அது ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆட்டுக்குட்டியானவர் உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்டிருந்தால், அதை உரைத்த அதே வேதாகமம், உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் ஜீவ புஸ்தகத்தில் நமது பெயர்கள் எழுதப்பட்டுள்ளதாக உரைக்கிறது.
எனவே, ''ஒரு புதுப்பெயர் மகிமையில் எழுதப்பட்டுள்ளது'' என்னும் பாடலை எழுதியவர் நல்ல அர்த்தம் கொண்ட பாடலைத் தான் எழுதினார். ஆனால் அது வேத ஆதாரமற்றது. பாருங்கள்? அந்த பெயர் உலகம் தோன்றுவதற்கு முன்பே மகிமையில் எழுதப்பட்டுவிட்டது. ஆட்டுக் குட்டியானவர் அடிக்கப்பட்டபோது, நமது பெயர்கள் ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுவிட்டது.
146உங்களுக்கு ஒரு சிறு வேத வசனத்தைக் காண்பிக்க விரும்புகிறேன். ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்வீர்களா? இது இப்பொழுது என் நினைவுக்கு வருகிறது. இப்பொழுது அந்த வேத வசனத்துக்கு வேதாகமத்தை திருப்ப முடியும் என்று நினைக்கிறேன். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. உங்களை இவ்வளவு நேரமாக இங்கு வைத்திருப்பதற்கு வருந்துகிறேன். நள்ளிரவு ஆகும் என்று நான் உங்களிடம் கூறினேன், எனவே இது அவ்வளவு மோசமல்ல. இந்த ஒரு வேத வசனத்தை நான் கண்டுபிடிக்க விரும்புகிறேன். என்னுடன் ரோமருக்கு எழுதிய நிரூபத்துக்கு வேதாகமத்தைத் திருப்புங்கள். இதை என்னுடன் வாசியுங்கள். இப்பொழுது ரோமர், அதை என்னால் கண்டுப்பிடிக்க முடிந்தால் அது இங்குள்ளது. இப்பொழுது ரோமர் 8-ம் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு 28- வசனத்திலிருந்து படிப்போம். என்னுடன் இதை ஜெப சிந்தையுடன் வாசியுங்கள். தேவன் இங்கு என்ன உரைத்திருக்கிறார் என்பதை கவனமாக கேளுங்கள்.
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்... தேவன் எவர்களை முன்னறிந்தாரோ...
ரோமர்8:28-29
என்னோடு சேர்ந்துபடிக்கிறீர்களா? ''எவர்களை...''
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற் பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்
எவர்களை முன்னறிந்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியமிருக்கிறார்
ரோமர். 8:29-30
147உலகத்தோற்றமுதல், அப்பொழுது தேவன் கீழே நோக்கிப் பார்த்தார். ''நல்லது, இப்பொழுது நான்... ஓ இப்பொழுது நாம் என்ன செய்யப்போகிறோம்?'' என்பதாக தேவன் தமது அலுவலை நடத்துவதில்லை. பாருங்கள்? ஒன்றுமே...
ஞாபகம் கொள்ளுங்கள், அநீதி, பாவம் என்பது நீதி தாறுமாறாக்கப்டுதல். பிசாசினால் சிருஷ்டிக்க முடியாது. எல்லோரும் இதை புரிந்து கொண்டீர்களா. இது இந்த சபையின் உபதேசம். பிசாசினால் சிருஷ்டிக்க முடியாது. தேவன் சிருஷ்டித்ததை அவனால் தாறுமாறாக்க முடியும். தாறுமாறாக்கப்படுதல் (Perversion) என்றால் என்ன? இங்கு பெரும்பாலோர் வயது வந்தவர்களாக (Adults) காணப்படுகிறீர்கள். இதை கவனமாய் கேளுங்கள். நாம் விவாகமானவர்கள். விவாகமான மனிதராகிய நீங்களும், விவாகமான ஸ்திரீகளாகிய நீங்களும் கணவனும் மனைவியுமாக ஒன்றுசேர்ந்து வாழலாம். இந்த ஸ்திரீகள் ஒருபோதும்... அவர்கள் தங்கள் கணவன்மாருடன் வாழும் வரைக்கும் கன்னிகைகளே. அது உண்மை. அது சட்டப்படி சரி. அவ்விதம் வாழவேண்டுமென்று தேவனால் நியமிக்கப்பட்டுள்ளது. வேறொரு ஸ்திரீ உங்கள் மனைவியைப் போல் நடந்து கொள்ளலாம். இவ்விரண்டில் ஒன்று நீங்கள் தேவனுடைய பார்வையில் நீதியுள்ளவர்களாயிருக்கிறீர்கள்; ஆனால் அதேவிதமாக நீங்கள் வேறொரு ஸ்திரீயுடன் நடந்து கொள்ளும் போது, நீங்கள் தேவனுக்கு முன்பாக மரண ஆக்கினையை அடைகிறீர்கள். அது என்ன? நீதி தாறுமாறாக்கப்படுதல், பாருங்கள், நீதி தாறுமாறாக்கப்படுதல்.
148பிசாசினால் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் ஏற்கெனவே சிருஷ்டித்ததை அவனால் தாறுமாறாக்க முடியும்.
பொய் என்பது என்ன? உண்மை தாறுமாறாக்கப்படுதல். யாரோ ஒருவர், ''சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு பில் பிரன்ஹாம் ஜெபர்சன்வில்லில் இருந்தார்'' என்று சொன்னார் என்று வைத்துக் கொள்வோம். அது உண்மை. ''அவர் அந்தோணி மதுக்கடையில் அவர் குடித்து வெறித்த நிலையில் இருந்தார்'' என்று கூறினால், அது பொய். அது என்ன? நான் ஜெபர்சன்வில்லில் இருந்தது உண்மைதான். அது நீதி தாறுமாறாக்கப்பட்டு பொய் ஆனது. நான் கூறுவது உங்களுக்கு விளங்குகிறதா? பாருங்கள். பொய் உண்மையை தாறுமாறாக்கிறது. நான் எங்கிருந்தேன் என்பதைக் குறித்து ஒன்றும் சொல்லப்படுகிறது. ''நான் சபையில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன்'' என்று கூறுப்பட்டால், அது உண்மை. அது நீதி. அவர் உண்மையைக் கூறினார் ''மதுபானக் கடையில் குடித்துக் கொண்டிருந்தார்'' என்று கூறினால், அது பொய் தாறுமாறாக்கப்பட்டது, பாருங்கள், உண்மை தாறுமாறாக்கப்படுதல். நான் கூறுவது விளங்குகிறதா - அநீதி அனைத்துமே நீதி தாறுமாறாக்கப்படுதலாகும்.
149மரணம், அது என்ன? ஜீவன் தாறுமாறாக்கப்படுதல். வியாதி? சுகம் தாறுமாறாக்கப்படுதல். நீங்கள் ஆரோக்கியமுள்ள, திடகாத்திரமுள்ள மனிதனாக இருக்க வேண்டியவர். சரி, நீங்கள் நோயாளியாயிருந்தால், அது என்ன? உங்கள் சுகம் தாறுமாறாக்கப்பட்டது. பாருங்கள், அவ்வளவுதான் அதற்கு உள்ளது. அது என்ன? நீங்கள் முன்பு அழகான இளம் பெண்களாகவும் திடகாத்திரமுள்ள அழகான வாலிபர்களாகவும் இருந்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு சுருக்கம் விழுந்து, வயதாகிக் கொண்ட போகிறது. அது என்ன? ஜீவன் தாறுமாறாக்கப்படுதல், பாருங்கள், அது திரும்பி வருகிறது. பாருங்கள், அது திரும்பி வரவேண்டும். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, அதை திரும்பவும் கொண்டு வருவதாக தேவன் வாக்களித்துள்ளார். அது அவ்வளவு நிச்சயம்... அப்படியானால் அது இங்குள்ளதென்று நாமறிவோம். எனவே நிச்சயமாக தேவன் அதைத் திரும்பக் கொண்டு வருவார். அதை அவர் வாக்குத்தத்தம் செய்து, அதை செய்வதாக ஆணையிட்டார். அதுதான் நமக்கு...
150அப்படியானால், நாம் எத்தகைய மக்களாக இருக்க வேண்டும். இந்த காரியங்கள் எவ்விதம் நடக்கின்றன என்பதைக் கவனியுங்கள். எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ, அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எப்பொழுது? உலகத் தோற்றத்துக்கு முன்பே, உலகம் உண்டாவதற்கு முன்பே. நாம் வேத வாக்கியங்களை எடுத்துக் கொண்டு அதை நிரூபிக்க தொடங்கினால், அதன் பேரில் நாம் பல மணி நேரம் எடுத்துக் கொள்வோம். அவ்விதம் செய்ய நாம் விரும்பவில்லை. இங்கு அநீதி அனைத்துமே, நீதி அநீதியாக தாறுமாக்கப்பட்டதே. அதை தான் பிசாசு செய்கிறான். நீங்கள் கணக்கு கொடுக்கக் கூடிய நிலையை அடைந்து, எது தவறு எதுசரி என்று அறிந்திருக்கும் போது, உங்கள் தவறுகளிலிருந்து நீங்கள் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவர்களாய் இவ்வுலகத்துக்கு வந்தீர்கள். நீங்கள் பாலுணர்ச்சியின் விளைவாக பிறந்தீர்கள். எனவே ஒரு புது பிறப்பைப் பெற்று பரலோகத்தில் பிரவேசிக்க, நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். ஏனெனில் இங்கு நீங்கள் பெற்றுள்ள இவ்விதமான பிறப்பு...
புது பிறப்பு சரீர உயிர்த்தெழுதலே என்று கருதும் யேகோவா சாட்சிகள் குழுவினர் மிகவும் தவறாயுள்ளனர், பாருங்கள். அது அவ்விதம் இருக்க முடியாது. பாருங்கள்?அது ஏதாவதொன்று...
151நீங்கள் கால வரம்பில் இருக்கிறீர்கள். நித்தியமானது ஒன்றே ஒன்று தான், அதற்கு துவக்கமும் இல்லை முடிவும் இல்லை. நித்தியமான எந்த ஒன்றுக்கும் துவக்கம் இருந்ததில்லை. அதற்கு முடிவும் இருக்கப் போகிறதில்லை. பாருங்கள்? எனவே நீங்கள் தேவனின் ஒரு பாகமாக இருப்பீர்களானால், உங்களில் இருக்கும் ஆவிக்கு துவக்கமும் இருந்ததில்லை, முடிவும் இருக்கப் போகிறதில்லை, உங்களில் இருக்கும் ஆவியினால் நீங்கள் நித்தியமாயிருக்கிறீர்கள். பாருங்கள்?
தெய்வீக அன்பைப் போல் (Agapao love) அது மாம்சப் பிரகாரமான அன்புக்கு (Phileo love) வந்து, அதன்பிறகு இச்சைஅன்புக்கு வந்து, இவ்விதமான தாறுமாறாக்கப்படுதலின் விளைவாக இறங்கிக் கொண்டே வந்து முடிவில் ஒரு குழப்பமான கதம்பமாகி விடுகிறது. ஏன், அந்த ஒரே வழியில் இயேசு, நம்மை மிகவும் உயர்ந்த நிலையில் கொண்டு செல்வதற்காக இதே ஏணியில் இறங்கி வந்தார். மிகவும் தாழ்ந்த நிலையியிலிருந்து மரணத்திலிருந்து ஜீவனுக்கு, வியாதியிலிருந்து சுகத்துக்கு, அநீதியிலிருந்து நீதிக்கு, பாருங்கள்? மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை மிகவும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல, அவர் மிகவும் உயர்ந்த நிலையிலிருந்து மிகவும் தாழ்ந்த நிலைக்கு இறங்கி வந்தார். அவருடைய கிருபையினால் நான் அவராகி, மகிமையின் சிங்காசனத்துக்கு சுதந்திரவாளியாவதற்கென, அவர் நானானார். நான் கூறிக் கொண்டிருக்கும் விஷயங்கள் உங்களுக்கு விளங்குகிறதா?
இப்பொழுது கவனியுங்கள், இந்த உலகம் அணுக்களாக இருந்த அந்த காலத்திலேயே என்ன நடக்கப் போகிறதென்று தேவன் கண்டார், இப்பூமியில் இருக்கப்போகின்ற ஒவ்வொரு வண்டையும் ஒவ்வொரு ஈயையும், ஒவ்வொரு தவளையையும், ஒவ்வொரு கொசுவையும், மற்றும் எல்லாவற்றையும் அவர் கண்டார். அவர் அப்பொழுதே அதைக் கண்டார், அவர் நிச்சயம் கண்டார்.
152அவர், ''என் குமாரனை நான் பூமிக்கு அனுப்புவேன் அவர் மரிக்கட்டும், ஒரு வேளை அவர் மேல் சிலருக்கு அனுதாபம் தோன்றக் கூடும். அது மிகவும் பரிதாபமான விஷயமாயிருக்கும், அவர்கள். ஒருவேளை சிலர் இரட்சிக்கப்படக்கூடும்'' என்று சொல்லவில்லை.
யார் இரட்சிக்கப்படுவார்கள் என்பதை அவர் முன்னறிந்தார். ஆம் ஐயா. அவர், ''ஏசாவை வெறுத்தேன், யாக்கோபைச் சிநேகித்தேன்'' என்றார் - அவர்கள் தாங்கள் யார் என்பதை நிரூபிக்கத் தருணம் வாய்ப்பதற்கு முன்பே. ஏனெனில் அவர்கள் யாரென்பதை அவர் முன் கூட்டியே அறிந்திருந்தார். அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். நீங்கள் பிறப்பதற்கு முன்பே உலகத் தோற்றமுதல், நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை அவர் அறிந்திருந்தார்.
153இப்பொழுது பாருங்கள், நான் துப்பாக்கி சுடுபவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனக்கு துப்பாக்கி என்றால் பிடிக்கும். டெக்ஸாஸிலுள்ள ஒரு ஸ்திரீ, அது டெக்ஸாஸ் என்று தான் நினைக்கிறேன், எனக்கு ஒரு ஸ்விஃப்ட் துப்பாக்கியை, 2.20 ஸ்விஃப்ட் துப்பாக்கியை வாங்கிக் கொடுத்தாள். அந்த துப்பாக்கி எனக்கு வேண்டுமென்று நான் எப்பொழுதும் விரும்பியதுண்டு. அதை பரிசோதிக்க விரும்பினேன். அது மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கி, நீங்கள் இருபத்திரண்டு தோட்டா, நாற்பத்தெட்டு 'கிரேயின்' (grain) தோட்டாவை அதில் நிறைத்து சுடலாம். அதை உற்பத்தி செய்த தொழிற்சாலை ''அவ்விதம் செய்ய வேண்டாம்'', அது மிகவும் ஆபத்தானது என்று எச்சரித்துள்ளது. ஆனால் நீங்கள் ஒரு வினாடிக்கு ஐயாயிரம் அடி வரைக்கும் செல்லக் கூடிய தோட்டாவை அதில் நிறைத்து சுட்டு, துப்பாக்கியை அது இருந்த நிலையிலேயே பிடித்துக் கொண்டிருக்கலாம். ஒரு வினாடிக்கு ஐயாயிரம் அடி, அதாவது ஒரு வினாடிக்கு ஒரு மைல். வேறு விதமாகக் கூறினால், இருநூறு கெஜம் தூரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு பருந்தை நீங்கள் சுடுவீர்களானால், அந்த துப்பாக்கி, சுட்ட வேகத்தில் உங்கள் மீது படுவதற்கு முன்பு, அதன் சிறகுகள் சிதறிப் பறப்பதைக் காணலாம். பாருங்கள்?
நீங்கள் பல் குத்தியின் முனையில் வெடி மருந்தை எடுத்து அந்த அளவு வெடி மருந்தை அந்த துப்பாக்கியில் போட்டு - ஒரு பல் குத்தியின் முனையில் உங்களால் எடுக்கக்கூடிய அவ்வளவு வெடி மருந்து- இந்த கட்டிடத்தின் கடைசியில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் பன்றியை சுட்டால் அந்த சத்தத்தை கேட்டு அது உட்கார்ந்துக் கொண்டு உங்களைப் பார்க்கும். என்ன விஷயம்? தோட்டா சிதைந்து மிகவும் வேகமாக செல்கிறது. நீங்கள் இங்கும் அங்கும் இடையில் ஒரு தகடை வைத்தால், அதின் மேல் தோட்டாவின் ஒரு சிறு தூசு கூட விழுவதில்லை. அது பழைய நிலைக்குத் திரும்பசெல்கிறது - சாம்பலாக அல்ல, எரிமலை சாம்பலாக, அந்த நிலையையும் அது கடந்து, அந்த தோட்டாவில் அடங்கியுள்ள செம்பும் ஈயமும், முதலில் இருந்த அமிலங்களின் நிலைக்கு சென்று விடுகிறது. அது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு என்ன நிலையில் இருந்ததோ, அந்த நிலைக்குச் சென்றுவிடுகிறது. என் கையில் இப்பொழுது நாற்பத்தெட்டு 'கிரேயின் தோட்டா' ஒன்று வைத்திருக்கிறேன். அடுத்த வினாடியில், அது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை அடைந்துவிடுகிறது. இந்த உலகம் இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்குமானால், அது மறுபடியுமாக ஒரு தோட்டாவாக ஆக வாய்ப்புண்டு. ஏனெனில் அது செம்பாக உருவாகி இருக்கும்.
154இப்பொழுது, தேவன் என்ன செய்தார் என்பதைப் பாருங்கள், அப்பொழுது நீங்கள் அவரை நேசிப்பீர்கள். நீங்கள் வீடு சென்று, காலையில் சற்று தாமதமாக உறங்கி எழும்பும் போது, அவரை இதுவரை நேசிக்காத அளவுக்கு இன்னும் அதிகமாக நேசிப்பீர்கள். தேவன் ஒரு காண்ட்ராக்டர். எத்தனை பேருக்கு அது தெரியும்? அவர் வீடு கட்டுபவர். சரி, கூர்ந்து கவனியுங்கள். தேவன் முந்தைய காலத்தில், அவர்கள் கூறுகின்றனர். இப்பொழுது நாம் கால காலங்களில் என்ன நடந்தது என்று எடுத்துரைப்பவர்களின் (Chronologists) கருத்தை எடுத்துக் கொள்ளப்போகிறோம். தேவன் கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, உலகத்தை உண்டாக்கவிருந்த போது, நல்லது, அவர் அப்பொழுது தான் தொடங்கினார். அவருக்கு. அவருடைய சிந்தையில் ஒரு கருத்து இருந்தது.
155நீங்கள், ''சகோ. பிரன்ஹாமே, அவர் அவ்வளவு மகத்தானவராக இருந்தால், பாவம் செய்ய அவர் பிசாசை எப்படி அனுமதிக்கலாம்?'' என்று கேட்கலாம். நல்லது, பிசாசு சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே, அவன் பிசாசாயிருப்பான் என்பதை அவர் அறிந்திருந்தார். நீங்கள், இதைக் குறித்து என்ன? ''அவன் பிசாசாயிருக்க அவர் ஏன் அனுமதித்தார்?'' என்று கேட்கலாம். அவர் தேவன் என்று நிரூபிக்கப்படுவதற்காகவே. ஆகையால் தான் அவர் இதைச் செய்தார். அநீதி உள்ள ஒருவன் ஏன் இருந்தான்?
156யார் முதலில் இருந்தது, இரட்சகரா அல்லது பாவியா? முதலில் இருந்தது யார்? இரட்சகர். முதலில் இருந்தது யார், சுகமளிப்பவரா அல்லது நோயாளியா? ஒரு பாவி இருப்பதற்கு ஏன் அனுமதிக்கப்பட்டான்? ஏனெனில் அவருடைய இரட்சகர் என்னும் தன்மை வெளிப்பட பாவி ஒருவன் இல்லையென்றால், அவர் ஒருக்காலும் இரட்சகராக அறியப்பட்டிருக்க முடியாது. அல்லேலூயா! எல்லாமே அவருடைய மகிமைக்கென்று முடிவடைய அவரால் செய்யக்கூடும். “குயவன் பாத்திரத்தை பார்த்து... ” என்னை ஏன் இப்படி உண்டாக்கினாய் என்று சொல்லலாமா? ''சக்கரத்தை இயக்குபவர் யார்? யாரிடம் களிமண் உள்ளது? யாருடைய கைகளில் அது உள்ளது''? பவுல், ''ஓ, மதியீனனே, அந்த நோக்கத்துக்காகவே அவர் பார்வோனை எழுப்பினதாக அவர் சொல்லவில்லையா?'' என்றான். நிச்சயமாக உலகம் என்று ஒன்று இருப்பதற்கு முன்பே, யார் என்னவாயிருப்பார் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் இரட்சகராக இருப்பதற்கென, வியாதியை அனுமதித்தார். அவர் அன்பாய் இருப்பதற்கென, பகையை அனுமதித்தார். நிச்சயம் அவர் அவ்விதம் செய்தார். அவர் தேவன், இவை அவருடைய தன்மைகள் அவருடைய தன்மைகள் வெளிப்படுவதற்கென அவருக்கு ஏதாவதொன்று அவசியமாயுள்ளது.
எல்லாமே பகல் வெளிச்சமாக இருந்திருந்தால், இரவு என்ற ஒன்றுள்ளதை நீங்கள் எவ்விதம் அறிந்திருப்பீர்கள்? இரவு இருப்பதால், அது பகல் வெளிச்சத்தை நிரூபிக்கிறது. நிச்சயமாக அது அவ்விதம் உள்ளது. ஆமென். அவர் என்ன செய்தாரென்று பார்த்தீர்களா?
157அவர் உலகத்தோற்றத்துக்கு முன்பு, இந்த சூரியனை எடுத்து, இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற கிரகமாகிய பூமி சூரியனை சுற்ற வைப்பதற்கு முன்பு; இதோ சூரியன் உள்ளது. அதை இந்தப் பக்கம் உருவாக்கி அது கோடிக்கணக்கான ஆண்டுகளாக அங்கு தொங்கும்படி வைத்தார். அவர் எதை உண்டாக்கிக்கொண்டு இருந்தார்? சில வாயுக்களை. இந்த பக்கம் வந்து வேறொன்றை உண்டாக்கினார். அவர் எதை உண்டாக்கினார்? கொஞ்சம் பொட்டாஷை. அவர் இந்த பக்கம் வந்து, அங்கு என்ன செய்து கொண்டிருந்தார்? கொஞ்சம் கால்ஷியத்தை உண்டாக்கிக் கொண்டு இருந்தார். அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? உங்களையும் என்னையும் உண்டாக்கிக் கெண்டிருந்தார். அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? ஒரு காண்டராக்டரை போல அவருடைய இரண்டுக்கு நாலு, இரண்டு எட்டு, அவருடைய பலகைகள், அவருடைய பக்கங்கள் அனைத்தையும் அமைத்துக் கொண்டிருந்தார். எத்தனை கட்டிடங்கள் அவர் கட்டப்போகின்றார் என்பதை அவர் அறிந்திருந்தார்.
நாம் பூமியில் காணப்படும் பதினாறு மூலப்பொருட்களை (Elements) கொண்டு உண்டாக்கப்பட்டிருக்கிறோம். உலகம் உண்டாவதற்கு முன்பே அவர் உங்களையும் என்னையும் உண்டாக்கி, அங்கு நம்மை அமைத்துக் கொண்டிருந்தார். ஒருவேளை இந்த பூமி நீண்ட சதுர (Oblong) வடிவில் இருந்திருக்கக் கூடும். அது எப்படி இருந்ததென்று எனக்குத் தெரியாது. அவர் ஏன் பொன்னையும் செம்பையும் பித்தளையும் தண்ணீரையும், இவை அனைத்தையும் உண்டாக்கினார்? அவர் ஒரு காண்ட்ராக்டர். அவர் கட்டிடம் கட்டுபவர். அவர் எல்லாவற்றையும் அங்கு அமைத்து, உருவகப்படுத்திக் கொண்டிருந்தார். இவை எல்லாவற்றையும் அவர் உண்டாக்கின பிறகு, அது ஒரு பெரிய எரிமலை வெடிப்பாயிருந்தது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக அந்த எரிமலை, குழம்பைக் கக்கும்படி செய்தார். கால்ஷியத்தை உண்டாக்க, அது என்ன? அது உங்களில் ஒரு பாகம்.
158இந்த பூமியில் எந்த ஜீவனும் தோன்றுவதற்கு முன்பே, நம்முடைய சரீரங்கள் அங்கு கிடந்திருந்தன. அல்லேலூயா! ஒரு துளி ஈரப்பசை பூமியில் தோன்றுவதற்கு முன்பே, அங்கு நாம் கிடந்திருந்தோம். ஆதாம் ஏதேன் தோட்டத்தில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தபோதே, நான் அங்கு கிடந்திருந்தேன். ஆமென். ஆம் ஐயா. ஓ மகிமை! கேரூபின்கள், விடியற் காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்த போது, நான் அங்கு கிடந்திருந்து ஜீவ சுவாசம் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தேன். நான் இங்கு இருந்தேன். அவர் என்னை இங்கு உண்டாக்கி என் சரீரம் இங்கு கிடக்கும்படி செய்தார். ஆம், ஐயா, நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பது அல்ல, அவை எப்படி இங்கு வந்தன? தேவன் அதை இங்கு கிடத்தி இருந்தார். தேவன் அதை உண்டாக்கினார். நாம் பெட்ரோலியம், பொட்டாஷ், விண் வெளி ஒளி போன்ற பதினாறு மூலப்பொருட்களால் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். பாருங்கள், நாம் இங்கு கிடந்திருந்தோம்.
159அதன் பிறகு என்ன நடந்தது? தேவன் பரிசுத்த ஆவியிடம்- இதை நாம் ஒரு அடையாள ரீதியில் எடுத்துக்கொள்வோம்- ''நீ போய் அந்த உலகத்துடன் அன்பு கொள், ஏனெனில் நான் அன்பாய் இருக்கிறேன். நீ என்னுடைய ஒரு பொருளாக இருக்கிறாய். எனவே நீ இப்பொழுது புறப்பட்டுபோய் அந்த உலகத்துடன் அன்பு கொள்'' என்றார். அந்த மகத்தான பரிசுத்த ஆவி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதை ஒரு சித்திரமாக வடிக்கிறேன். அது அவ்விதமாக இருக்கவில்லை. பரிசுத்த ஆவியும் தேவனும் ஒருவரே, ஒரே நோக்கம், ஒரே நபர், என்னை மன்னிக்கவும். அப்பொழுது பரிசுத்த ஆவி தன் சிறகுகளை பூமியைச் சுற்றிலும் விரித்து அடைகாக்கத் தொடங்கினார் (Brooding). அடைகாக்குதல் என்றால் என்ன? கோழி தன் குஞ்சுகளிடம் கூவி அன்பு கொள்வதைப் போல, ''க்ளக், க்ளக், க்ளக்'' ஓ.
160''ஓ ஜீவனே, வெளியே வா“ அவர் கூச்சலிட்டார். அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். ''இந்த உலகில் அழகு இருக்க வேண்டும். வெளிச்சம் உண்டாகக்கடவது'' பரிசுத்த ஆவி அசைவாடுகிறார். அவர் அவ்விதம் செய்த போது, மலையிருந்து கொஞ்சம் கால்ஷியம் கீழே ஒழுகி வருவதைக் காண்கிறேன். அது வந்து பொட்டாஷுடன் கலக்கிறது. அது எதில் முடிவடைகிறது? ''ஜீவனே, வெளியே வா'' ஒரு சிறு ஈஸ்டர் பூ கற்பாறையின் கீழேயிருந்து தலையை வெளியே நீட்டினது. பிதாவே, ''இங்கு வாரும். இதைப் பாரும்''
''அது அழகாய் இருக்கிறது. நீ அடைகாத்துக் கொண்டே இரு''. அவர் அடைகாத்து பூக்களைத் தோன்றச் செய்தார். அவர் புல் பூண்டு அனைத்தையும் தோன்றச் செய்தார். அவர் மிருகங்களைத் தோன்றச் செய்தார். பறவைகள் மண்ணிலிருந்து பறந்து சென்றன. சற்று கழிந்து ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் வருகின்றனர்; ஒரு மனிதன் வருகின்றான், அவன் ஆணும் பெண்ணுமாய் இருந்தான். அவன் நம்புஸ்கன் அல்ல. ஸ்திரீ அவனுக்குள் இருந்தாள்.
161ஒரு பெண்மைத்தனமுள்ள ஆவி அங்கிருந்தது,
பெண்மை தனமுள்ள ஒரு மனிதனை நீங்கள் எடுத்துக் கொண்டால், அவன் ஒருவேளை காண்பதற்குரிய சரியானவனைப் போல் இருக்கக்கூடும். ஆனால் அவனில் ஏதோ தவறுள்ளது. அதுபோல், நீங்கள் தலை மயிரைக் கத்தரித்துக் கொண்டு, ஆண்களின் உடையை அணிந்து செல்லும் ஒரு பெண்ணை எடுத்துக் கொண்டால், நான் சொல்லுகிறேன். அவளில் ஏதோ தவறுள்ளது. ஒரு ஸ்திரீ பெண்மையின் ஆவியைக் கொண்டிருக்கிறாள். மனிதன் ஆண்மை கொண்டவனாயிருக்கிறான். அது நமக்குத் தெரியும். அது உங்களுக்கு தெரியும். ஒரு ஸ்திரீ ஆணைப்போல் நடக்க தலைப்பட்டால், அவள் சரியாக இருப்பதாக தோன்றுகிறதா?
162நான் வேட்டை அதிகாரியாக இருந்த போது, ஒருநாள் பேரூந்தில் போய்க் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்தப் பெண்ணின் காலை என் கையினால் அடித்து அவளுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவள் பெண் என்று எனக்குத் தெரியவேயில்லை. அவள் வெல்டர்கள் அணியும் தொப்பி ஒன்றையும் கறுப்பு கண்ணாடியையும் அணிந்திருந்தாள். அங்கு நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவள் நடந்த ஒரு சம்பவத்தை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் காண்பதற்கு கடூரமாயிருந்தாள். அவள் புகைபிடித்துக் கொண்டிருந்தாள். அவள் உரைக்கப்பட்ட வார்த்தை என்னிடம் “ நேற்றிரவு அந்த ஆள் வழுக்கி மேலிருந்து கீழ் வரைக்கும் சரிந்து கொண்டே வந்தான். அதைக் கண்ட போது, என் வாழ்க்கையில் நான் அது போல் சிரித்ததே இல்லை'' என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்ட போது நானும் சிரிக்கத் தொடங்கினேன் (சகோ. பிரன்ஹாம் கைகளைத் தட்டி ஓசை எழுப்புகிறார் - ஆசி) நான், ''அது மிகவும் தமாஷாக இருக்கிறது'' என்றேன். இப்படியாக நான் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அவள் அந்த தொப்பியைக் கழற்றி தலையை அசைத்தாள். அவள் அவ்விதம் செய்யாமல் போயிருந்தால் அவள் ஒரு பெண் என்று நான் அறிந்திருக்கவே மாட்டேன். அவள் தலையில் கெளவி ஒன்றை அணிந்திருந்தாள். அதைக் கண்ட போது, என் வாழ்க்கையிலேயே அதுவரை இல்லாத ஒரு கூச்சம் தோன்றினது. நான் “நீ பெண்ணா?'' என்று கேட்டேன்.
அவள், “ஏன் நிச்சயமாக'' என்றாள்.
“என்னை மன்னித்துக் கொள்” என்றேன். அப்படிப்பட்ட ஒன்றை நான் கண்டதேயில்லை. அது உண்மை.
163அன்றொரு நாள் ஒரு விளம்பரத்தைக் கண்டேன். அது என்னை மகிழ்வித்தது, அங்கு “பெண்கள் உடனே அணியக்கூடிய ( Ready to wear) ஆடைகள்” என்று எழுதப்பட்டிருந்தது. நான், பெண்கள் உடைகளை அணிய ஆயத்தமாயிருப்பதாக எண்ணி, ''அதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்“ என்று மனதில் எண்ணிக் கொண்டேன். பாருங்கள்? ஆனால் பார்க்கும் போது, அது ஏற்கெனவே தைக்கப்பட்டு பெண்கள் உடனே அணியக் கூடிய ”ரெடிமேட் உடைகளின் விளம்பரம். நான் பெண்கள் உடைகளை அணிய ஆயத்தமாய் உள்ளனர்'' என்பதாக நினைத்துக் கொண்டு, “அவர்களுக்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். அது நல்லது, அது சரியானது, அதற்காக நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்'' என்றேன். ஆனால் அது உண்மையில், ஏற்கெனவே தைத்து ஆயத்தமாக்கப்பட்ட உடைகளின் விளம்பரம். இந்த தேசத்தில் பெண்கள் உடைகளை அணிந்து கொள்ள ஆயத்தப்பட்டால், அது மிகவும் விசித்திரமான ஒன்றாக இருக்குமல்லவா? சரி.
164ஆதாம் அங்கு வந்தான். ஆதாம் தனிமையாக இருந்தான். எனவே அவர் அவனுடைய விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்து ஏவாளை அவனுக்காக ஒரு உப பொருளாக உண்டாக்கினார். அவர் ஆதாமுக்குள் இருந்த பெண்மையின் ஆவியை எடுத்து ஸ்திரீக்குள் வைத்தார்? அந்த அன்புள்ள, பெண்மைத்தனமுள்ள தயவுள்ள, சாந்தமுள்ள ஆவியை. அவர் ஆண்மையை ஆதாமில் இருக்கும்படி விட்டுவிட்டார். இதைவிட வித்தியாசமாக வேறெதுவும் காணப்பட்டால், அது எங்கோ தாறுமாறு உண்டென்பதைக் காண்பிக்கிறது. ஆதாம் ஏவாள் இருவரும் ஒருவராக இருந்தனர்.
165நாம் முடிப்பதற்கு முன்பு, ஒரு சிறு நாடகத்தை எடுத்துக் கொள்வோம். இங்கு ஆதாம் ஏவாளுடன் கைகோர்த்துக் கொண்டு நடந்து வருகிறான். இந்த வரலாறு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் நடந்து வருகின்றனர். ஏவாள் ஆதாமைப் பார்த்து, “ஓ, அன்பே, அதற்கு பெயரிட்டு விட்டதாகவா சொல்கிறீர்கள்?'' என்று கேட்கிறாள்.
“ஆம், அதற்கு பெயரிட்டு விட்டேன்''.
“அதை எந்த பெயரினால் அழைக்கவேண்டும்?''
“அதை குதிரை என்று அழைக்கவேண்டும்''.
''உ, ஊ, இதை என்னவென்று அழைப்பது?''
''அது பசு''
“இதற்கு பெயரிட்டுவிட்டீர்களா?''
“ஆம், உ- ஊ?”
“இதை என்னவென்று அழைக்கவேண்டும்?'' இதை? இப்படியாக இருவரும் உட்கார்ந்து கொண்டு ஒன்றாக சிந்தித்துக் கொண்டிருந்தனர்.
''அது காதல் பட்சிகள் (Love Birds)“
''ஓ, அப்படியா?' அவர்கள் இவ்விதம் தொடர்ந்து செய்து காண்டிருந்தனர். “இங்குள்ள இதற்கு பெயர் என்ன?''
“அதற்கு பெயர் அது, இதற்கு பெயர் இது”
“ஓ, அப்படியா?'' உ-ஊ. அந்த பெயர் அழகாயுள்ளது அப்பொழுது ஒரு சிங்கம் கெர்ச்சிக்கிறது. அதன் பெயர் என்ன?''
''அது சிங்கம்“
''இது என்ன?''
''அது புலி''
இப்படியாக... “ஓ, அப்படியா? பூனைக் குட்டிகளைப் போல் இருவரும் மியாவ் மியாவ் என்று பேசிக் கொண்டிருந்தனர்.
166சற்று கழிந்து ஏவாள் சுற்றும் முற்றும் பார்க்கிறாள். அவள், “அன்பே, இங்கே பாருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறது, சபைக்குப் போக நேரமாகிவிட்டது'' என்கிறாள். சூரியன் அஸ்தமானபோது, அதில் ஏதோ ஒன்றுண்டு, அப்பொழுது உங்களுக்கு ஆராதிக்க வேண்டுமென்று தோன்றும். அன்றிரவு நீங்கள் சபைக்கு போகாவிட்டால், ஒரு அறைக்குள் சென்று வேதத்தைப் படியுங்கள். அவ்விதம் அறைக்குள் செல்ல எத்தனை பேருக்கு பிரியம். பாருங்கள், அது ஒரு மனிதனுக்குள் இருக்கும் இயல்பு. நீங்கள் அதைச் செய்ய வேண்டும். ''சபைக்குச் செல்ல நேரமாகிவிட்டது.''
அவர்கள், ''ஒரு நிமிடம் பொறு. ஜோன்ஸ் அசெம்பிளி சபையைச் சேர்ந்தவர். நாம் இந்த சபையை...'' என்று கூறவில்லை... அப்படிபட்ட பிரிவுகள் அக்காலத்தில் இருக்கவில்லை. அவர்கள் ஆராதிக்கச் சென்றனர். அவர்களுக்கு ஒரு சபை இருக்கவில்லை. உட்காருவதற்கு ஒரு நல்ல இருக்கை அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்கள் பெரிய ஆலயமாகிய காட்டிற்குள் சென்று முழங்கால் படியிட்டனர்.
167அப்பொழுது மரங்களில்அந்த ஒளிவட்டம் (Halo) தொங்கிக் கொண்டிருந்தது. பாருங்கள். ஒரு சத்தம், தேவன் “பூமியில்; உள்ள என் பிள்ளைகளுக்கு கொடுத்த இந்த நாளை, நீங்கள் சந்தோஷமாக கழித்தீர்களா?'' என்று கேட்பதை என்னால் கேட்க முடிகிறது.
''ஆம் ஆண்டவரே, இன்று நாங்கள் சந்தோஷமாக இருந்தோம்“, ''இல்லையா, அன்பே?''
''ஆம், ஆம், அன்பே“ ”கர்த்தாவே, உம்மை நாங்கள் உண்மையாகவே பாராட்டுகிறோம். இப்பொழுது நான் படுத்துக் கொண்டு நித்திரை செய்யப் போகிறேன்.'' பாருங்கள்? அவன் தன் பலத்த கரங்களை விரிக்கிறான், அவள் அவன் கரத்தின் மேல் படுத்துக்கொள்கிறாள். அவன் புலியைப் படுக்க வைக்கிறான், சிங்கத்தைப் படுக்க வைக்கிறான், எல்லாமே நித்திரைக்குச் செல்கின்றன. மிகவும் அமைதியாய் உள்ளது.
தேவன் கீழே இறங்கி வருகிறார். அவருடன் பரலோக சிருஷ்டிகளாகிய ஒரு கூட்டம் தேவ தூதர்களை காபிரியேல் கொண்டு வருகிறான். அவர்கள் சத்தம் போடாமல் கால் விரல்களின் மேல் மெல்ல நடந்து படுக்கை அறைக்குள் வருகின்றனர். பாருங்கள், அவர்கள் சுற்றிலும் நோக்குகின்றனர். காபிரியேல் தூதன், ''பிதாவே, இங்கு வாரும், இங்கு வந்து பாரும், இதோ அவன் இங்கிருக்கிறான், உம்முடைய பிள்ளைகள் இங்கு படுத்துக் கொண்டிருக்கின்றனர்'' என்கிறான்.
168தாய்மார்களாகிய உங்களில் எத்தனை பேர் தகப்பன்மார்களுடன், உங்கள் பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருக்கும் படுக்கை அறைக்குச் சென்று, அந்த சிறுவனைப் பற்றியும், அந்த சிறுமியைப் பற்றியும் பேசியிருக்கிறீர்கள்? ''அவன் உங்களைப் போல் இருக்கிறான் அல்லவா? இப்படியிருக்கிறான், அப்படி இருக்கிறான்'' என்று. அவ்விதம் நீங்கள் சொல்லுகிறதில்லையா? ஏன், அநேக சமயங்களில் நானும் மேடாவும் ஜோசப்பைக் குறித்து அப்படி பேசியிருக்கிறோம். அவள், பில்லி, அவனுக்கு உங்களைப் போலவே உயர்ந்த நெற்றி உள்ளது'' என்று சொல்லுவாள்.
நான் “ஆம், மேடா, அவனுக்கு உன்னைப் போலவே பெரிய கண்கள் உள்ளன'' என்று சொல்லியிருக்கிறேன். ஏன்? அவன் எங்கள் இணைப்பின் விளைவாக தோன்றினவன்.
அப்பொழுது பிதா கூறினார், ''உனக்குத் தெரியுமா...'' காபிரியேல், ''அவன் உங்களைப் போலவே காணப்படுகிறான்'' என்று பிதாவிடம் கூறுகிறான். உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள், அப்படித்தான் காண்பதற்கு தேவன் இருக்கிறார். அவர் உங்களைப் போலவே இருக்கிறார். நீங்கள் அவருடைய சந்ததியில் வந்த பிள்ளைகள் (Off spring). எத்தனை பேருக்கு அது தெரியும்?
169பாருங்கள். இப்பொழுது கவனியுங்கள். மிகவும் தாழ்ந்த ஜீவ வர்க்கம் எது? தவளை. மிகவும் உயர்ந்த ஜீவ வர்க்கம் எது? மனிதன். நிச்சயமாக. உயர்ந்த வர்க்கம் எது? அது மிகவும் தாழ்ந்த வர்க்கமாகிய தவளையிலிருந்து தொடங்கி, படிப்படியாக உயர்ந்து பறவைக்கு வந்து... இப்படியாக வர்க்கம் உயர்ந்து கொண்டே வந்து மிகவும் உயர்ந்த வர்க்கத்தை அடைந்தது. அப்பொழுது அது தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டது. பார்த்தீர்களா? ஸ்திரீ தேவனுடைய சாயலில் உண்டாக்கப்படவில்லை. அவள் மனிதனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டாள். பாருங்கள். இப்பொழுது, இப்பொழுது, இதோ அவர்கள். தேவன் அவர்களை உற்று நோக்கி, ''ஆம், அவர்கள் அழகாயிருக்கின்றனர்“ என்கிறார்.
170அது என்ன, சகோதரனே? அவர்கள் மரிக்க வேண்டியதில்லை. அது முதலாவது கையளவு கால்ஷியம், முதலாவது பொட்டாஷ் எல்லாமே அவ்விதமாகவே தொடங்கினது. அது அழகாயிருக்கிறது அல்லவா? ஆனால் பாவம் உட்பிரவேசித்து அந்த காட்சியை குலைத்துவிட்டது. இப்பொழுது, தேவன்... அதை தேவன் ஏன் அனுமதித்தார்? சற்று முன்பு நாம் பேசிக் கொண்டிருந்தது போல், அவர் அதை அனுமதிக்கக் காரணம் என்ன? அவர் இரட்சகர் என்பதை நிரூபிப்பதற்காகவே, அவர் அதை அனுமதித்தார். அவர் அதை நிரூபித்துவிட்டார். அவர் சுகமளிப்பவர் என்பதை நிரூபிப்பதற்காகவே அவர் வியாதி உண்டாக அனுமதித்தார். அவர் ஜீவன் என்பதை நிரூபிப்பதற்காகவே, அவர் மரணம் உண்டாக அனுமதித்தார். பாருங்கள்? அவர் நல்லவர் என்பதை நிரூபிப்பதற்காகவே, இந்த கெட்ட காரியங்கள் அனைத்தும் உண்டாக அனுமதித்தார். நாம்...
171நீங்கள் மீட்பின் வரலாற்றை பாடுவதைக் குறித்து பேசுகிறீர்கள். ஏன் சகோதரனே, இயேசு வரும் போது இந்த சபை இந்த பூமியின் விளிம்புகளில் நின்று கொண்டு மீட்பின் வரலாற்றை பாடும். அப்பொழுது தேவ தூதர்கள், நாம் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல், தங்கள் தலைகளை வணங்குவார்கள். நல்லது, அவர்கள் இழக்கப்படவே இல்லை. நாம் எதன் வழியாக கடந்து சென்றோம் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். இழக்கப்பட்டு மீண்டும் கண்டு பிடிக்கப்படுவது என்னவென்று நமக்குத் தான் தெரியும். ஓ, அவருடைய துதிகளை நாம் ஆரவாரிக்கலாம் அல்லவா? அவர் அவர்களுக்கு சுகமளிப்பவர் அல்ல. மகிமை! (சகோதரன் பிரன்ஹாம் தன் கரங்களை சேர்த்து ஐந்து தடவைகள் தட்டுகிறார் - ஆசி) அவர் அவர்களுக்கு ஜீவன் அல்ல. நிச்சயம் அல்ல, அவர்கள் அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரிக்கவில்லை. நாம் மரித்திருந்தோம், ஆனால் உயிர்ப்பிக்கப்பட்டோம். பார்த்தீர்களா? நம்முடைய கிரீடங்களைக் கழற்றி, நாம் என்ன சொல்வோம். ''நீர் சங்கை இன்னார் இன்னார் என்றா?'' ஓ, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, சகல மகிமையும் அவருக்கே உரியது! அதுதான். பார்த்தீர்களா? அப்பொழுது நாம் எவ்விதம் ஜெயங்கொண்டோம் என்னும் வரலாற்றைக் கூறுவோம். போகப்போக நாம் அதை அதிகமாக புரிந்து கொள்வோம்.
172பிறகு, அதில் பிறகு என்ன நடந்தது? தேவன், “நல்லது, எல்லாமே அழிவுக்குள் வந்துவிட்டது, எனவே என் பொட்டாஷ், கால்சியம் அனைத்தையும் நான் அழித்துவிடுவது நலம்'' என்று கூறினார்? இல்லை, இல்லை. அவ்விதம் நேரிடும் என்பதை அவர் அறிந்திருந்தார். நான் இருக்கிற விதமாக பரிசுத்த ஆவி என்னை சிருஷ்டித்தால், நான் உணவு உண்டு, அதை என் உடலில் செலுத்தி, நான் இப்பொழுது உள்ள நிலைக்கு வளர்ந்திருக்கிறேன். என்னை ஒரு உருவத்தில் அவர் சிருஷ்டித்தார். உலகத் தோற்றத்துக்கு முன்பு, தேவன் கண்ட காட்சி ஒவ்வொன்றுமே பூரண வளர்ச்சி அடைந்து, உருவாகினது. பாருங்கள்? அது ஒரு ஸ்திரீயின் மூலம் உண்டானது, அவ்விதம் நடக்கும் என்று அவர் உரைத்திருந்தார். அடுத்த முறை அது தேவன் மூலம் உண்டாகின்றது. அந்த சமயத்தில் அது ஸ்திரீயின் மூலம் தோன்றினது. இந்த சமயத்தில் அது தேவன் மூலம் தோன்றினது. இம்முறை அது தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையினால் தோன்றுகிறது. பாருங்கள்?
எனவே, இப்பொழுது ஏதாவொன்று எனக்கு தீங்கிழைக்க முடியுமா? முடியாது, ஐயா. எந்த ஒன்றுமே நமக்கு தீங்கு செய்ய முடியாது. பவுல் உரைத்த வண்ணமாக, “நிகழ் காரியங்களானாலும், வருங் காரியங்களானாலும், வியாதியானாலும், மரணமானாலும், கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது''. எந்த ஒன்றும் நம்மை பிரிக்கவே முடியாது.
173நான் சிறு கதையை உங்களிடம் முன்பே கூறியிருக்கிறேன். நான் முழுவதும் வழுக்கையாவதற்கு எனக்கு இன்னும் ஐந்து தலைமயிர்கள் மாத்திரமே உள்ளன. இந்த சில தலைமயிரை நான் வாரிக் கொண்டிருந்தபோது, என் மனைவி, பில்லி, நீங்கள் ஏறக்குறைய முழு வழுக்கை மண்டையாகிவிட்டீர்கள்“ என்றாள்.
அதற்கு நான், “அவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகவில்லை” என்றேன்.
அவள், “அப்படியானால் அவை எங்கே?'' என்றாள்.
“அவைகளை நான் பெற்றுக் கொள்வதற்கு முன்பு, அவை எங்கேயிருந்தன?'' என்று கேட்டேன். பாருங்கள்? ஒரு காலத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த தலைமயிர்கள் இங்கிருக்கவில்லை, அவை பூமியின் தூளில் இருந்தன. அது சரியா? ஏறக்குறை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, அவை என் தலையில் வர ஆரம்பித்தன. அவை எங்கிருந்து வந்தன? பூமியின் தூளிலிருந்து, அவை எங்கிருந்து வந்ததோ, அதே இடத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. அதுசரியா? அவை ஒரு காலத்தில் இருக்கவில்லை. அது என்ன? அவைகளை அவ்விதம் உண்டாக்கினது யார்? தேவன்! அதோ அவர், அவர் ஒரு படத்தை வரைந்தார். அந்த விதமாகவே அது இருக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
174''ஓ, மரணமே, உன் கூர் எங்கே? பாதாளாமே, உன் ஜெயம் எங்கே?“ இந்நாட்களில் ஒன்றில் நீங்கள் என்னை அடக்கம் செய்யக் கூடும், எனக்கு தெரியாது. ஆனால் சகோதரனே, நான் மரித்திருக்கமாட்டேன். அதை உங்களிடம் கூறுகிறேன். இல்லை, ஐயா.
ஓ, நாம் எழுந்திருப்போம், அல்லேலூயா. நாம் எழுந்திருப்போம்!
அந்த உயிர்த்தெழும் காலையில், மரணத்தின் கட்டுகள் முறிக்கப்படும் போது,
நாம் எழுந்திருப்போம், அல்லேலூயா, நாம் எழுந்திருப்போம்!
நான் எழுந்திருக்க எந்த ஒன்றுமே தடையாயிருக்க முடியாது. அதற்கு தடையாயிருக்க, பாதாளத்தில் போதிய பிசாசுகள் இல்லை. அதற்கு தடையாயிருக்க, எந்த ஒன்றுமே எங்குமே இல்லை. எனக்கு தேவனுடைய வாக்குத்தத்தம் உள்ளது. என்னிடம் பரிசுத்தஆவி உள்ளது, என்னிடம் தேவனுடைய நித்திய ஜீவனாகிய 'ஜோ' (zoe) உள்ளது, அது இங்கு இளைபாறிக் கொண்டிருக்கிறது. இந்த பழைய சரீரம் பூமியிலிருந்து உண்டானது, தேவன் அடைகாத்து, என்னை பூமியிலிருந்து தோன்றப் பண்ணினார்.
175அவர் அடைகாத்து, என்னை பூமியிலிருந்து தோன்றப் பண்ணியிருந்தால், இப்பொழுது எனக்கு வயதாகிவிட்ட நிலையில், ஒவ்வொரு முறையும் ஆலயமணி அடிக்கும் போது, ஒரு சிறு சத்தம் என்னிடம் பேசுகின்றது. ஒரு தூதன் புதரிலிருந்து என்னுடன் பேசி, ''நீ குடிக்காதே, புகை பிடிக்காதே. நீ செய்ய வேண்டிய வேலை ஒன்றுண்டு. உன் சரீரத்தை கறைபடுத்தாதே, அல்லது பெண்களுடன் அலைந்து திரியாதே. நீ பெரியவனாகும் போது, உனக்கான ஒரு வேலையை வைத்திருக்கிறேன்'' என்றார்.
“ நீர் யார்? நீர் யார்?''
“அதைக் குறித்து அதிகமாக பிற்காலத்தில் அறிந்து கொள்வாய்''. சிறிது கழிந்து அவர் வந்து நான் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த போது அங்கு தொங்கிக் கொண்டிருந்தார். அவர் தம்மை காண்பிக்கிறார். அவர் தம்மை யாரென்று பிரகடனம் செய்கிறார். அவர் பதிலளிக்கிறார். அவர் எல்லாவிடங்களிலும் நின்று கொண்டிருப்பதைக் காண்கிறேன்.
176எனக்குத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எதுவும் இல்லாமல், என்னை அவர் நான் உள்ள விதமாக உண்டாக்கியிருக்க, நீங்கள் எப்படி..? நான் போய், ''சார்லி பிரன்ஹாமே, நீங்கள் எல்லா ஹார்வியை (Ella Harvey) மணந்து கொண்டு என்னை இப்பூமியிலிருந்து தோன்றப் பண்ணுங்கள்“ என்று கூறிவில்லை. இல்லை ஐயா, அந்த விஷயத்தில் எனக்குத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எதுவும் இல்லை. தேவன் அதைச் செய்தார். தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எதுவும் அளிக்கப்படாமலே, நான் உள்ள விதமாகவே என்னை அவர் உண்டாக்கினார் என்றார், பரிசுத்த ஆவி என் மேல் அடை காத்து, நான், ”ஆம் ஆண்டவரே, நீரே என் சிருஷ்டிகர், உம்மை நான் நேசிக்கிறேன், உம்மை என் இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன்'' என்று சொல்லும் போது, அது இன்னும் எவ்வளவு அதிகமாக இருக்கும்! நீங்கள் எப்படி என்னை பூமியின் தூளில் பிடித்து வைக்க முடியும்? முடியாவே முடியாது, சகோதரனே, முடியவே முடியாது.
177தேவன் உண்டாக்கின ஒரு துண்டு கால்ஷியமோ, பொட்டாஷோ வேறெதுவுமே வீணாகாது. ''உலகத் தோற்றத்துக்கு முன்பு பிதாவானவர் எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும்''. வ்யூ! இப்பொழுது எனக்கு கூச்சலிட வேண்டும்போல் தோன்றுகிறது. “பிதாவானவர் எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும், அவர்கள் ஒருவரையும் நான் இழுந்து போகாமல், அவர்களை உயிர்த் தெழுதலின் போது எழுப்புவேன் அவர் கூப்பிடுவதை நான் கேட்டு அவரிடத்தில் வந்தேன். அப்படியிருக்க, அவர்கள் எப்படி என்னை பூமியின் தூளில் பிடித்து வைக்கமுடியும்?'' என்னை பூமியின் தூளில் பிடித்து வைக்க என் முகத்தில் மண்வெட்டியினால் மண்ணை அள்ளி போடும் போதிய சவ அடக்ககாரர்கள் இவ்வுலகில் இல்லை. நான் எழுந்திருந்து அவருடைய சாயலில் நிற்பேன். அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டு அவருடைய ஆவியினால் பிறந்திருக்கிறேன். அல்லேலூயா! வேண்டுமானால் உங்கள் ஸ்தாபனங்கள் அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; நான் இயேசுவை எடுத்துக் கொள்கிறேன். ஆமென்''
178இன்ஷரன்ஸ் (Insurance) அதிகாரி ஒருவர், வில்பர் ஸ்நைடர் என்பவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவர், ''பில்லி, உங்களுக்கு இன்ஷுரன்ஸ் திட்டம் ஒன்றை விற்க விரும்புகிறேன்'' என்றார்.
''நான் ஏற்கெனவே ஒன்றை வைத்திருக்கிறேன்'' என்றேன். (என் மனைவி “ஏன் பொய் சொல்லுகிறீர்கள்?'' என்று கேட்பது போல் என்னை உற்று நோக்கினாள்).
அவர், ''நீங்கள் இன்ஷுரன்ஸ் வைத்திருக்கிறீர்களா?'' என்று கேட்டார்.
நான், “ஆம், ஐயா'' என்றேன்.
“அது எந்த கம்பெனியின் இன்ஷூரன்ஸ்?'' என்று கேட்டார்.
நான், “ஆசீர்வதிக்கப்பட்ட உறுதி (assurance), இயேசு என்னுடையவர், ஓ, என்னே தெய்வீக மகிமையின் முன் ருசி! இரட்சிப்பின் சுதந்தரவாளி, தேவனால் கிரயத்துக்கு கொள்ளப்பட்டவன், அவருடைய ஆவியினால் பிறந்து, அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டவன்” என்றேன்.
அவர், ''அது நல்லது, பில்லி, அது உங்களை கல்லறைத் தோட்டத்தில் வைக்காது'' என்றார்.
நான், ''அது என்னை அங்கிருந்து வெளியே கொண்டு வரும் என்றேன். அல்லேலூயா அங்கு செல்வதைக் குறித்து நான் கவலை கொள்ளவில்லை; அங்கிருந்து வெளி வருவதே முக்கியம்.
179எனவே என்னிடம் ஒரு இன்ஷூரன்ஸ் உள்ளது. அது, “என் பிதா எனக்குக் கொடுக்கிற யாவரையும் நான் கொண்டு வருவேன். அவர்கள் என்னுடையவர்கள் என்று சொல்லுகிறது. என் தந்தை என்ன செய்தார் என்றோ, என் தாய் என்ன செய்தார்கள் என்றோ, எது எப்படி இருக்கிறதென்றே எனக்குக் கவலையில்லை” என் பிதா எனக்கு கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.'' அல்லேலூயா! அவர்களை ஏன் அவர் அறிந்திருந்தார்? ''உலகத் தோற்றத்துக்கு முன்பே அவர்களை நான் முன்னறிந்தேன். நான் ஆட்டுக்குட்டியைக் கொன்றபோது, அவருடன் அவர்களையும் கொன்றேன். ஆமென். ”நான் சபையை முன் குறித்தேன்“.
முன் குறித்தலைப் பெற்றுள்ளது எது? சபை. நீங்கள் எவ்விதம் சபைக்குள் பிரவேசிக்கிறீர்கள்? நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். நாம் அங்கிருப்போம் என்று அவர் உலகத் தோற்றத்துக்கு முன்பே அறிந்திருந்தார். எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ, அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.
180அவர் என்னை அங்கு சந்திக்கப் போவதாக தேவனுடைய புத்தகங்களில் கூறியுள்ளார். பாதாளத்திலுள்ள பிசாசுகள் அனைத்துமே அவன் அங்கு வருவதற்கு தடை செய்து, அவனை வேறெங்காவது வைத்திருக்க முடியாது. ஏனெனில் தேவன் அதை ஏற்கெனவே கூறிவிட்டார். அதுவே அதன் முடிவு. உலகம் உண்டாவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, விடியற் காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தபோதே, உலகத்துக்கு ஆதாரம் போடப்படுவதற்கு முன்பே, ஒரு ஆதாரம் இருப்பதற்கு முன்பே. அந்த தேவ தூதர்கள் களிகூர்ந்து அதைக் குறித்து உலகத் தோற்றத்துக்கு முன்பே கெம்பீரித்திருக்க, பிசாசு என்னை எப்படி பூமியின் தூளிலேயே வைத்திருக்க முடியும்? அதை அவனால் செய்யமுடியாது.
181இப்பொழுது பார்ப்போம். இங்கு என்னிடம் உள்ளது 'டிமாக்ரட்' நேரம். இது பதினொன்று மணிக்கு இருபது நிமிடங்கள் காட்டுகிறது. அது பத்து மணிக்கு இருபது நிமிடங்கள் என்று காட்டுகிறது. அது சரியா, சகோ. உட்? அதுசரி, பத்து மணிக்கு இன்னும் இருபது நிமிடங்கள் உள்ளன. எல்லோரும் சந்தோஷமாயிருக்கிறீர்களா?
ஓ, எனக்கு பயணம்செய்து போகவேண்டுமென்று தோன்றுகிறது -
எனக்கு பயணம் செய்து போக வேண்டுமென்று தோன்றுகிறது
என் பரலோக வீடு பிரகாசமும் அழகுமாயுள்ளது
எனக்கு பயணம் செய்து போக வேண்டுமென்று தோன்றுகிறது
ஓ, எனக்கு பயணம் செய்து போக வேண்டுமென்று தோன்றுகிறது.
எனக்கு பயணம் செய்து போக வேண்டுமென்று தோன்றுகிறது
என் பரலோக வீடு பிரகாசமும் அழகுமாயுள்ளது
எனக்கு பயணம் செய்து போக வேண்டுமென்று தோன்றுகிறது.
182இந்த விதமான பழைய பாடல்கள் உங்களுக்குப் பிடிக்குமா? ஒரு பழைய பாடலை நாம் பாடுவது வழக்கம். அது “கிருபையும் இரக்கமும் என்னைக் கண்டுபிடித்தது, அங்கு விடிவெள்ளி நட்சத்திரம் பிரகாசித்தது'' என்று இருக்கும். அது என்ன பாடல், சகோ. கெர்டி? நாம் பார்ப்போம். அது என்ன பாடல், சகோ. நெவில்? பாருங்கள்? ”கிருபையும் இரக்கமும் என்னைக் கண்டுபிடித்தது, அங்கு பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம் அதன் குடியிருப்பை என்னைச் சுற்றிலும் காண்பித்தது. அப்படி ஏதோ ஒன்று, உ, ஊ, ஆம் சிலுவையில் அந்த பாடலுக்கு சுருதி கொடுங்கள் சகோதரியே. அது சிலுவையின் அருகில் என்ற பாடல் இங்கு வாருங்கள். இந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிரியம். ஆவியினால் ஏவப்பட்டு எழுதின இந்த பழைய பாடல்கள் எத்தனை பேருக்கு பிரியம்? மேலும் கீழும் குதித்து 'பூகி ஓகி' பாணியில் உள்ள பாடல்களை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள், எனக்கு இத்தகைய பாடல்களை தாருங்கள். இங்கு கிருபையும் இரக்கமும் என்னை கண்டு பிடித்தது. அது தான் சரி, அதை இப்பொழுது பாடுங்கள்.
இயேசுவே, சிலுவையின் அருகில் என்னை வைத்துக் கொள்ளும்
அங்கு விலையேறப் பெற்ற ஊற்று உள்ளது
எல்லோருக்கும் இலவசம், சுகமளிக்கும் அருவி
கல்வாரி மலையிலிருந்து பாய்கின்றது.
சிலுவையில், சிலுவையில்
என் மகிமை எப்பொழுதும் இருக்கட்டும்
பரவசமடைந்துள்ள என் ஆத்துமா
நதிக்கப்பால் இளைப்பாறுதலை பெறும்வரையிலும்
(சகோ. பிரன்ஹாம், “சிலுவையின் அருகில்” என்னும் பாடலை மெளனமாக இசைக்கிறார் - ஆசி ) ஓ, எவ்வளவு அழகாய் உள்ளது இரட்சகர் இல்லாமல் இருந்திருந்தால் எப்படியிருக்கும்-? இந்த வார்த்தை இல்லாமல் இருந்திருந்தால் எப்படியிருக்கும்? அவர் முன்னறியாமல் இருந்திருந்து, இன்றிரவு நீங்கள் உலகிலுள்ள மற்றவர்களுடன் கூட இருந்திருந்தால் எப்படியிருக்கும்? அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? ஓ, என்னே! ஓ, என்னே! காலையில் ஒன்பதரை மணிக்கு நடக்கப்போகும் ஆராதனையை மறந்துவிடாதீர்கள்.
சிலுவையில், சிலுவையில்
என் மகிமை எப்பொழுதும் இருக்கட்டும்
பரவசமடைந்துள்ள என் ஆத்துமா
நதிக்கப்பால் இளைப்பாறுதலைப் பெறும்
183இப்பொழுது ஊற்றண்டை இடம் என்னும் பாடலுக்கு சுருதிகொடுங்கள். அந்த நல்ல பழைய பாடல், ஊற்றண்டை இடமுண்டு, எத்தனை பேருக்கு அந்த பாடல் தெரியும்? “இடம், இடம் ஆம் இடமுண்டு, ஊற்றண்டை இடமுண்டு” என்னும் பாடல், அதை நீங்கள் பாடும்போது, அமைதியாக, உங்கள் பக்கத்திலுள்ள சகோதரனுடன் கைகுலுக்குங்கள். உங்களுக்குத் தெரியுமா, எல்லா மெதோடிஸ்டுகளுக்கும், பாப்டிஸ்டுகளுக்கும், பெந்தெகொஸ்தேகாரர்களுக்கும் அங்கு இடமுண்டு. அந்த பழைய பாடல் எத்தனை பேருக்குத் தெரியும்? ஓ, நிச்சயமாக, உங்களுக்கு தெரிந்திருக்கிறது. பழைய காலத்தவரே, இது ஒரு நல்ல பழைய கென்டக்கி பாடல்.
இடம், இடம் ( இப்பொழுது கை குலுக்குவோம்)
ஆம் அங்கு இடமுண்டு
ஊற்றண்டை உனக்கு இடமுண்டு
இடம், இடம், ஆம், அங்கு இடமுண்டு
ஊற்றண்டை உனக்கு இடமுண்டு
ஓ, இடம், இடம், அங்கு நிறைய இடமுண்டு
ஊற்றண்டை உனக்கு இடமுண்டு
இடம், இடம், ஆம், அங்கு இடமுண்டு
ஓ, ஊற்றண்டை உனக்கு இடமுண்டு
184இப்பொழுது நீங்கள் எதிர்பாராத செய்தி ஒன்றை உங்களிடம் கூறப்போகிறேன். அடுத்த வாரத்தில், கூட்டங்களின் போது, அண்மையில் அளிக்கப்பட்ட பிரசங்கங்களும் புத்தகங்களும் மற்றவைகளும் சபைக் கட்டிடத்தின் மறுபக்கத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் - ஒலிநாடாக்களும் மற்றவைகளும், எல்லாமே நல்ல இலக்கிய நூல்கள் வடிவத்தில், அந்த அறைகளில் ஒன்றில் ஒரு மேசை இருக்கும். இலக்கிய நூல்கள், அண்மையில் அளிக்கப்பட்ட பிரசங்கங்கள் முன்பு எழுதப்பட்டவைகள், புது புத்தகங்களாக பதிப்புகளாக இப்பொழுது கிடைக்கும். இவையனைத்தும் கட்டிடத்தின் மறுபக்கத்தில், அடுத்த புதன் இரவு வைக்கப்பட்டிருக்கும். நாங்கள் கர்த்தருக்குள் ஒரு அருமையான தருணத்தை எதிர்பார்க்கிறோம். ஜெபத்துடன் வாருங்கள், வியாதியஸ்தரையும் அவதியுறுவோரையும் அழைத்து வாருங்கள். அவர்களுக்காக கடிதம் எழுதி இங்கு வரவழையுங்கள். நாம் தேவன் வல்லமையாக அசைவாடுவார். நாம் இங்கிருக்கிறோம். அவர் அதைச் செய்வார் என்று அறிந்திருக்கிறோம்.
185இப்பொழுது, எனக்குத் தெரிந்த ஒவ்வொருவரும் இந்த சிறிய ஒன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். முறை தவறிய வழி ஏதாவது இருக்குமானால், அதை நாம் நேராக்கிக் கொள்ள வேண்டுமென்று நீண்ட நாட்களுக்கு முன்பே நான் உங்களிடம் கூறினதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். முன்பு இருந்ததை விட வித்தியாசமான ஆவி ஒன்று இங்குள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். பாருங்கள்? பாருங்கள்? பாருங்கள்? அது உண்மை. முன்பிருந்த ஆவி விட்டுப் போக இடங்கொடுக்காதீர்கள். அது விட்டுப்போக இடங்கொடுக்காதீர்கள் என்று இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக உங்களுக்கு கட்டளையிடுகிறேன். அதிலே நிலைத்திருங்கள், பாருங்கள், வேற்றுமைகள் அனைத்தையும் உடனே விவாதித்துப் போக்கிக் கொண்டு முன்னேறிச் செல்லுங்கள். நீங்கள் சகோதரர். உங்கள் சகோதரனோ அல்லது சகோதரியோ தவறு செய்வதில்லை. பிசாசின் ஆவி அங்கு உள்ளே நுழைந்துவிடுகிறது. பாருங்கள், அவன் சுற்றிலும் போய்க்கொண்டிருக்கிறான். அந்த சகோதரனுக்காக அல்லது சகோதரிக்காக பரிதாபப்பட்டு, அது இடையேயுள்ள சாத்தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு விரோத மனப்பான்மை ஏதாகிலும் இருக்குமானால், அதை இப்பொழுதே விரைவில் அகற்றி விடுங்கள், பாருங்கள், ஏனெனில் அது உங்களை அரித்துவிடும். ஆம், அது அவ்விதம் செய்யும், எனவே அதை விட்டு விலகியிருங்கள். அதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
இடம், இடம், நிறைய இடமுண்டு
மெதோடிஸ்டுகளுக்கும், பாப்டிஸ்டுகளுக்கும்
பிரஸ்பிடேரியன்களுக்கும்,
எல்லோருக்கும் இடமுண்டு
இடம், இடம், ஆம், இடமுண்டு
ஊற்றண்டை உனக்கு இடமுண்டு
186எத்தனை பேருக்கு நாம் கூட்டத்தை முடிப்பதற்கு பாடும், இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், துயரமும் துக்கமும் உள்ள பிள்ளையே, அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும், நீ செல்லும் எல்லா இடங்களிலும் அதைக் கொண்டு செல்“ என்னும் பாடல் ஞாபகமுள்ளது. சகோ. ஜெஃப்ரீஸ், சகோதரி ஜெஃப்ரீஸ், அங்குள்ள அவர்களுடைய பையன்கள், இவர்கள் அனைவரும் நம்முடன் தங்க முடிந்திருந்தால் நமக்கு பிரியமாய் இருக்கும். இயேசுவின் நாமத்திற்கு தலை வணங்கி, அவருடைய கால்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து ஓ என்னே! ''நமது யாத்திரை முடிவு பெறும்போது, அவரை பரலோகத்தில் ராஜாதி ராஜாவாக முடிசூட்டுவோம். ''இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டுசெல், இன்று அதை கேடயமாக எடுத்துக் கொள், ஓ, சோதனை நெருக்கும் போது, அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. ''ஓ, எனக்கு மிகவும் பிரியம், அற்புதமான அந்த இயேசுவின் நாமம். இதை இப்பொழுது பாடுகையில், நாம் எழுந்து நிற்போம்.
இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல்
துயரமும் துக்கமும் உள்ள பிள்ளையே
அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும்
நீ செல்லும் இடமெல்லாம் அதைக் கொண்டு செல்
விலையுயர்ந்த நாமம், ஓ, எவ்வளவு இனிமை!
பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்
விலையுயர்ந்த நாமம், (விலையுயர்ந்த நாமம்)
ஓ, எவ்வளவு இனிமை!
பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்
187இது சிறிது வித்தியாசமானது. நாம் தலை வணங்கி, மிகவும் அமைதியாக ஒரு கரத்தை உயர்த்தி பாடுவோம்.
இயேசுவின் நாமத்திற்கு தலைவணங்கி
அவருடைய கால்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து
நமது யாத்திரை முடிவு பெறும் போது,
பரலோகத்தில் ராஜாதி ராஜாவாக முடிசூட்டுவோம்.
விலையுயர்ந்த நாமம், (விலையுயர்ந்த நாமம்
ஓ, எவ்வளவு இனிமை! (ஓ, எவ்வளவு இனிமை)
பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்
விலையுயர்ந்த நாமம் (ஆம் விலையுயர்ந்த நாமம்)
ஓ, எவ்வளவு இனிமை! (ஓ, எவ்வளவு இனிமை)
பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்
நாம் தொடர்ந்து தலை வணங்கினவர்களாய், இதை பாடுவோம் (சகோ. பிரன்ஹாம், இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் என்னும் பாடலை மெளனமாக இசைக்கிறார் - ஆசி).